கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் முடிந்த நிலையில் அடுத்த கட்ட பணிகள் தொடங்க உள்ளன.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. செப்டம்பர் 15-ம் தேதி முதல் திட்டம் தொடங்கப்படுகிறது. முன்னதாக கடந்த மாதம் இதற்கான விண்ணப்பம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது. சிறப்பு முகாம்கள் மூலம் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 3 கட்டங்களாக முகாம் நடத்தப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
3-ம் கட்ட விண்ணப்ப பதிவு ஆகஸ்ட் 18-ம் முதல் நேற்று (ஆகஸ்ட் 20) வரை நடைபெற்றது. நேற்றுடன் இத்திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் முடிவடைந்தது. தமிழ்நாட்டில் மொத்தம் 1 கோடி மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. இதற்காக ரூ. 7,000 கோடி நிதி தமிழ்நாடு அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் விண்ணப்ப பதிவு முடிந்துள்ள நிலையில், அடுத்த கட்ட பணிகள் தொடங்க உள்ளன.
பயனாளர்களின் வீடுகளுக்கே சென்று வருவாய்துறை அதிகாரிகள், நியமிக்கப்பட்ட அதிகாரிகள் கள ஆய்வு செய்ய உள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்கு விண்ணப்பித்தவர்களில் தகுதி வாய்ந்தவர்களை அடையாளம் காண பயனாளிகளை அடையாளம் காண வருவாய்துறை அதிகாரிகள், இத்திட்டத்திற்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள், தன்னார்வலர்கள் நேரடியாக கள ஆய்வு செய்ய உள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“