கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலை சார்ந்த ஆரோக்கியம் என்பவற்கு சொந்தமான மாத வேளாங்கண்ணி என்ற விசைப்படகில் தமிழகம் மற்றும் வட மாநிலத்தைச் சேர்ந்த 16 மீனவர்கள் இம்மாதம் 25ஆம் தேதி குளச்சல் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்குள் மீன் பிடிக்க சென்றிருந்தனர் . அந்த மீனவர்கள் நேற்று (செப் 29)தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு ஆள் கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென விசைப்படகு கடலுக்குள் மூழ்கிய நிலையில், படகில் இருந்த மீனவர்களின் 13 நபர்கள் கடலிலே குதித்து உயிர் தப்பினர். ஆனால் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலை சார்ந்த ஆரோக்கியம் மற்றும் ஆன்றோ, கொட்டில்பாடை சார்ந்த பயஸ் ஆகிய மூன்று மீனவர்கள் படக்கோடு கடலுக்குள் மூழ்கியுள்ளனர். படகு முழுவதும் மூழ்கிய நிலையில் நடு கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 13 மீனவர்களை சக மீனவர்கள் விசைப்படகில் காப்பாற்றப்பட்டு கரை சேர்ந்தனர்.
இதனிடையே விசைப்படகோடு கடலுக்குள் மூழ்கிய மூன்று மீனவர்களையும் தேடும் பணியில் மீனவர்களும் இந்திய கடலோர காவல் துறை அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனர். தூத்துக்குடியில் முத்துக்குளிக்கும் மீனவர்களின் உதவியுடன் கடலில் மூழ்கிய 3 மீனவர்களின் உடல்களையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தமிழக அரசு கடலில் மூழ்கிய மீனவர்கள் படகை மீட்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாயமான மூன்று மீனவர்களை மீட்பதற்கும் அவருடைய குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என தெற்காசிய மீனவர் தோழமை தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.
த.இ.தாகூர்., குமரி மாவட்டம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“