ஆசிரியர்களுக்கு புதிய உத்தரவு: மீறினால் துறை ரீதியாக நடவடிக்கை : பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை

School Education Department Announced : தமிழகத்தில் ஆசிரியர்கள் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்த கொரோனா தொற்று பாதிப்பு தற்போது வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் 30 ஆயிரத்திற்கு மேலாக உறுதி செய்யப்பட்டு வந்த தினசரி பாதிப்பு எண்ணிக்கை தற்போது 20 ஆயிரத்திற்கு கீழ் சரிந்துள்ளது. தமிழக அரசின் தீவிர தடுப்பு நடவடிக்கையால் கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், வைரஸ் தாக்குதலை கருத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கு காலத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தும் வகையில் ஆசிரியர்கள் வீட்டில் இருந்த படி மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்தி வருகின்றனர். இதில் தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவும், அரசுப்பள்ளி மாணவர்கள் கல்வித்தொலைக்காட்சி மூலமாகவும் வீட்டில் இருந்தபடியே கல்வி கற்று வருகின்றனர். மேலும் மாணவர்களின் சந்தேகத்தை போக்க ஆசிரியர்களுக்கு போன் செய்து கேட்டும் அளவுக்கு வசதி செய்யப்பட்டுள்ளது.

ஆனால் ஆசிரியர்கள் வீட்டில் இருந்தபடி வகுப்புகள் நடத்துவதால், பெரும்பாலான பணிகள் அவர்களுக்கு இல்லாமல் இருப்பதாக கூறப்படுகிறது.  இந்நிலையில், கொரோனாவிற்கு எதிரான தடுப்பு பணிகளில் பல்வேறு தரப்பினரும் முன்கள பணியாளர்களாக செயல்பட்டு வரும் நிலையில், ஆசிரியர்களும் இந்த பணியில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டு, கொரோனா பரவலை தடுக்கும் வகையில் சுகாதாரத்துறை எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு, பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வி துறையினரை பயன்படுத்திக் கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கல்வி அலுவர்கள் அனைவரும், கொரோனா கட்டுப்பாட்டு மையங்கள், கொரோனா நோயாளிகளின் தகவல் தொகுப்பு சேகரிக்கும் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிப்பு வெளியானது. ஆனால், இந்த பணிகளை மேற்கொள்ள ஆசிரியர்கள், அலுவலர்கள் செய்ய மறுப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.

இதனைத் தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்ட மற்றொரு அறிக்கையில், கொரோனா பணிக்கு செல்ல மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அறிவுறுத்தினால் ஆசிரியர்கள், மற்றும் அலுவலர்கள் அதற்கு மறுப்பு தெரிவிக்காமல் அந்த உத்தரவை தவறாமல் பின்பற்ற வேண்டும். இந்த உத்தரவை பின்பற்றாத நபர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. பள்ளிக்கல்வித்துறையின் இந்த அறிவிப்பினால் ஆசிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamilnadu school education department announced teachers covid work

Next Story
அதிமுக செயல்பாடுகளில் ஓ.பி.எஸ்-ஐ கலந்து ஆலோசிக்க வில்லையா? நெல்லையில் ஷாக் போஸ்டர்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com