Tamilnadu Tamil News: தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் அருகேயுள்ள கிராமம் தான் பாஞ்சாகுளம். இந்த கிராமத்தில் வசித்து வரும் இரு சமூகத்தினரிடையே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அந்த பிரச்சினை தொடர்பாக இரு தரப்பினரும் கரிவலம்வந்த நல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடைப்படையில் ஒரு தரப்பினர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பள்ளிக்குச் செல்லும் தலித் மாணவர்கள் அங்குள்ள பெட்டிக்கடையில் திண்பண்டங்கள் வாங்க சென்றுள்ளனர். அப்போது ஊர் கட்டுப்பாடு விதித்திருப்பதாகவும் இனிமேல் யாரும் திண்பண்டங்கள் வாங்க வர வேண்டாம் என்றும், இனி பொருட்கள் தரமாட்டார்கள் என வீட்டில் போய் சொல்லுங்கள் எனவும் கடை உரிமையாளர் கூறியுள்ளார்.
கடை உரிமையாளர் இப்படி கூறுவது வீடியோவாக பதிவிடப்பட்ட நிலையில், அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தற்போது இந்த சம்பவம் தொடர்பாக ராமச்சந்திர மூர்த்தி என்ற நபரை கரிவலம்வந்த நல்லூர் போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
தமிழகத்தில் தந்தை பெரியாரின் 144வது பிறந்த நாள் தினம் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பள்ளி செல்லும் சிறுவர்கள் மீது தீண்டாமைக் கொடுமை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. தற்போது இந்த சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் தங்களது கண்டங்களை பதிவு செய்து வருகின்றனர்.
பெரியார் பிறந்தநாளை சமுக நீதி நாளாக கொண்டாடும் இதே தமிழகத்தில் தான் இத்தகைய
— திருமா ஆனஸ்ட் 💙❤ (@HonestVCK_) September 17, 2022
சாதிய தீண்டாமை…
தென்காசி,சங்கரன்கோவில் அருகிலுள்ள பாஞ்சாகுளம் கிராமத்தில் ஆதிதிராவிட பள்ளி குழந்தைகளுக்கு தீண்டாமை…. https://t.co/3FQE7VsJ3g
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil