சென்னை காம்தார் சாலைக்கு எஸ்.பி.பி பெயர்: பலகையை திறந்து வைத்த உதயநிதி ஸ்டாலின்!

தமிழ் திரையிசை ரசிகர்களால் பாடும் நிலா பாலு என்று அன்புடன் அழைக்கப்பட்ட பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் செப்டம்பர் 25, 2020-ல் காலமானார்.  

author-image
WebDesk
New Update
SPB Road In Chennai

இந்திய சினிமாவின் முன்னணி பாடகராக திகழ்ந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியன், கொரோனா காலக்கட்டத்தில் மரணமடைந்த நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள,காம்தார் நகர் முதன்மை சாலைக்கு அவரின் பெயர் சூட்டப்பட்டுள்ள நிலையில், இந்த பெயர் பலகையை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

Advertisment

இந்திய திரையிசை உலகில் 40 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களைப் பாடி கோடிக் கணக்கான ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம். தமிழ் திரையிசையில் மட்டுமல்லாமல், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, பெங்காலி என பலமொழிகளில் பாடல்களைப் பாடியுள்ளார். பாடகராக மட்டுமில்லாமல், திரைப்படங்களில் நடித்துள்ளார். 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

பன்முகத்திறமை கொண்டவராகத் திகழ்ந்த பாடகர் எஸ்.பி. பாலாசுப்ரமணியத்தின் குரல் என்பது மூன்று தலைமுறையின் குரல். அதனால்தான்.  அவர் 40 ஆண்டுகளுக்கு மேலாக அவர் மறையும் வரை பாடிக்கொண்டே இருந்தார். தமிழ் திரையிசை ரசிகர்களால் பாடும் நிலா பாலு என்று அன்புடன் அழைக்கப்பட்ட பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் செப்டம்பர் 25, 2020-ல் காலமானார்.  எஸ்.பி. பாலசுப்ரமணியம் மறைவு ரசிகர்களை மீளாத்துயரில் ஆழ்த்தியது.

பாடகர் எஸ்.பி.பி மரணமடைந்து ஆண்டுகள் பல கடந்தாலும், அவருடைய அமுதக்குரலால் பாடப்பட்ட பாடல்கள் காற்றை இனிமையாக்கிக் கொண்டிருக்கிறது. இதனிடையே, பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் நினைவைப் போற்றும் வகையில், சென்னையில் அவர் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள நுங்கம்பாக்கம், காம்தார் நகர் முதல் தெருவிற்கு  ‘எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சாலை’ எனப் பெயர் சூட்டப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிவித்தார்.

Advertisment
Advertisements

இந்த அறிவிப்பை தொடர்ந்து தனது கோரிக்கையை நிறைவேற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியனிக் மகன் சரண்," தன் குடும்பத்தின் சார்பில் அரசுக்கு வைத்த கோரிக்கையை இரண்டு நாட்களில் நிறைவேற்றி கொடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி. கோரிக்கையை நிறைவேற்ற உறுதுணையாக இருந்த அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஸ் மற்றும் சாமிநாதன் ஆகியோருக்கும் நன்றி" என அவர் தெரிவித்திருந்தார்.

இதனிடையே, எஸ்.பி.பாலசுப்பிரமணியன் பெயர் சூட்டப்பட்ட, சென்னை நுங்கம்பாக்கம் காம்தார் சாலை முதல் தெருவில், வைக்கப்பட்டுள்ள எஸ்.பி.பாலசுப்பிரமணியன் சாலை என்ற பெயர் பலகையை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்வின்போது, எஸ்.பி.பி மகன் சரண் உட்பட அவரது குடும்பத்தினர், மற்றும் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், கே.என்.நேரு ஆகியோர் உடன் இருந்தனர். 

S P Balasubrahmanyam

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: