/indian-express-tamil/media/media_files/2025/05/27/afqx87URnLBet6Rubc8V.jpg)
சென்னைக்கு அருகில், அயனாவரத்தில், ஒரு காலத்தில் தென் ஆசியாவின் பால் புரட்சிக்கு வித்திட்ட ஒரு இடமாக இருக்கும் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் கட்டிடம், இன்று பரிதாபகரமான நிலையில் காட்சி அளிக்கிறது.
இது குறித்து டிடி நெக்ஸ்ட் வெளியிட்டுள்ள செய்தியில், காஞ்சிபுரம்-திருவள்ளூர் மாவட்ட பால் உற்பத்தியாளர் ஒன்றியம் என்று ஒரு காலத்தில் கம்பீரமாக அறிவித்த அயனாவரம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் கட்டிடம் தற்போது வளைவுகள் சிதைந்து காணப்படுகின்றன. உள்ளே நுழைந்தால், எங்கும் குப்பைகள், பராமரிக்கப்படாத சிறுவர் பூங்கா, பாழடைந்த ஊழியர் குடியிருப்புகள் மற்றும் கைவிடப்பட்ட அலுவலக கட்டிடம் என ஒரு "பேய் வளாகம்" போன்ற தோற்றம் நிலவுகிறது என்று அங்கிருக்கும் ஆவின் ஊழியர் ஒருவர் வேதனையுடன் தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து அங்கிருந்த உள்ளூர் வாசி ஒருவர் கூறுகையில், இது ஒரு காலத்தில் மிகவும் பரபரப்பான பகுதியாக இருந்தது. காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் தற்போதுள்ள செங்கல்பட்டு மாவட்டங்களுக்கான முக்கிய விநியோக மையமாகவும், நிர்வாக அலுவலகமாகவும் இந்த இடம் திகழ்ந்தது. தற்போது இந்த கட்டிடம் பயன்பாட்டில் இல்லைஎன்று கூறியுள்ளார். சுமார் ஒரு ஏக்கர் நிலம் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு (TNEB) ஒப்படைக்கப்படும் நிலையில் இருப்பதாகவும் காஞ்சிபுரம்-திருவள்ளூர் ஒன்றியத்தின் பொது மேலாளர் நாகராஜன் கூறியுள்ளார்.
1927 ஆம் ஆண்டு சென்னை பால் விநியோக சங்கம் (Chennai Milk Supply Society) என்ற பெயரில் தொடங்கப்பட்டது. மாநில அரசின் கூற்றுப்படி, தென் ஆசியாவின் முதல் பதிவு செய்யப்பட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் ஆகும். காலப்போக்கில், இந்த மாதிரி தமிழ்நாட்டில் பரவலான கூட்டுறவு பால் இயக்கத்திற்கு உருவாக அடித்தளம் அமைத்தது, 1958 இல் பால்வளத் துறை நிறுவப்பட்டது, பின்னர் 1981 இல், தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு, பிரபலமாக ஒரே பிராண்டின் கீழ் செயல்பாடுகளை மையப்படுத்த ஆவின் என்று உருவாக்கப்பட்டது.
முக்கிய செயல்பாடுகள் தற்போது மாதவரம் மற்றும் திருவள்ளூரில் உள்ள நவீன வசதிகளுக்கு மாற்றப்பட்டிருந்தாலும், அயனாவரத்தில் உள்ள இந்த இடம் பெரும்பாலும் மறக்கப்பட்டு, முழுமையாக பயன்படுத்தப்படாமல் உள்ளது. பெரியதாக கட்டப்பட்ட அதிநவீன ஆவின் பாலர் கூட அனைத்து வகையான ஆவின் பொருட்களையும் இருப்பு வைத்திருப்பதில்லை. பால் கூட எல்லா நேரமும் கிடைப்பதில்லை என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். எங்களுக்கு இவ்வளவு பெரிய பாலர் இங்கே தேவையில்லை. இது ஒரு முக்கிய பகுதி அல்ல, உட்புறமான இடம். அத்தியாவசிய பொருட்கள் கொண்ட ஒரு சிறிய ஆவின் கடை போதுமானது" என்று அவர்கள் கூறுகிறார்கள்.
அருகிலுள்ள சிறுவர் பூங்காவும் மோசமாக பராமரிக்கப்படுகிறது. ஆனால் சுகாதாரத்தை விட, குடியிருப்பாளர்களின் மிகப்பெரிய கவலை பாதுகாப்பு இல்லாதது தான். மேலும் குழந்தைகளுடன் இரவில் இங்கு வர முடியாது என்றும், இரவு நேரத்தில், சட்டவிரோத செயல்களின் கூடாரமாக இது மாறிவிடுகிறது" என்று அருகிலுள்ள மெட்ராஸ் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் அனு காந்தி கூறினார்.
ஒரு காலத்தில் தமிழ்நாட்டின் கூட்டுறவு பால் இயக்கத்தின் அடையாளமாக திகழ்ந்த அயனாவரத்தில் உள்ள ஆவினின் இந்த நிலம், தற்போது வேறு பயன்பாட்டிற்காக மாற்றப்படக்கூடிய நிச்சயமற்ற நிலையை எதிர்கொண்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.