தமிழக அரசு தங்களது நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்ற தவறியதால் அதிருப்தியடைந்த தமிழ்நாடு வருவாய்த்துறை அதிகாரிகள் சங்கம் நவம்பர் 26 முதல் பணிகளை புறக்கணிக்கவும், உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடவும் உள்ளதாக அறிவித்துள்ளது.
தங்களது கோரிக்கைகளை நிவர்த்தி செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி கடந்த ஆண்டு மே மாதத்தில் ஏற்கனவே ஒரு போராட்டத்தை நடத்தியதாக சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, மூன்று அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தனர்.
இருப்பினும் பணி விதிகளில் இளநிலை மற்றும் மூத்த வருவாய் ஆய்வாளர்களின் பெயர்களில் மாற்றங்களை அறிவிக்க வேண்டும் என்ற கோர்ரிக்கை நிறைவேற்றவில்லை என தெரிவித்தனர்.
சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.சங்கரலிங்கம், மாநிலத் தலைவர் எம்.பி.முருகய்யன் ஆகியோர் கையெழுத்திட்ட அறிக்கையில், "இந்த குறிப்பிட்ட கோரிக்கை அரசாங்கத்திற்கு எந்த நிதிச் சுமையும் சுமத்தவில்லை, இருப்பினும் அது நிறைவேற்றப்படாமல் உள்ளது" என்று சங்கத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 2021 முதல் அலுவலக உதவியாளர் பதவிகளை நிரப்புமாறு அவர்கள் கோரி வருவதையும் சங்கம் எடுத்துரைத்தது. மேலும், முதுநிலை வருவாய் ஆய்வாளர் பதவிகளுக்கான பதவி உயர்வு கடந்த இரண்டு ஆண்டுகளாக முடங்கி கிடக்கிறது.
நகர்ப்புற நில வரி வசூல் போன்ற பொறுப்புகளை மாற்றுவதன் மூலம் முக்கிய பதவிகளை அகற்ற நிதித் துறை முயற்சிப்பதாக சங்கம் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கைகளை நிறுத்த முடிவு செய்த போதிலும், சில அதிகாரிகள் அவற்றை செயல்படுத்த முயற்சிப்பதாகக் கூறப்படுகிறது, இது ஊழியர்களிடையே பரவலான அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பிரச்சினைகளின்படி, நவம்பர் 26 முதல் போராட்டம் நடத்த சங்கம் திட்டமிட்டுள்ளதாக அறிவித்தது, இது பல்வேறு ஆவணங்களைப் பெறுவதன் அடிப்படையில் பொதுமக்களை பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“