ஊழல் புகார் காரணமாக அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில்பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் மின்சாரம் மற்றும் மதுவிலக்குத்துறை அமைச்சராக இருந்து வந்தவர் செந்தில்பாலாஜி. கடந்த வாரம் இவரது வீட்டில் அமலாக்கத்துறை நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத பணம் மற்றும் நகைகள் கிடைத்ததாகவும், வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் மோசடி செய்துள்ளது குறித்தும் தெரியவந்தது.
சுமார் 17 மணி நேரம் நடந்த இந்த சோதனையில் முடிவில் செந்தில் பாலாஜிக்கு எதிராக பல ஆதாரங்கள் சிக்கியதாக கூறி நள்ளிரவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை கைது செய்தனர். ஆனால் அப்போது தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறி திரையில் உருண்டு அழுத் செந்தில்பாலாஜி உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்
தற்போது மேல் சிகிச்சைக்காக சென்னை காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ள அவர் இனி அமைச்சராக தொடரக்கூடாது என்று எதிர்கட்சிகள் சார்பில் கூறப்பட்டு வரும் நிலையில், செந்தில்பாலாஜி அமைச்சராக தொடர ஆளுனர் அனுமதிக்கவில்லை என்று தகவல் வெளியானது. இதனிடையே தமிழகத்தில் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில்பாலாஜி தொடர்வார் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் அமைச்சர் தங்கம் தென்னரசு-க்கு கூடுதலாக மின்சாரத்துறை அமைச்சராக பதவியில் இருப்பார் என்றும், அமைச்சர் முத்துச்சாமிக்கு மதுவிலக்கு - ஆயத்தீர்வைத் துறை வழங்கிங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டள்ள நிலையில், செந்தில்பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“