Advertisment

விகடன் மூத்த புகைப்படக் கலைஞர் மரணம்; முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

அரசியல் விவகாரங்களின் நடமாடும் என்சைக்ளோபீடியாவாகவும் புகைப்படத்துறையில் தேர்ந்த நிபுணராகவும் திகழ்ந்தவர் நேற்றிரவு மாரடைப்பால் காலமானார்.

author-image
WebDesk
Nov 09, 2023 19:31 IST
New Update
Journalist.

மூத்த பத்திரிக்கையாளர் சு.குமரேசன்

விகடன் குழுமத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி தற்போது தமிழ்நாடு நியூஸ் நவ் ஊடகத்தில் முதன்மை பத்திரிகையாளராக பணியாற்றி வந்த, மகாமதுர கவி வி.வே.முருகேச  பாகவதரின் பேரனான சு.குமரேசன் தன் கேமிராவின் மூலமாகவே கவிதை படைத்து வந்தார். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலான தமிழக அரசியலின் முக்கிய சம்பவங்களின் நேரடி சாட்சியாக விளங்கினார். அரசியல் விவகாரங்களின் நடமாடும் என்சைக்ளோபீடியாவாகவும் புகைப்படத்துறையில் தேர்ந்த நிபுணராகவும் திகழ்ந்தவர் நேற்றிரவு மாரடைப்பால் காலமானார்.

Advertisment

அவரது இறப்பிற்கு பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள்,

சமூக ஆர்வலர்கள் தத்தம் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கலில்

, அன்னாரை பிரிந்துவாடும் குடும்பத்தினர், நண்பர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மூத்த புகைப்படப் பத்திரிகையாளர், விகடன் முன்னாள் தலைமைப் புகைப்படக் கலைஞர் சு.குமரேசன் நேற்றிரவு மறைவெய்தினார் என்று அறிந்து வருந்துகிறேன்.

திராவிட இயக்க மேடைகளில் பகுத்தறிவு ஒளிவீசிய மகா மதுரகவி வீ.வே.முருகேச பாகவதர் அவர்களின் பேரனான குமரேசன், விகடன் குழுமத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக முக்கிய பொறுப்புகளில் பணியாற்றியவர். கடந்த வாரம்தான் பூர்வீகக் குடிகளின் பாவலர் முருகேச பாகவதர் படைப்பு நூலுக்கு எனது வாழ்த்துச் செய்தியை பெற்றுச் சென்றார். தமிழ்நாட்டு அரசியல் வரலாற்று பக்கங்கள் பலவற்றை தனது புகைப்படக் கருவியின் வாயிலாகப் பதிவு செய்தவர்.

தலைவர் கலைஞர், நான் உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களின் புகைப்படங்களைப் பதிவு செய்தவர். குமரேசன் அவர்களது திடீர் மறைவு புகைப்பட இதழியல் உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு. அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும், ஊடகத்துறை நண்பர்களுக்கும், எனது ஆழ்ந்த இரங்லையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment