Tamil Socialist Periyar Birthday : தமிழகத்தில் சமூக சீர்திருத்தவாதி என்று கூறியவுடன் பலருக்கும் உடனடியாக நினைவுக்கு வருபவர் பெரியார். ஈ.வே.ராமசாமி என்ற பெயர் கொண்ட இவர் கடந்த 1879-ம் ஆண்டு செப்டம்பர் 17-ந் தேதி ஈரோடு மாவட்டத்தில் பிறந்தார். சமூக சீர்திருத்தம், மூட நம்பிக்கை, பெண் விடுதலை சாதி மறுப்பு, தீண்டாமை உள்ளிட்ட சமூகத்திற்கு தேவையாக பல சீர்திருத்தங்களுக்காக போராடியவர். மேலும் பகுத்தறிவு மற்றும் சுயமரியாதையை வலிறுயுத்திய இவர் அரசியலிலும் தனது முத்திரையை பதித்துள்ளார்.
தமிழகத்தில் திராவிட அரசியலை விதைத்த பெருமை பெரியரையே சாரும். இந்திய விடுதலைக்காகவும், பெண்களின் விடுதலைக்காகவும் போராடிய பெரியாருக்கு இன்று 142-வது பிறந்த நாள். இவரது பிறந்த நாளை சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்நிலையில் தந்தை பெரியாரின் பிறந்தநாளை நெட்டிசன் விமர்சையாக கொண்டாடி வருகின்றனா.
இது தொடர்பாக கேரளா முதல்வர் பினராயி விஜயன் தனது ட்விட்டர் பதிவில், பெரியாரின் பிறந்த நாளில் அவருக்கு வணக்கத்தை உரித்தாக்குகிறோம். சமூக நீதி,சாதி ஒழிப்பு மற்றும் மத நல்லிணக்கம் ஆகியவற்றுக்கான போராட்டங்கள் அதிகமாக தேவைப்படும் இக்காலகட்டத்தில் அவர் வழியில் நாமும் அன்பால் நிறைந்த உலகை உருவாக்க உறுதி கொள்வோம் என கூறியுள்ளார். இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் பினராயி விஜயனுக்கு நன்றி சொல்லி மறுபதிவிட்டு வருகின்றனர்.
பெரியாரின் பிறந்த நாளில் அவருக்கு வணக்கத்தை உரித்தாக்குகிறோம். சமூக நீதி,சாதி ஒழிப்பு மற்றும் மத நல்லிணக்கம் ஆகியவற்றுக்கான போராட்டங்கள் அதிகமாக தேவைப்படும் இக்காலகட்டத்தில் அவர் வழியில் நாமும் அன்பால் நிறைந்த உலகை உருவாக்க உறுதி கொள்வோம்.#Periyar pic.twitter.com/3pV26Nqe4f
— Pinarayi Vijayan (@vijayanpinarayi) September 17, 2021
மேலும் ரசிகர்கள் பலரும் பெரியாரின் பொன்மொழிக்கள், அவரின் போராட்ட விவரஙகள், சமூகசீர்திருத்த கருத்துக்களை தங்களது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். தற்போது முதல்வர் ஸ்டாலின் பெரியாரின் பிறந்த நாளை சமூக நீதி நாளாக அறிவித்துள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலினுக்கும் நன்றி மற்றும் பாராட்டு தெரிவிக்கும் விதமாக கருத்தக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இதில் பிரபல பத்திரிக்கையாளர் குணசேகரன் என்பவர் தனது ட்விட்டர் பதிவில், “கல்வி அறிவும், சுயமரியாதை எண்ணமும், பகுத்தறிவுத் தன்மையும் தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும்...!” தந்தை பெரியாரின் 143வது பிறந்தநாள் இன்று! என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவை பார்த்த பலரும் இன்று சமூகநீதி நாள் என்று மறுபதிவிட்டு வருகின்றனர்.
“கல்வி அறிவும், சுயமரியாதை எண்ணமும், பகுத்தறிவுத் தன்மையும் தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும்...!”
தந்தை பெரியாரின் 143வது பிறந்தநாள் இன்று!#SunNews | #பெரியார் | #HBDThanthaiPeriyar | #சமூகநீதிநாள் pic.twitter.com/DMPpVSbUvI— மு.குணசேகரன் Gunasekaran (@GunasekaranMu) September 17, 2021
மேலும் பெரியாரின் பிறந்த நாளை சமூக நீதி நாளாக அறிவித்த முதல்வர் ஸடாலினுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக திராவிட கலக தலைவர் கி வீரமணி முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு தொடர்பாக புகைப்படம் முதல்வரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாள், சமூகநீதி நாளாக கொண்டாடப்படுவதையொட்டி, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் திரு. கி.வீரமணி அவர்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களை சந்தித்து நன்றி தெரிவித்தார். pic.twitter.com/Wm8AolX5aO
— CMOTamilNadu (@CMOTamilnadu) September 16, 2021
அமைச்சர் பெரியகருப்பன் தனது ட்விட்டர் பக்கத்தில், சமூக சீர்திருத்தத்திற்கும், சாதிய வேறுபாடுகளை அகற்றுவதற்கும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்கும், பெண் விடுதலைக்கும் போராடிய தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாள் இன்று. மாண்புமிகு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் ஆணைப்படி சமூகநீதி நாளாக கொண்டாடுவோம் என்று பதிவிட்டுள்ளார்.
சமூக சீர்திருத்தத்திற்கும், சாதிய வேறுபாடுகளை அகற்றுவதற்கும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்கும், பெண் விடுதலைக்கும் போராடிய தந்தை #பெரியார் அவர்களின் பிறந்தநாள் இன்று. மாண்புமிகு தமிழக முதல்வர் @mkstalin அவர்கள் ஆணைப்படி சமூகநீதி நாளாக கொண்டாடுவோம். #HBDThanthaiPeriyar pic.twitter.com/qmJDfM4wb2
— KR Periakaruppan (@OfficeOfKRP) September 17, 2021
பிறந்தநாள் இன்று பிறந்தநாள்
நாம் பிள்ளைகள் போலே தொல்லைகள்
எல்லாம் மறந்தநாள்.
பெரியார் பிறந்தநாள் சமூகநீதிநாள் சரித்திரம் படைத்து
சாதித்து காட்டியவர் .
பெரியார் எங்கள் பெரியார்.
இந்தநாள் இனியநாள்
உறுதிமொழியை பின்பற்றி
சமூகநீதிநாள் சமத்துவத்துடன்
எல்லோரும் கொண்டாடுவோம்.
வாழ்க.— Narumanam (@Narumanam3) September 17, 2021
பெரியார் பிறந்தநாள் என்கிற சமுக நீதி நாளில் அனைவருக்கும் வாழ்த்துகள். புத்தரையும் பெரியாரையும் எதிர்ப்பவர்கள் அவர்கள் கடவுள் இல்லை என்று சொன்னதால் அல்ல, குறிப்பாக ஜாதிப் பாகுபாடுகளையும் அதற்கு அடித்தளமாக விளங்கிய பிராமணர்களின் வருண சமுக அமைப்பையும் அவர்கள் எதிர்த்ததால்தான்.
— PICHALINGAM RAJENDRAN (@PichalingamR) September 17, 2021
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 143வது பிறந்தநாள்,
அய்யா ஊட்டிய சமூகநீதி – சமத்துவம் – சாதியொழிப்பு - பெண்ணுரிமை போன்ற தத்துவங்களுக்காக நம்மை ஒப்படைத்துக் கொள்வோம்!
மானமும் அறிவும் உள்ள சமுதாயம் அமைப்போம்!
தந்தை பெரியார் வாழ்க! சுயமரியாதைச் சுடர் வெல்க!
#HBDPeriyar143 pic.twitter.com/5QKhqaoUaM— செல்வாவில்வா (@selvaavilva) September 17, 2021
பகுத்தறிவு பகலவன் சுயமரியாதைக்கு சொந்தக்காரர்
மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு என்று சொல்லியவர்
கிழவன் அல்ல அவன் கிழக்குத்திசை
தாடிக்கார பெரியார் தான் தாடிக்கு சொந்தக்காரர்
பெரியார் பிறந்தநாள் இன்று இந்தவருடத்திலிருந்து சிறப்புடன் மகிழ்ச்சியாக
சமூகநீதிநாள் என்று கொண்டாடுவோம்.— Narumanam (@Narumanam3) September 17, 2021
உலகமே எதிர்த்தாலும் உன் சுயமரியாதையை விட்டுத்தராதே . உலகமே சொன்னாலும் உன் பகுத்தறிவையே நம்பு. உன்னைவிட உயர்ந்தவனுமில்லை
தாழ்ந்தவனுமில்லை - தந்தை பெரியார்
பகுத்தறிவு பகலவன் பிறந்தநாள் ✨#HBDPeriyar #SocialJusticeDay pic.twitter.com/a1R7JRVFL1— Stalin SP (@Stalin__SP) September 17, 2021
அனைவருக்கும் தந்தை பெரியார் பிறந்தநாள் - சமூகநீதி நாள் வாழ்த்துகள்! பேசு சுயமரியாதை உலகமாக பெரியார் உலகம் படைப்போம்! pic.twitter.com/CRE66AmITq
— Asiriyar K.Veeramani (@AsiriyarKV) September 16, 2021
செப்டம்பர் 17 - சமூகநீதி நாள்- பெரியார் பிறந்தநாள்.
யார் சொல்லியிருந்தாலும்
எங்கு படித்திருந்தாலும்
நானே சொன்னாலும்
உனது புத்திக்கும்
பொது அறிவுக்கும்
பொருந்தாத
எதையும் நம்பாதே
-பெரியார்#சமூகநீதிநாள் #சமூகநீதிநாள்_உறுதிமொழி pic.twitter.com/X88fhYyK56— Arjun Saravanan (@ArjunSaravanan5) September 17, 2021
பெண்ணுரிமைக்காகவும், பெண் கல்விக்காகவும்,ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காகவும் போராடிய பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். 🙏🔥 pic.twitter.com/kmEvmpWwhD
— kavina (@comradeKavi) September 17, 2021
எந்த ஆண்டையும் விட இந்த ஆண்டு பெரியார் பிறந்தநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது.#HBDPeriyar 🖤 pic.twitter.com/n75kxUHXty
— Dr R.Manikandan👨⚕️ (@Manikandanraj92) September 17, 2021
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.