Advertisment

வளைக்கப்பட்ட வலதுகரம்... எடப்பாடியில் ஸ்டாலின் கொடுத்த ஷாக்!

Admk Executive Joined DMK : அதிமுகவில் சேலம் மாவட்ட விவசாய பிரிவு செயலாளராக இருந்த செல்லதுரை தற்போது திமுகவில் இணைந்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
வளைக்கப்பட்ட வலதுகரம்... எடப்பாடியில் ஸ்டாலின் கொடுத்த ஷாக்!

Admk Salem Agriculture Wing Secretary Chelladurai Joined DMK : அதிமுகவில் இருந்து வெளியேறும் முன்னாள் நிர்வாகிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்களுக்கு திமுக இடமளித்து வரும் நிலையில், அதிமுவில் இருந்த பிரபலம் ஒருவர் திமுகவில் இணைந்தது இரு முன்னணி கட்சிகளின் புறுவத்தை உயர்த்தியுள்ளது.

Advertisment

சமீப காலமாக தமிழகத்தில் அரசியல் மாறுபாடுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், முன்னாள் ஆளும்கட்சியான அதிமுக, மற்றும் அமமுகவில் இருந்து நிர்வாகிகள் பலரும் திமுகவில் இணைந்து வருகின்றனர். இதில் கடந்த வாரம் முன்னாள் அதிமுக அமைச்சரும்,அமமுகவின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் நம்பிக்கைக்கு உரியவரான பழனியப்படன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில்  இணைந்தார். இவருக்கு முன்பு ஏற்கனவே முன்னாள் அமைச்சர்கள் இருவர் அம்முகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர்.   

அந்த வகையில், தற்போது புதிய திருப்பமாக முன்னாள் முதல்வர் எடப்பா பழனிச்சாமியின் சொந்த மாவட்டமான சேலம் மாவட்டத்தில், புறநகர் விவசாய பிரிவு செயலாளர் சி.செல்லாதுரை, அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தது. அதிமுக வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை, சேலம் அதிமுக பிரிவில் ஒரு வல்லமைமிக்க சக்தியாகக் கருதப்பட்ட செல்லதுறை ஆளும் திமுகவிடம் இருந்து விலகுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து திமுகவில் இணைந்த செல்லதுரை மிக்பெரிய பரிசு என்று திமுக வட்டாரங்கள் கூறி வரும் நிலையில்,  அவர் திமுகவில் இணைய முக்கிய காரணமாக இருந்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அனைவரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின்  தூரத்து உறவினரான செல்லதுரை திமுகவில் இணைந்திருப்பது, சமீபத்தில் அமமுகவில் இருந்து திமுகவில் இணைந்த  முன்னாள் அமைச்சர்  பி பழனியப்பன் போன்று வலுவான ஒரு முடிவாக இருக்கும். இதில் கடந்த  திங்கள்கிழமை காலை கூட செல்லதுரைய தக்கவைத்துக்கொள்ளும் முயற்சியில், முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும், ஆனால், அமைச்சர் செந்தில் பாலாஜி முந்திக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் செல்லதுரை திமுகவில் இணைந்தது தொடர்பான புகைப்படத்தை அமைச்சர் செந்தில் பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கொரோனா தொற்று காலத்தில், அமைச்சர் செந்தில் பாலாஜியை சேலத்தில் கோவிட் நிர்வாகத்தின் பொறுப்பில் நியமிக்கப்பட்டபோது, ​​பழனிசாமியை சீர்குலைப்பது அவருக்கு வழங்கப்பட்ட கூடுதல் பணி என்றும், தற்போது இத்திட்டம் நிறைவேறியுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும்  திமுகவின் ஆதாரங்கள் நம்பப்பட வேண்டுமானால், முன்னாள் அதிமுக அமைச்சர் தோப்பு வெங்கடச்சலம் திமுகவில் சேரலாம். கடந்த சட்டமன்ற தேர்தலில் சுயேசையாக போட்டியிட்ட வெங்கடச்சலம் அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டார். தற்போது அமைச்சர் செந்தில்-பாலாஜி  தோப்பு வெங்கடச்சலத்துடன் தொடர்பு கொண்டிருந்ததாக அண்ணா அரிவாளையத்திலிருந்து வெளிவந்த தகவல் கூறுகின்றன.

"உள்ளாட்சி அமைப்பு தேர்தல்களில் இத்தகைய முக்கிய நபர்கள் கட்சிக்கு மதிப்புமிக்கவர்களாக இருக்க முடியும். குடிமைத் தேர்தல்களில் எடப்பாடி அல்லது ஈரோடு மண்டலங்களில் ஒரு ஆச்சரியத்தை ஏற்படுத்த வேண்டும். மேலும், சட்டமன்றத் தேர்தலில் திமுக மோசமான தோல்வியை சந்தித்த மேற்கு மண்டலத்தில் கட்சியை வலுப்படுத்த இது உதவும். கோயம்புத்தூர் அடுத்த பெரிய இலக்காக இருக்கக்கூடும் ”என்று ஒரு திமுக மாவட்ட செயலாளர் கூறியுள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Aiadmk Dmk Vs Aiadmk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment