Advertisment

சீமான் மீது வழக்குப் பதிவு; காவல்துறைக்கு எஸ்.சி, எஸ்.டி ஆணையம் உத்தரவு

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு மாநில எஸ்.சி, எஸ்.டி ஆணையம் உத்தரவு; காரணம் இதுதான்!

author-image
WebDesk
New Update
NTK Leader seeman on Spirituality lecture in Chennai Govt school controversy Tamil News

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையரகத்திற்கு மாநில எஸ்.சி/ எஸ்.டி ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

விக்கிரவாண்டி இடைத் தேர்தல் பரப்புரையின் போது, முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி குறித்து அவதூறாகப் பேசியதாக நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சாட்டை துரைமுருகன் குற்றாலத்தில் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இதனையடுத்து, குறிப்பிட்ட சமூகத்தின் பெயரை வசைச் சொல்லாக பயன்படுத்துவதற்கு தடைவிதித்து தமிழ்நாடு எஸ்.சி, எஸ்.டி ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், சண்டாளன் என்ற சொல் அரசியல் மேடைகளில் வசைபாட பயன்படுத்தப்படுகிறது. ஆகவே, இழிவுபடுத்தும் நோக்கத்திலோ, நகைச்சுவையாகவோ அரசியல் மேடைகளிலோ சண்டாளர் என்ற சொல்லைப் பயன்படுத்தக் கூடாது. சண்டாளன் என்ற சொல்லை பயன்படுத்துவோர் மீது எஸ்.சி – எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தது.

ஆனால், சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டதை விமர்சனம் செய்த சீமான், “கருணாநிதி குறித்த பாடலை பாடியதற்காக கைது செய்திருக்கிறீர்கள். அந்தப் பாடலை எழுதியது வேறு யாரோ.. அவர்கள் எழுதியதையே நாங்கள் பாடினோம். பாடலை எழுதியவரை கைது செய்யவில்லை. நானும் அதே வார்த்தையை கூறுகிறேன். முடிந்தால் என்னை கைது செய்து பாருங்கள்" என்று கூறி, அந்தப் பாடலை பாடினார்.

இதனையடுத்து, சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க நிர்வாகிகள் எஸ்.பி அலுவலகம் உள்பட பல இடங்களில் புகார்கள் அளித்தனர். நீதிமன்றங்களிலும் வழக்கு தொடர்ந்தனர். அந்த வகையில் தி.மு.க நிர்வாகி அஜேஷ் என்பவர் சீமான் மீது நடவடிக்கை கோரி பட்டாபிராம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், இதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து, மாநில எஸ்.சி, எஸ்.டி ஆணையத்தை நாடினார்.

இந்த நிலையில் குறிப்பிட்ட சமூகத்தின் பெயரை வசைச் சொல்லாக பயன்படுத்தியதற்காக சீமான் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட பட்டாபிராம் காவல் நிலையத்திற்கு எஸ்.சி, எஸ்.டி ஆணையம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனையடுத்து, சீமான் மீது விரைவில் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamilnadu Police Seeman
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment