தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள 16 வழக்குகளையும் ரத்து செய்யுமாறு, சவுக்கு சங்கர் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இந்த வழக்கில் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நீதிபதிகள் லஞ்சம் வாங்கிக்கொண்டு தீர்ப்பு வழங்குவதாக கூட சவுக்கு சங்கர் கூறியிருக்கார் என்று கூறியுள்ளனர்.
மகளிர் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியதாக சவுக்கு சங்கர் மீது, கோவையில் பெண் காவலர் ஒருவர் புகார் அளிதிருந்தார். இந்த வழக்கு தொடர்பான தேனியில் வைத்து சவுக்கு சங்கர் கைது செய்ய்பபட்ட நிலையில், திருச்சி, பெரம்பலூர், மதுரை, விழுப்புரம், தாம்பரம் சேலம், உள்ளிட்ட 16 மாவட்டங்களில் சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்று வரும நிலையில், தன்மீது பதிவு செய்யப்பட்டுள்ள 16 வழக்குகளையும் ரத்து செய்ய கோரி, உச்சநீதிமன்றத்தில், சவுக்கு சங்கர் சார்பில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை கடந்த வாரம் விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை, சவக்கு சங்கருக்கு எதிராக 16 வழக்குகளையும் விசாரிக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.
இதனிடையே கடந்த வாரம், சவுக்கு சங்கர் தாக்கல் செய்த ரிட் மனுவை ரத்து செய்ய கோரி தமிழக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குகள் குறித்து விசாரணை, கடந்த 28-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், நேரமின்மை காரணமாக 30-ந் தேதி விசாரணைக்கு வரும் என்று உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறியிருந்தார். அதன்படி, இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
இந்த விசாரணையில், தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், நீதிபதிகளுக்கு எதிராக கூட சவுக்கு சங்கர் அவதூறு கருத்துக்களை கூறியுள்ளார். நீதிபதிகள் லஞ்சம் வாங்கிக்கொண்டு தீர்ப்பு சொல்வதாக கூட கூறியிருக்கிறார். இந்த தொடர்பான சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை நடத்தி இருக்கிறது என்று வாதிட்டார். இதனையடுத்து ஒரு பேட்டிக்காக, சவுக்கு சங்கர் மீது 16 வழக்கு பதியப்பட்டுள்ளதாக என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.
இந்த விவகாரத்திற்காகத்தான் அத்தனை வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சவுக்கு சங்கர் தரப்பில் கூறப்பட்டது. மேலும் இந்தியாவில் பதியப்பட்டுள்ள குண்டாஸ் வழக்குகளில் 51 சதவீதம், தமிழகத்தில் பதிவாகியுள்ளதாகவும், தமிழக அரசு குண்டாஸ் சட்டத்தை தவறாக பயன்படுத்துவதாகவும், தனிமை சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் சவுக்கு சங்கர் தரப்பில் கூறப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இந்த 16 வழக்குகளையும் ஏன் ஒரே வழக்காக விசாரக்க கூடாது என்று தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பிய நீதிபதி, இது குறித்து பதில் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டார். இதேபோல் 2-வது குண்டாஸ் சட்டம் போடப்பட்டதை ரத்து செய்ய கோரி, சவுக்கு சங்கரின் தாயார் தாக்கல் செய்த மனுவுக்கும் பதில் அளிக்க உத்தரவிட்ட நீதிபதி, இந்த வழக்கை செப்டம்பர் 2-ந் தேதிக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“