scorecardresearch

வெளிநாடுகளில் 4000 டாலருக்கு விற்கப்படும் தமிழக மென் பொறியாளர்கள் 

தமிழக சாஃப்ட்வேர் இன்ஜினியர்கள் வெளிநாடுகளில் 4000 டாலர்களுக்கு விற்கப்படுகின்றனர்; தப்பி வந்தவர் பரபரப்பு குற்றச்சாட்டு

வெளிநாடுகளில் 4000 டாலருக்கு விற்கப்படும் தமிழக மென் பொறியாளர்கள் 

வேலைக்­காக வெளி­நாடு செல்­வோர் அங்கு வேலை தரும் நிறுவனங்கள் குறித்­தும் வேலை­வாய்ப்பு முக­வர்­கள் குறித்­தும் நன்கு விசா­ரித்­துத் தெரிந்­து­கொண்ட பிறகே அந்­நா­டு­க­ளுக்­குச் செல்ல வேண்­டும் என்று வெளி­யு­றவு அமைச்சகமும், தமிழக காவல்துறையும் எச்சரிக்கை விடுத்து வரும் அதே நேரத்தில், வேலை தேடி சொந்த பந்தங்களை விட்டும், வீடு வாசலை அடமானம் வைத்தும் வெளிநாடு சென்றவர்கள் பிணமாகவும், போட்டுக்கொண்ட துணியோடு உயிர் வாழ்ந்தால் போதும் என்று தப்பிப்பிழைத்து சொந்த மண்ணுக்கு திரும்பி வருவது தொடர் கதையாகத் தான் இருக்கின்றது.

அந்த வகையில் இந்த ஆண்டு 100 மென்­பொ­றி­யா­ளர்­கள் தேர்வு செய்யப்பட்டு தாய்­லாந்­துக்கு அழைத்­துச் செல்­லப்­பட்­ட­னர். அங்கு சென்று சேர்ந்­த­வு­டன் அவர்­கள் மியன்­மா­ருக்கு கடத்­திச் செல்லப்பட்டதாகவும் இணைய வழிக் குற்­றச்­செ­யல்­களில் ஈடுபடுமாறு வலி­யு­றுத்­தப்­பட்­ட­தா­க­வும் கூறப்­பட்­டது. மறுத்­த­வர்­களை அடித்து, உதைத்­த­து­டன் சரி­யாக உணவு தரா­மல் கொடுமைப்படுத்துவதாகத் தெரி­ய­வந்­துள்­ளது.

இதையும் படியுங்கள்: முக்குலத்தோர் சமூக முக்கிய பிரமுகரை தட்டித் தூக்கிய இ.பி.எஸ்: ஓ.பி.எஸ்-க்கு செக்!

அந்த வகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து திருச்சி வழியாக அழைத்துச் செல்லப்பட்டு, கம்போடியாவில் இருந்து தப்பி விமான மூலம் திருச்சி வந்த வாலிபர் இப்ராஹீம் தெரிவிக்கையில் : தமிழகத்தில் இருந்து 400 பேர் அங்கே வேலைக்காக விற்கப்பட்டுள்ளனர். ஆயிரம் டாலர் (1000$) ஊதியம் என்று சொல்லி இங்கு உள்ள ஏஜெண்டுகள் சீன நாட்டினரிடம் 4000 டாலருக்கு விற்பனை செய்து விடுவதாக குறிப்பிட்டார்.

அங்கு எந்த வேலையும் கொடுப்பதில்லை. முழுவதும் ஏமாற்றுவது, மனசாட்சிக்கு விரோதமாக நடப்பது இதுபோன்ற செயல்களை செய்பவர்களை மட்டும் அடிக்காமல் துன்புறுத்தாமல் தனி அறையில் வைக்காமல் வைத்திருக்கின்றனர். மற்றவர்களை அடித்து துன்புறுத்தி மின்சாரத்தின் மூலம் ஷாக் கொடுத்து என அனைத்து துன்புறுத்தல்களும் தரப்படுவதாக வேதனையுடன் தெரிவித்தார்.

அவர்களிடம் துப்பாக்கி வைத்து மிரட்டுவதாகவும், அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும், இது போன்ற ஏஜென்ட்களிடம் நம்பி ஏமாற வேண்டாம் எனவும் அவர் கூறினார் .

கடந்த ஜூலை மாதம் 3 லட்சம் ரூபாய் செலவு செய்து நான் சென்றேன். திருச்சி தில்லைநகரில் உள்ள ஏஜென்ட் ஷாநவாஸ் கேர் கன்சல்டன்ஜி மூலம் தான் அங்கு சென்றேன். இங்கு அவருக்கு உதவியாளராக முபாரக் என்பவரும், நெல்லை முஸ்தாக் என்பவரும் இருக்கின்றனர். இவர்கள் தமிழ்நாடு முழுவதும் வேலை தேடும் வாலிபர்களை கண்டறிந்து அவர்களை இந்த ட்ராவல்ஸ் மூலம் வெளிநாட்டுக்கு விற்று விடுகின்றனர்.

நான் இவர்களிடம் ஏமாந்தது போல் வேறு எவரும் ஏமாந்து விட வேண்டாம். இவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். இவரை திருச்சி எஸ்.டி. பி.ஐ கட்சியினர் மற்றும் தமிழக போலீசாரால் கம்போடியாவிலிருந்து மீட்கப்பட்டு  திருச்சிக்கு விமானம் வந்து சேர்ந்ததாக தெரிவித்தார்.

க.சண்முகவடிவேல்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tamilnadu software engineers sale to 4000 dollars in foreign countries

Best of Express