சென்னையில் இன்று காலை தனியார் தொலைகாட்சிக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு மர்ம நபர் ஒருவர் தலைமைச் செயலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தனியார் தொலைகாட்சி ஒன்றுக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் தலைமைச் செயலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்து தொலைபேசியை துண்டித்து உள்ளார்.
இதனால் தனியார் தொலைக்காட்சி ஊழியர்கள் இது குறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தலைமைச் செயலகம் முழுவதும் மோப்ப நாய்கள், வெடிகுண்டு நிபுணர்கள் தீவிவரமாக சோதனை நடத்தினர்.
அமைச்சர்கள் அறைகள், அதிகாரிகளின் அறைகள், சட்டப்பேரவை அரங்கம், வாகன நிறுத்துமிடங்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் மோப்பநாய்கள் உதவிகளுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர்.
இந்நிலையில் இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பாக சென்னையில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடதக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“