தமிழகம் முழுவதும் இன்று அனைத்துப் பள்ளிகளும் திறக்கப்பட்டன. கோடை விடுமுறைக்காகத் மூடப்பட்டிருந்த அனைத்துப் பள்ளிகளும் இன்று திறக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் பள்ளிகளில் நடைபெற்ற இறுதி தேர்விற்கு பிறகு, ஏப் 21ம் தேதி முதல் கோடை விடுமுறை தொடங்கியது. பின்னர் விடுமுறை முடிந்து ஜூன் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார். இதையடுத்து இன்று அனைத்துப் பள்ளிகளும் திறப்பட்டது.
அரசு மற்றும் அரசு உதவி பெற்று வரும் புதிய கல்வி ஆண்டிற்கான இலவச பாட புத்தகங்கள், சீருடைகள் அனைத்தும் இன்று வழங்கப்படுகிறது. 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்புகள் வரை மாணவ மாணவிகளுக்குச் சீருடைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், இன்று முதல் புதிய சீருடையில் வரத் தொடங்கியுள்ளனர்.
விடுமுறைக்காக வெளியூர்களுக்குச் சென்றிருந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் என அனைவரும் நேற்றே சொந்த ஊர்களுக்குத் திரும்பினர். இன்று முதல் இயங்கும் பள்ளிகளுக்கு, ஆசிரியர்கள் மாணவர்கள் செல்ல தொடங்கியுள்ளனர்.
தமிழகம் முழுவதும் தொடக்க கல்வி இயக்குநர் எஸ்.கருப்பசாமியின் கீழ் செயல்படும் தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள் ஆகியவற்றுக்குக் கடந்த ஏப்ரல் 20-ந்தேதியில் இருந்தும், பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் ரெ.இளங்கோவனின் கீழ் செயல்படும் உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகளுக்கு ஏப்ரல் 21-ந்தேதியில் இருந்தும் கோடைவிடுமுறை விடப்பட்டது.
கோடைவிடுமுறைக்கு பின் இன்று (வெள்ளிக்கிழமை) அனைத்து அரசுப் பள்ளிகளும் திறக்கப்படுகின்றன. தனியார் பள்ளிகள் அவர்கள் விருப்பம் போல் திறக்கப்படுகின்றன.