Advertisment

தமிழகத்தில் மேற்படிப்பு செல்வோரின் சதவீதம் குறைகிறதா? புள்ளிவிவர முரண்பாடு

கல்வித்துறை தொடர்பாக சட்டப்பேரவையில் தமிழக கல்வி அமைச்சார் கொடுத்த தரவுகள் மத்திய அரசு வெளியிட்ட புள்ளி விவரங்களோடு ஒத்துப்போகவில்லை.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
பிசா தேர்வு , Education News, pisa test, chandigarh government schools, Programme for International Student Assessment test, oecd,

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் இடைநிற்றல் தொடர்பாக எழுப்பிய கேள்விகளுக்கு தமிழக அரசு பதிலளித்தது. அதில், தமிழகத்தில், 2017- 18 ஆண்டு புள்ளிவிவரங்கள் அடிப்படையில் தொடக்க கல்வி முடித்த அனைத்து மாணவர்களும் உயர் தொடக்க கல்விக்கு செல்கிறார்கள் என்றும், உயர் தொடக்க கல்வி முடித்த 96. 70 சதவீத மாணவர்கள் உயர்நிலைக் கல்விக்கு செல்கிறார்கள் என்றும் (இது முந்தைய ஆண்டைவிட .11 சதவீதம் அதிகம்),  உயர்நிலைக் கல்வி முடித்த 89 சதவீத மாணவர்கள் மேல்நிலைக் கல்விக்கு செல்கிறார்கள் ( இது முந்தைய ஆண்டை விட 1 சதவீதம் அதிகம் ) என்று பதில் கூறியது.

Advertisment

ஆனால், இந்த புள்ளி விவரங்கள் தமிழ்நாடுக் கல்வித்துறை தொடர்பாக 2019ம் ஆண்டு மே மாதம் மத்திய அரசு வெளியிட்ட தரவுகளோடு ஒத்துப் போகவில்லை. பல இடங்களில் முரண் பாடாகவும் உள்ளது.

சமக்ர சிக்ஷா திட்ட ஒப்புதல் வாரியக் கூட்டம் :  தமிழ்நாடு கல்வித்துறை தொடர்பான சமக்ர சிக்ஷா திட்ட ஒப்புதல் வாரியக் கூட்டம் கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்றது.  அந்த கூடத்தின் முடிவில் வெளியிடப்ப ஆவணங்களில் தமிழக கல்வித்துறை தொடர்பான பல தரவுகள் கொடுக்கப்பட்டிருந்தன.

அதில், பத்தி ஐந்தில் மதிப்பீட்டு சிக்கல்கள் என்ற தலைப்பில்" தமிழ்நாட்டில் மேற்படிப்பு செல்வோர்கான தேர்ச்சி விகுதம் பற்றிய குறிப்புகளில், தொடக்க கல்வியில் இருந்து உயர் தொடக்க கல்வி செல்வோருக்கான தேர்ச்சி விகிதம்  2017-18 ஆண்டுகளில் 90.94 சதவீதமாக உள்ளது என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டை விட 7.9 சதவீதம் குறைவாகும். உயர் தொடக்க கல்வி முடித்த  மாணவர்கள் உயர்நிலைக் கல்வி செல்வோருக்கான தேர்ச்சி விகிதம் 2017-18 ஆண்டுகளில் 89.26 சதவீதம் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட  7.5 சதவீதம் குறைவாகும். உயர்நிலைக் கல்வி முடித்த மாணவர்கள் மேல்நிலைக் கல்வி செல்வோருக்கான தேர்ச்சி விகுதம் 2017-18 ஆண்டுகளில் 79.38 சதவீதம் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 3.9 சதவீதம் குறைவாகும்.

கல்வியாளர்கள் மத்தியில் குழப்பம்: கல்வித்துறை தொடர்பான மத்திய, மாநில அரசுகளின் தரவுகள் முரண்பாடாக இருந்தால்  குழப்பத்தை விளைவிக்கும் என்று கல்வியாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். தமிழக அரசு இது குறித்த முழுமையான விளக்கத்தை தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.

சமக்ர சிக்ஷா திட்டம்: மத்திய அரசு பள்ளிக் கல்வியில் சமக்ர சிக்ஷா என்ற ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தைத்  2018-19ம் ஆண்டில் இருந்து செயல்படுத்துகிறது.  முன்பு அமலில் இருந்த அனைவருக்கும் கல்வித் திட்டம் (Sarva Shiksha Abhiyan), ராஷ்ட்ரீய மத்யமிக் சிக்ஷா அபியான் (RMSA), ஆசிரியர் கல்வி (Teacher Education) ஆகியவற்றை உள்ளடக்கி, மழலையர் கல்வி, தொடக்கக் கல்வி, உயர்நிலைக் கல்வி, மேல்நிலைக் கல்வி அனைத்து நிலைகளிலும் தொடர் கல்வி முறைக்கு இத்திட்டம் வழிவகுக்கும்.

Tamilnadu Tamil Nadu School Education Department School Education Department
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment