கலைஞர் மகளிர் உரிமைத் தொகை; மேல்முறையீடு செய்வது எங்கே? எப்படி?

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் நிராகரிக்கப்பட்டால் தகுதி வாய்ந்த நபர்கள் குறுஞ்செய்தி பெறப்பட்ட 30 நாட்களில் இ- சேவை மையம் மூலம் வருவாய் கோட்டாசியரிடம் மேல்முறையீடு செய்யலாம்.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் நிராகரிக்கப்பட்டால் தகுதி வாய்ந்த நபர்கள் குறுஞ்செய்தி பெறப்பட்ட 30 நாட்களில் இ- சேவை மையம் மூலம் வருவாய் கோட்டாசியரிடம் மேல்முறையீடு செய்யலாம்.

author-image
WebDesk
New Update
The ration shop workers union listed problems with the Rs 1000 scheme

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் நாளை (செப்.15) அண்ணா பிறந்த நாள் அன்று தொடங்கப்பட உள்ளது.  காஞ்சிபுரத்தில் முதல்வர் ஸ்டாலின் திட்டதை தொடங்கி வைக்கிறார். இதற்கான பணிகள் நிறைவடைந்த நிலையில் தகுதி வாய்ந்த நபர்களின் விண்ணப்பங்கள் சரி பார்க்கப்பட்டு அவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பபட்டு பணம் அனுப்பபடும். பயனாளிகளின் வங்கி கணக்கிற்கு பணம் நேரடியாக செலுத்தப்பட உள்ளது. 

Advertisment

இந்நிலையில் அரசு தெரிவித்தபடி திட்டத்தில் பயனாளியாக தகுதி பெற்றும் நிராகரிக்கப்பட்டதாக குறுஞ்செய்தி அனுப்பபட்டால் அவர்கள்  வருவாய் கோட்டாசியரிடம் மேல்முறையீடு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து அரசு வெளியிட்ட அறிக்கையில்,  கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் பெறப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் அரசிடம் உள்ள பல்வேறு தகவல் தரவு தளங்களில் உள்ள தகவல்களுடன் ஒப்பிட்டு சரிபார்க்கப்பட்டும் மற்றும் அரசு அலுவலர்களால் நேரடி கள ஆய்வுகளின் மூலம் சரிபார்க்கப்பட்டும், திட்ட விதிமுறைகளைப் பூர்த்தி செய்த 1.065 கோடி மகளிர் பயனாளிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

எவ்வாறு மேல்முறையீடு செய்வது? 

Advertisment
Advertisements

கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்பதார்களின் தகுதிகள் சரிபார்க்கப்பட்டு, அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளைப் பூர்த்தி செய்யாத விண்ணப்பங்களும், தகுதியின்மைக்கு உள்ளான விண்ணப்பங்கள் ஏற்கப்படவில்லை.

விண்ணப்பதாரர்களின் விண்ணப்ப முடிவு நிலை குறித்த குறுஞ்செய்தி விண்ணப்பதார்களின் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணுக்கு 18.09.2023 முதல் அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு ஏற்கப்படாத விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடு செய்ய விரும்பினால், குறுஞ்செய்தி பெறப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் இ-சேவை மையம் வழியாக வருவாய் கோட்டாட்சியருக்கு மேல்முறையீடு செய்யலாம். மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் 30 நாட்களுக்குள் தீர்வு செய்யப்படும்.

வருவாய் கோட்டாட்சியர் மேல்முறையீட்டு அலுவலராகச் செயல்படுவார். இணையதளம் மூலம் செய்யப்படும் மேல்முறையீடுகள், அரசு தகவல் தரவு தளங்களில் உள்ள தகவல்களுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டு, வருவாய் கோட்டாட்சியருக்கு அனுப்பி வைக்கப்படும். 

வருவாய் கோட்டாட்சியர் மேல்முறையீட்டு விண்ணப்பங்களைத் தீர்வு செய்ய கள ஆய்வு தேவைப்படும் நேர்வுகளில், சம்பந்தப்பட்ட சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர்கள் வழி, கள ஆய்வு அறிக்கையினைப் பெற்று விசாரணை செய்வார். இந்த மேல்முறையீடு நடைமுறைகள் அனைத்தும் இணையதளம் வழியாக மட்டுமே செய்யப்படும்.

புகார்கள்

 வருவாய் கோட்டாட்சியர் பயனாளிகளின் தகுதி மற்றும் தகுதியின்மைகள் தொடர்பாக தனி நபர்களின் மூலம் வரப்பெறும் புகார்கள் குறித்து விசாரணை அலுவலராகச் செயல்படுவார். இணையதளம் வழியாகப் பெறப்படும் புகார்கள் மேல் முறையீட்டு மனுக்களுக்கு பின்பற்றப்படும் நடைமுறைகளைப் பின்பற்றி விசாரிக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: