நாட்டு வெடிகுண்டு தயாரிக்கப்பட்டு விற்பனை செய்வது எதற்காக? தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். நேற்று இரவு நாட்டு வெடிகுண்டுகளை கைப்பற்றிய போலீசார் பாகுபலிக்கு பாராட்டு மழை சமூக வலைத்தளங்களை பரவி வருகிறது
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே உள்ள தென்முடியனூரில் வாலிபர் ஒருவர் தனது வீட்டின் முன் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டுவீட்டிற்கு தூங்க சென்றவர். விடியற்காலை எழுந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து தண்டராம்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
மேலும் காணாமல் போன மோட்டார் சைக்கிளில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளது என்று கூறியதை தொடர்ந்து அந்த மோட்டார் சைக்கிள் எங்கு உள்ளது. என கண்டறியும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது காணாமல்போன மோட்டார் சைக்கிள் கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள மணலூர் காப்புக்காடு மலை அடிவாரத்தில் இருப்பதை கருவிகாட்டியது.
இதனையடுத்து போலீசார் மற்றும் அப்பகுதி சேர்ந்த வாலிபருடன் சேர்ந்து மோட்டார் சைக்கிளை வனப்பகுதியில் தேடினர். அப்போது பாறையின் அடிவாரப் பகுதியில் திருடு போன மோட்டார் சைக்கிள் மற்றும் மேலும் இரண்டு மோட்டார் சைக்கிள் இருந்ததை போலீசார் கண்டறிந்தனர். மேலும் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்ட போது மலைப்பகுதியில் ஒரு பையில் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்கு பயன்படுத்திய நாட்டு வெடி குண்டுகள் வைத்திருந்தது தெரிவந்தது.
இதனை கண்ட போலீசார் மேலும் மோட்டார் சைக்கிள் திருடியவர்கள் வனப்பகுதியில் பதுங்கி இருப்பார்களா? என தீவிர தேடுதலில் ஈடுபட்டனர். மேலும் போலீசார் தேடுவதை அறிந்த 3 வாலிபர்கள் அப்பகுதியில் இருந்து தப்பி ஓடியுள்ளனர். இதனையடுத்து அவர்கள் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் மேலும் அவர்கள் மோட்டார் சைக்கிள் திருடியவர்களா ? அல்லது வேட்டையாடுவதற்கு வந்தவர்களா? என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இப்பகுதிகளில் அதிக அளவில் வணப்பகுதிகள் மற்றும் மலை குன்றுகள் இருப்பதால் மான் முயல், காட்டுப்பன்றி உள்ளிட்ட விலங்குகளை வேட்டையாடுவதற்கு பயன்படுத்தப்படுகிறார்களா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருடு போன மோட்டார் சைக்கிளை தேடி சென்ற போலீசாருக்கு அப்பகுதியில் நாட்டு வெடிகுண்டு கிடந்ததைக் கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இதுகுறித்து தானிப்பாடி போலீசார் மோட்டார் சைக்கிள் மற்றும் நாட்டு வெடிகுண்டை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
இந்த விசாரணையில், நாட்டு வெடிகுண்டுகள் தயாரித்து யார் யாருக்கெல்லாம் விற்பனை செய்துள்ளனர் எதற்காக விற்பனை செய்துள்ளனர். எத்தனை பைக்குகள் திருடி விற்பனை செய்து உள்ளனர் என போலீசார் தீவிரமாக விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் தேடிச் சென்றது ஒரே ஒரு பைக் மட்டும் தான். ஆனால் அங்கு மூன்றுக்கும் மேற்பட்ட திருட்டு பைக் நாட்டு வெடிகுண்டுகள் இருந்ததைப் பார்த்து போலீசார் தீவிர தேடுதல் கட்டில் ஈடுபட்டுள்ளனர்.