Tamilnadu News Update : அதிமுகவில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்தததில் இருந்து கட்சியில் நாள்தோறும் பல அதிரடி திருப்பங்கள் அரங்கேறி வருவது மறுக்க முடியாத உண்மை. இதில் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுக்கு அதிமுகவுக்கு நடக்கும் அறிக்கை போர்கள் நாள் தோறும் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில, சசிகலா மீது அதிமுக தரப்பில் அளிக்கப்பட்ட புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து எழுத்துப்பூர்வமாக அறிக்கை அளிக்க மாம்பலம் காவல் நிலையத்திற்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் அறிவித்துள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் சிறை செல்வதற்கு முன்னாள் அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலா அதன்பின் சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் சிறையில் இருந்த காலகட்டத்தில் அதிமுகவில் புதிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி பொதுச்செயலாளர் பதவி நீக்கப்பட்டு ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என இரு புதிய பதவிகள் உருவாக்கப்பட்டது.
இதில் ஒருங்கிணைப்பாளராக ஒ.பன்னீர்செல்வம், மற்றும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமி நியமிக்கப்பட்டதை தேர்தல் ஆணையமும் ஏற்றுக்கொண்டது. ஆனால் தண்டனை காலம் முடிந்து விடுதலையான சசிகலா அதிமுகவில் எடுக்கப்பட்ட தீர்மானம் செல்லாது என்றும் தான் அதிமுகவின் பொதுச்செயலாளர் என்றும் கூறி வருகிறார். இது குறித்து அதிமுக சார்பில் பல்வேறு அறிக்கைகள் வெளியிடப்பட்ட நிலையில் சசிகலா மீது அதிமுக சார்பில் புகார்கள் அளிக்கப்பட்டது.
மேலும் அதிமுக கட்சிக்கு உரிமை கோரிய சசிகலாவின் மனு நிராகரிக்கப்பட்டது. இதனிடையே கடந்த சட்டசபை தேர்தலின்போது தான் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்த சசிகலா, தற்போது மீண்டும் அதிமுகவை கைப்பற்றும் முனைப்பில் காய் நகர்த்தி வருகிறார். இதற்கு முன்னோட்டமாக கட்சியின் நிர்வாகிகள் பலருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். அவரின் இந்த முயற்சிக்கு அதிமுக தரப்பில் கடுமையான கண்டனங்கள் பதிவாகி வருகிறது.
இந்நிலையில், சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அதிமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையம் சசிகலாவின் மனுவை நிராகரித்த பின்னரும் சசிகலா தொடர்ந்து அதிமுகவின் பொதுச்செயலாளர் என்று கூறி வருவது தொடர்பாக அளித்த புகாரி்ன் பேரில் நடவடிக்கை எடுக்க மாம்பலம் காவல்நிலைய போலீசாருக்கு அறிவுறுத்துமாறு கோரிக்கை எழுப்பப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபத, அதிமுக சார்பில் மாம்பலம் காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைள் குறித்து வரும் 20-ந் தேதி எழுத்துப்பூர்வாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “