Advertisment

பா.ஜ.க-வுக்கு எதிராக கூட்டணி அமைக்க முடியும்... விவசாயிகளுக்கு தண்ணீர் தர முடியாதா? வானதி சீனிவாசன் கேள்வி

கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, சிறுவாணி அணையின் நீர் மதத்தை உயர்த்தப்பட்டதால் கோவை மக்களுக்கு குடிநீர் பிரச்னையின்றி கிடைக்கும்.

author-image
WebDesk
New Update
Vanathi

வானதி சீனிவாசன்

பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி ஸ்ரீனிவாசன் சந்திப்பில் கூறுகையில்,

Advertisment

1000 பெண்களை தொழில் முனைவோர்களாக ஆக்கும் முயற்சியின் சுயம் என்கிற பெயரில் முதல் பணியாக இலவச தையல் இயந்திரங்கள் மற்றும் பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது. கோவை அம்மன்குளம் பகுதியில் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பெண்களுக்கு சமர்த் என்கிற மத்திய அரசின் தையல் பயிற்சி திட்டத்தை தொடங்கி வைத்துள்ளோம்.

பயிற்சி முடித்தபின், தொழிலை மேற்கொள்ளும் வகையில் இலவச தையல் இயந்திரங்கள் தனியார் உதவியுடன் வழங்கப்படும். குறிப்பாக பழங்குடியினர், பட்டியலின் மக்களிடம் இதுபோன்ற திட்டங்களை எங்கள் பகுதியில் நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் அடிப்படையில், இதுவரை 8 இடங்களில் பயிற்சி தொடங்கியுள்ளோம்.

தாய்ப்பால் வாரம் கொண்டாடி வரும் நிலையில், கடந்த அரசு ஒவ்வொரு பேருந்து நிலையத்திலும் பெண்கள் தாய்ப்பால் கொடுக்கும் வகையில் பேருந்து நிலையத்தில் தாய்ப்பால் கொடுக்க அறை ஏற்படுத்தப்பட்டது. ஆனால் கோவை மத்திய பேருந்து நிலையத்தில் பெண்கள் தாய்ப்பால் கொடுக்க அமைக்கபப்ட்டுள்ள அறை  நீண்ட நாட்களாக மூடப்பட்டுள்ளதுடன், பயன்படுத்தாமல் மூடப்பட்டுள்ளது.

இங்கு நான் வருகிறேன் என்று அறிந்தவுடன், அந்த அறை தூய்மை செய்யப்பட்டது. இதுதொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டபோது, உள்ளே சென்று மது அருந்த பயன்படுத்துவதால், அசுத்தம் செய்வதால் மூடப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். மாநகராட்சி, உள்ளாட்சி நிர்வாகங்கள் இளம் தாய்மார்கள் பயன்படுத்தும் வகையில் சரியாக பயன்படுகிறதா என்பதை பார்க்க வேண்டும்.சமூக நீதி அரசு, பெண்களுக்கான அரசு என சொல்லும் முதல்வர், பெண்களுக்கு பேருந்து பயணத்தை கொடுத்தேன் என பெருமையாக சொல்லும் முதல்வர், பேருந்து நிலையத்தில் தாய்ப்பால் கொடுக்கும் அறையை சரியாக இயங்குகிறதா என பார்த்து, அறையை ஆரோக்கியமாக அறையாக மாற்ற கவனத்தில் எடுத்துக்கொண்டு நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் குறிப்பிட்ட பகுதியை அழகு செய்வதற்கு மட்டுமின்றி, அந்த பொது இடத்தில் கழிவறை, தாய்ப்பால் கொடுக்கும் அறை  ஏற்படுத்த மாநகராட்சி ஆணையாளரிடம் பேச உள்ளேன், பெண்களுக்கு இலவசமாக பேருந்து என அறிவிக்கப்பட்டு விட்டு, அந்த பகுதியிலிருந்து முழுவதுமாக பேருந்தை நீக்கிவிடுகின்றனர். வாக்குறுதிகள் இல்லை, வசதிகள் தான் பெண்களுக்கு தேவை  இந்த கடிதத்தை ஐ, டி, ஏ , என் புள்ளி ராஜாக்களுடன் கைக்கோர்த்து நிற்காமல், மோடிக்கு எதிராக முழக்கமிடாமல், காவிரி பிரச்னைக்கு அருகில் மேடையில் உட்கார்ந்து பேசும் நேரத்தில் பேசி முடித்து விடாமல், கர்நாடகாவில் பாஜக அரசு இருக்கும் வரை காவிரி பிரச்னை மக்களை பாதிக்காமல் பார்த்துக்கொண்டது.

இதுதான் காங்கிரஸ், திமுகவின் இரட்டை நிலைப்பாடு. பக்கத்தில் உள்ள மாநிலத்தில் மோடிக்கு எதிராக கூட்டணி அமைக்க தெரிகிறது, விவசாயிகளுக்கு காவிரி நீரை பெற்று தர முடியாதா? இதற்கு கடிதம் வேற எழுத வேண்டுமா? மாநிலத்தின் முதல்வர் விவசாயிகளை காப்பாற்றுகிற லட்சணமா?  கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, சிறுவாணி அணையின் நீர் மதத்தை உயர்த்தப்பட்டதால் கோவை மக்களுக்கு குடிநீர் பிரச்னையின்றி கிடைக்கும். 13-15 நாட்களுக்கு ஒருமுறை தான் குடிநீர் வருகிறது.

குளம் என்று பெயர் தான், ஆனால், குடிக்க நீர் இல்லை. சிறுவாணி அணையின் நீர் மட்டம் உயர்த்த மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், இதுதொடர்பாக பாஜக மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுக்கும், கம்யூனிஸ்ட் கட்சியுடன் கைக்கோர்த்து உள்ள முதல்வர் கேரளா அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி கோவை மக்களின் தாகத்தை தீர்க்க வேண்டும்.ஒட்டுமொத்தமாக அரிசி இருப்பின் நிலையை பார்த்து தான் மத்திய அரசு அரிசி ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அரிசி அதிகமாக ஏற்றுமதியாகி விட்டதால், நம் மக்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விடக்கூடாது என்பதால் தான் இந்த நடவடிக்கையை மேற்கொள்ளண்டுள்ளது. நெல் விளைச்சல் அதிகமாக வந்து அரிசி தேவையான அளவு கையிருப்பு வந்தவுடன் இந்த உத்தரவை மத்திய அரசு மாற்றிக்கொள்ளும் என இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பி.ரஹ்மான் கோவை மாவட்டம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vanathi Srinivasan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment