சிறையில் தாக்கப்பட்ட சவுக்கு சங்கர்... வழக்கறிஞர் கூறிய அதிர்ச்சி தகவல் : சிகிச்சை அளிக்க கோரி மனு

சவுக்கு சங்கரை ஒரு அறையில் அடைத்து கண்களைக் கட்டி பத்துக்கும் மேற்பட்ட வார்டன்கள் பிளாஸ்டிக் பைப்களை துணியால் கட்டி அடித்ததில், அவருக்கு வலது கையில் முறிவு ஏற்பட்டுள்ளது.

சவுக்கு சங்கரை ஒரு அறையில் அடைத்து கண்களைக் கட்டி பத்துக்கும் மேற்பட்ட வார்டன்கள் பிளாஸ்டிக் பைப்களை துணியால் கட்டி அடித்ததில், அவருக்கு வலது கையில் முறிவு ஏற்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Savukku Shan

சவுக்கு சங்கர் வழக்கறிஞர்

Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00

கோவை மத்திய சிறையில் சவுக்கு சங்கரை சிறையில் மெண்டல் பிளாக்கில் போட்டுள்ளார்கள் என்றும் அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர் கூறியுள்ளார்.

Advertisment

பிரபல அரசியல் விமர்சகர்சவுக்கு சங்கரை கோவை சைபர் கிரைம் காவல்துறையினர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தேனியில் கைது செய்து அழைத்து வந்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறுகையில்,

இன்று இந்த வழக்கு சம்பந்தமாக சந்திப்பதற்காக சவுக்கு சங்கரை சிறையில் சென்று பார்த்தபோது, அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது தெரியவந்தது.சவுக்கு சங்கரை ஒரு அறையில் அடைத்து கண்களைக் கட்டி பத்துக்கும் மேற்பட்ட வார்டன்கள் பிளாஸ்டிக் பைப்களை துணியால் கட்டி அடித்ததில், அவருக்கு வலது கையில் முறிவு ஏற்பட்டுள்ளது.

எலும்பு முறிவு ஏற்பட்ட கைக்கு இதுவரை எக்ஸ்ரே உள்ளிட்ட எந்த ஒரு சோதனைகளும் எடுக்கப்படவில்லை. அவருடைய விருப்பத்திற்கு மாறாக வலி நிவாரணி மாத்திரைகளை மட்டுமே உட்கொள்ள சொல்கிறார்கள். அவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த அனுமதி அளிக்க வேண்டும், அவரை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்க்க அனுமதிக்க வேண்டும் என நீதிபதியிடம் மனு அளித்துள்ளோம்.

Advertisment
Advertisements

சவுக்கு சங்கர் அளித்த பேட்டி சரியா தவறா என்பதை நீதிமன்றம் தான் முடிவு செய்'ய வேண்டும் மனித உரிமை மீறல்கள் அதிகமாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு தற்போது காவல்துறை மாநிலமாக மாறி வருகிறது. போலீசார் நினைத்தால் யாரை எது வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலைக்குச் சென்று சென்றுகொண்டிருக்கிறது. யார் ஒருவர் இந்த அரசுக்கு எதிராகவும் அரசின் அமைப்பிற்கு எதிராகவும் பேசினால் அவருடைய மனித உரிமைகள் மீறப்படுகிறது.

சிறையில் இவருக்கு நடக்கும் கொடுமைகளை சாட்சியாக கூறுவதற்கு சக கைதிகள் தயாராக இருக்கிறார்கள் இது குறித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருக்கிறோம்.தற்போது கோவை சிறை கண்காணிப்பாளராக இருக்கும் செந்தில்குமார் கடலூர் சிறையில் கண்காணிப்பாளராக இருந்த நேரத்தில் அவர் மீது வழக்குத் தொடர்ந்தது சவுக்கு சங்கர் தான் என்ற நிலையில் வேண்டுமென்றே கோவையில் வழக்கு பதிவு செய்து செந்தில்குமாரிடம் சவுக்கு சங்கரை விட வேண்டும் செந்தில்குமார் சவுக்கு சங்கரை கொடுமைப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்திலேயே இதனை செய்திருக்கலாம் என்று சவுக்கு சங்கர் என்றுகிறார்.

மேலும் கண்டிப்பாக சவுக்கு சங்கருக்கு கோவை சிறையில் உயிருக்கு ஆபத்து இருக்கிறது. சவுக்கு சங்கர் சிறையில் மெண்டல் பிளாக் என்று சொல்லக்கூடிய இடத்தில் அடைத்து வைத்திருக்கிறார்கள். எனவே இதுகுறித்து உயர் நீதிமன்றத்தை தாங்கள் நாட இருப்பதாக இவ்வாறு சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்

பி.ரஹ்மான் கோவை மாவட்டம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Savukku Shankar

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: