சிங்கம்புணரி அருகே சமுதாய கூடத்தில் இறக்கி வைக்கப்பட்ட சுமார் 2 லட்சம் மதிப்பிலான 200 மூட்டை பிளீச்சிங் பவுடர் திடீரென புகை கிளம்பி தீப்பற்றி எரிந்ததால் நாசமாகியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள மேலப்பட்டி சமுதாய கூடத்தில் 25 கிலோ எடையுள்ள பிளீச்சிங் பவுடர் 200 மூட்டைகள் நேற்று இறக்கி வைத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று பகல் 12 மணியளவில் சமுதாய கூடத்திற்குள் திடீரென புகை கிளம்பி தீப்பற்றி உள்ளது. இதனை கண்ட கிராம மக்கள் உடனடியாக அவசர அழைப்பு 100க்குத் தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அடிப்படையில் 108 ஆம்புலன்ஸ் வாகனமும் தீயணைப்புதுறையினர் விரைந்து சென்றனர்.
/indian-express-tamil/media/media_files/2025/03/05/bleching-847644.jpg)
தீப்பற்றி எரிந்ததில் பிளீச்சிங் பவுடர் உருகியும், எரிந்தும் போனது. மேலும் அதிக வெப்பத்தால் காற்றாடி மைக் செட் டியூப் லைட் உள்ளிட்ட உபகரணங்கள் எரிந்தன. மேலும் கட்டிடத்தின் வெளிப்புறத்தில் நிறுத்தப்பட்டிருந்த பைக் எரிந்தது. தகவலறிந்து விரைந்து வந்த நிலைய அலுவலர் பிரகாஸ் தலைமயைிலான தீயணைப்புதுறையினர் சமுதாய கூடத்தின் ஜன்னல் வழியே தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில் 5 டன் எடையுள்ள 200 மூட்டை பிளீச்சிங் பவுடர் காற்றாடி மோட்டார் சைக்கிள் மைக் செட் டியூப் லைட் உள்ளிட்ட பொருட்களும் தீயில் எரிந்து நாசமாகின.
/indian-express-tamil/media/media_files/2025/03/05/bikem-393750.jpg)
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிங்கம்புணரி சார்பு ஆய்வாளர் சபரிதாசன் தலைமையிலான போலீசார் சமுதாய கூடத்தில் பிளீச்சிங் பவுடர் இறக்கி வைத்தது யார் பிளீச்சிங் பவுடர் திடீரொன தீப்பிடித்ததன் வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து சிங்கம்புணரி போலீசார் விசாரித்து வருகின்றனர். கடந்த 2021-2022 ஆம் ஆண்டில் இந்த சமுதாயகூடம் உராட்சி ஒன்றிய பொதுநிதியில் 5 லட்சம் மதிப்பில் மராமத்து பணி செய்தது குறிப்பிடதக்கதாகும்