தோல்விக்கு காரணம் நிர்வாகிகள்… குற்றம் சுமத்திய எச்.ராஜா… கலைந்து வரும் சிவகங்கை பாஜக

BJP Executives Resigned Against H.Raja : தேர்தல் தோல்விக்கு நிர்வாகிகளை குற்றம்சாட்டியதால் எச்.ராஜாவுக்கு எதிராக சிவகங்கை மாவட்ட பாஜக நிர்வாகிகள் ராஜினாமா செய்துள்ளனர்.

Sivagangai District BJP Execuitives Resigned : நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் பாஜக சார்பில் சிவகங்கை மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்த பாஜக முன்னாள் தேசய செயலாளர் எச்.ராஜா தனது தோல்விக்கு தனது கட்சியில் இருக்கும் சில முக்கிய நிர்வாகளே காரணம் என குற்றம் சாட்டியுள்ளதால் சிவகங்கை மாவட்ட பாஜக நிர்வாகிகள் கட்சியில் இருந்து வெளியேறி வருகின்றனர்.  

தமிழகத்தில் தமிழகத்தில் காலுன்ற முடியாமல் தவித்து வந்த பாஜகவுக்கு சிவகங்கை மாவட்டத்தில் பெரும் வரவேற்பை பெற முக்கிய பங்காற்றியவர் எச்.ராஜா. காரைக்குடியைச் சேர்ந்த இவர் கட்சியின் ஆரம்ப கட்ட வளர்ச்சிக்கு அடித்தளமிட்டதன் காரணமாக பாஜகவின் தேசிய செயலாளர் என்ற முக்கிய பொறுப்பு வகித்து வந்தார். மேலும் சிவகங்கை மாவட்ட பாஜக பொறுப்பாளர்களாக தனது ஆதரவாளர்களை நியமித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து இந்தியாவில் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பாஜக அதிமுக கூட்டணியுடன் தேர்தலை சந்தித்து. இதில் சிவகங்கை மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கார்த்தி சிதம்பரத்தை எதிர்த்து பாஜக வேட்பாளராக களமிறங்கிய எச்.ராஜா தோல்வியை தழுவினார். தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் தமிழகத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில், மீண்டும் அதிமுக கூட்டணியுடன் தேர்தலை சந்தித்து பாஜக. இதில் காரைக்குடி தொகுதியில் போட்டியிட்ட எச்.ராஜா இந்த தேர்தலிலும் தோல்வியை தழுவினார்.

இந்நிலையில் தனது தோல்வி குறித்து இதுவரை மவுனம் காத்து வநத எச்.ராஜா கடந்த சில தினங்களாக தனது தோல்விக்கு சிவகங்கை மாவட்ட பாஜகவை சேர்ந்த நிர்வாகிகள் சிலர் தான் காரணம் என குற்றம்சாட்டி வருவதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாத பாஜகவின்  சிவகங்கை மாவட்ட தலைவர் செல்வராஜ் தனது பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து செல்வராஜூக்கு ஆதரவாக கட்சியில் இருந்து பல முக்கிய பொறுப்பாளர்களும் கட்சியில் இருந்து வெளியேறி வருகின்றனர்.

அந்த வரிசையில் தற்போது தனது பதவியை ராஜிநாமா செய்த திருப்புவனம் மேற்கு மண்டல் தலைவர் பாலமுருகன் தனது ராஜினாமா குறித்து கூறுகையில், பாஜக கட்சி நிர்வாகிகளிடமும் தொண்டர்களிடமும் காட்டிய அணுகுமுறையால் தமிழகத்திலேயே சிவகங்கை மாவட்டத்தை இரண்டாவது இடத்திற்கு கொண்டுவந்து காட்டியவர் மாவட்டத் தலைவர் செல்வராஜ்,

தனது தோல்வி குறித்து ஆராயாமல் கட்சி நிர்வாகிகள் தனது வெற்றிக்கு சரியாக வேலை செய்யவில்லை என்று எச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார். இதை எங்களால் பொறுத்துக்கொள்ள முடியாது. தேர்தல் செலவுக்கான பணத்தை செலவழிப்பது தொடர்பான  புகாரை மறைப்பதற்காக ராஜா தரப்பினர், நிர்வாகிகள் மீது புகார் தெரிவிக்கின்றனர்.  மாவட்டத் தலைவர் செல்வராஜ் மீது புகார் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாத நிர்வாகிகள்  தங்களது பதவிகளை ராஜிநாமா செய்து வருகிறோம்.

இந்த ராஜினாமா பணி மேலும் தொடரும். திருப்பணி ஒன்றியத்தில் மேற்கு மண்டல தலைவர் பதவியை நான் ராஜிநாமா செய்துவிட்டேன். இந்த ஒன்றியத்துக்கு உட்பட்ட 59 பாஜக கிளைகளும் கலைக்கப்பட்டு விட்டது. மாநிலத் தலைமை சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக நிர்வாகிகள் ராஜிநாமா பற்றியும் அதற்கான காரணம் என்ன என்பது குறித்தும் விசாரித்து தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம் என கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamilnadu sivagangai district bjp executives resigned against h raja

Next Story
100% தடுப்பூசி செலுத்திக்கொண்ட தமிழகத்தின் முதல் கிராமம் : கலைஞர் மாவட்டத்திற்கு கிடைத்த பெருமை
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express