/indian-express-tamil/media/media_files/2025/05/02/LNs66kjAIXqtp1xxBJCk.jpg)
சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி மற்றும் சுற்றுவட்டாரங்களில் வெள்ளைப்பூசணி பயிரிடும் விவசாயிகள், விலை கிடைக்காததால் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். நோய் தாக்குதல் மற்றும் வியாபாரிகள் வாங்க முன்வராததை தொடர்ந்து சுமார் 100 டன் வெள்ளைப்பூசணியை விவசாயிகள் ரோட்டோரத்தில் கொட்டி விட்டுச் சென்றுள்ளனர்.
இந்த பகுதியில் சுமார் 200 ஏக்கரில் வெள்ளைப்பூசணி சாகுபடி செய்யப்பட்டு, கேரளா, கன்னியாகுமரி பகுதிகளுக்கு கடத்தப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு டன் ஒன்றுக்கு ரூ.10,000–15,000 வரை விலை கிடைத்ததால் இந்தாண்டு கூடுதல் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டது. ஆனால் மாறுபட்ட சீதோஷ்ணம், புழு தாக்குதல் மற்றும் நோய் பரவலால் பூசணியில் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
வியாபாரிகள் இந்த ஆண்டு டன் ஒன்றுக்கு ரூ.2,000–2,500 மட்டுமே வழங்க முன்வந்ததால், பலர் அறுவடை செய்யாமலேயே பூசணியை வயலில் விட்டனர். மேலும், லாரி வசதி இல்லாததால் டிராக்டரில் கொண்டு வரும் போதும் வாடகைச் செலவுகள் கூட நஷ்டமாகவே மாறின. விவசாயிகள், மாவட்ட நிர்வாகம் சேதமடைந்த பயிர்களை கணக்கிட்டு நஷ்ட ஈடு வழங்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இன்று எதிர்பார்க்கின்றனர்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.