/indian-express-tamil/media/media_files/2025/10/24/murder-sivagangai-2025-10-24-19-26-08.jpg)
சிவகங்கையில் இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அமைச்சர் மற்றும் ஆட்சியர் பேச்சு வார்த்தை நடத்தியதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது
சிவகங்கை மாவட்டம் தாயமங்கலத்தில் சங்கர் என்ற இளைஞர் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் 3 நாட்கள் ஆகிய நிலையில் குற்றவாளிகளை கைது செய்யப்படவில்லை. இதனை கண்டித்து சிவகங்கையில் நேற்று மாலை முதல் சங்கரின் உறவினர்கள் தொடர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனது..
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே தாயமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர். டிராவல்ஸ் உரிமையாளரான இவர் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளிகளான தாயமங்கல் கிராமத்தை சேர்ந்த முத்துவேல், செல்வக்குமார், பிரேம்குமார் ஆகிய 3 பேரை இளையான்குடி காவல்துறையினர் கைது செய்தனர்.
மேலும் மற்ற குற்றவாளிகளை கைது செய்ய கோரியும், பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், சிவகங்கை திருப்பத்தூர் சாலையில் சங்கரின் உறவினர்கள் மறியல் போராட்டம் நடத்தினர். நேற்று மாலை தொடங்கிய போராட்டம் 16 மணி நேரமாக நடைபெற்றது. பேச்சுவார்த்தைக்கு அரசு தரப்பில் யாரும் வராததால் கோர்ட் வாசல் பகுதியில் இருந்து ஊர்வலமாக சென்று அரண்மனை வாசல் முன்பு மீண்டும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்
நீண்ட போராட்டத்திற்கு பிறகு அமைச்சர் பெரியகருப்பன் மாவட்ட ஆட்சியர் பொற்கொடி நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது கோரிக்கைகள் அனைத்தையும் பரிசீலனைத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று பேச்சுவார்த்தையில் தெரிவித்ததை அடுத்து போராட்டக்காரர்கள் தற்போது கலைந்து சென்றனர் இறந்த சங்கரின் உடலை பெற சிவகங்கை அரசு மருத்துவமனையை நோக்கி சென்றனர். மறியல் போராட்டத்தால் போக்குவரத்து சீரானது
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us