தமிழகம் முழுவதும் 20 மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் அந்நிலையை ஒத்த அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, திருச்சி மாவட்டத்தின் முதன்மை கல்வி அலுவலராக இருந்த பாலமுரளி, திருப்பூர் மாவட்டத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்குப்பதிலாக, தஞ்சாவூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலராக இருந்த சிவக்குமார், திருச்சி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை, பள்ளிக்கல்வித்துறை அரசு முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா பிறப்பித்துள்ளார்.
இதையும் படியுங்கள்: 2 மாவட்ட ரேஷன் கடைகளில் இன்று முதல் ராகி சப்ளை: இதர மாவட்டங்களில் எப்போது?
அவர் பிறப்பித்த உத்தரவின் முழு விபரம் வருமாறு; ஆசிரியர் தேர்வு வாரியத்தின் துணை இயக்குநர் ஆக திருவளர்செல்வியும், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் துணை இயக்குநராக அய்யண்ணனும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் முறையே திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களாக இருந்தவர்கள்.
அதேபோல விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக இருந்த ஞான கௌரி, தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக இருந்த பூபதி, தொடக்கக் கல்வி இயக்ககத்தின் துணை இயக்குநராக நிர்வாகப் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர்களைத் தொடர்ந்து பெரம்பலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக இருந்த அறிவழகன், விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். திருச்சி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலராக இருந்த பாலமுரளி திருப்பூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். தஞ்சை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக இருந்த சிவகுமார், திருச்சிராப்பள்ளி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராகவும், கன்னியாகுமரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக இருந்த புகழேந்தி, திருவாரூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், கன்னியாகுமரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக முருகனும், பெரம்பலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக மணிவண்ணனும், சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக கபீரும், திருவள்ளூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக சரஸ்வதியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல், விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக ராமனும், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் துணை இயக்குநராக ஆறுமுகமும், தென்காசி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக முத்தையாவும், தஞ்சாவூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராகப் பாலதண்டாயுதபாணியும்; புதுக்கோட்டை மாவட்டம், முதன்மைக் கல்வி அலுவலராக மஞ்சுளாவும், கோயம்புத்தூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக சுமதியும், ஈரோடு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக குழந்தை ராஜனும், தொடக்கக் கல்வி இயக்கத்தில் துணை இயக்குநராக சட்டப் பதவியில் திருநாவுக்கரசும் நியமிக்கப்பட்டுள்ளனர்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களைத் தொடர்ந்து பெரம்பலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக இருந்த அறிவழகன், விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராகவும், திருச்சி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் பாலமுரளி திருப்பூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக இன்று பணியிடமாறுதலாகி திருப்பூர்க்கு செல்லும் முதன்மைக்கல்வி அலுவலர் பாலமுரளி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமாரை சந்தித்து வாழ்த்துபெற்றார். அவருக்கு மாவட்ட ஆட்சியர் சால்வை அணிவித்து வாழ்த்துக்களை கூறினார்.
க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil