பெண்ணிய செயற்பாட்டாளரும் சமூக ஆர்வலருமான சுந்தர வள்ளி போலீசாருடன் தான் தவறாக பேசியது குறித்து நிரூபத்தால் அரசியலை விட்டே விலகிவிடுகிறேன் என்று கூறியுள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில வருடங்களாக காவல்துறையினருடன் பொதுமக்கள் வாங்குவாதம் செய்வது அவ்வப்போது நடந்து வருகிறது. இதில் காவல்துறையினர் சாமான்ய மக்களை மதிக்காமல் மரியாதை குறைவாக நடத்துவதாக பலரும் குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர். ஆனாலும் இந்த நிலை இன்னும் தொடந்துகொண்டுதான் இருக்கிறது.
இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில், ஹெல்மட் போடாமல் வண்டி ஓட்டி வந்த பெண்ணிய செயற்பாட்டாளரும் சமூக ஆர்வலருமான சுந்தர வள்ளியை நிறுத்திய போலீசாருக்கும் அவருக்கும் இடையே கடுமையாக வாக்குவாம் நடைபெற்றது. இது தொடர்பாக வீடியோ பதிவு இணையத்தில் வைரலாக பரவிய நிலையில், நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.
மேலும் எனக்கே ஃபைன் போடுவீங்களா என்று சுந்தரவள்ளி காவல்துறையினரிடம் தரக்குறைவாக வார்த்தைகளை பயன்படுத்தி திட்டியதாகவுமு் தகவல் வெளியாக நிலையில், இவர் பேசிய வீடியோவில் பல பீப் சத்தத்துடன் இணையத்தில் வீடியோ ஒன்று வெளியானது. இதனால் பரபரப்பு அதிகரித்த நிலையில், இது குறித்து தற்போது சுந்தரவள்ளி விளக்கம் அளித்துள்ளார்.
நானும் எனது மகனும் ஸ்கூட்டியில் சென்றுகொண்டிருக்கும்போது ஹெல்மட் போடவில்லை என்று கூறி காவலர்கள் நிறுத்தினார்கள். அங்கேயே ஃபைன் போட்டிருந்தால் கட்டிவிட்டு கிளம்பியிருப்போம். ஆனால் பெண் எஸ்.ஐ ஒருவர் எங்களை பார்த்து அறைந்துவிடுவேன் போய் அங்க நில்லு என்று மரியாதை இல்லாமல் பேசினார். நான் அரசியலில் இருக்கிறேன். சமூக ஆவர்லர் எனக்கே இந்த நிலை என்றால் சமான்ய மக்களை எப்படி நடத்துவீர்கள் என்று கேட்டுதான் வாக்குவாம் செய்தேன்.
என் வீடியோக்களில் நான் காக்கி சட்டைக்கு மரியாதை கொடுத்து தான் பேசினேன். பாஜக ஆர்.எஸ்.எஸ். சங்கபரிவார் கும்பலுக்கு எதிராக செயல்படுவதால் என்னை மாட்டிவிட வேண்டும் என்பதால் பீப் சத்தத்துடன் வீடியோ வெளியிட்டுள்ளனர். அவர்களுக்கு சவால் விடுகிறேன். உங்களுக்கு தைரியம் இருந்தால் நீங்கள் பீப் இல்லாமல் வீடியோவை வெளியடுங்கள்.
அதேபோல் எனக்கே ஃபைன் போடுவீங்களா என்று எகிறிய சுந்தரவள்ளி என்று பத்திரிக்கை செய்தி வந்தது. நான் அப்படித்தான் பேசினேன் என்று நிரூபித்துவிட்டால் நான் அரசியலில் இருந்தே விலக தயார் என்றும் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“