மானாமதுரை வழியாக மைசூர் - செங்கோட்டை மற்றும் செங்கோட்டை - மைசூர் இடையே சிறப்பு விரைவு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில்களில் படுக்கை வகுப்பு பெட்டி - 6, மூன்று அடுக்கு குளிர்சாதன பெட்டி - 2, இரண்டு அடுக்கு குளிர்சாதன பெட்டி - 2, முன்பதிவு இல்லாத பெட்டி - 6 இணைக்கப்பட்டுள்ளது
அதன்படி, வண்டி எண் : 06241 மைசூர் - செங்கோட்டை சிறப்பு விரைவு ரயில் 04/09/2024 (புதன்) மற்றும் 07/09/2024 (சனி) ஆகிய தேதிகளில் மைசூர் ரயில் நிலையத்தில் இருந்து இரவு 9:20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் நள்ளிரவு 12:30 மணிக்கு கே.எஸ்.ஆர் பெங்களூர் ரயில் நிலையத்திற்கும், சிவகாசி ரயில் நிலையத்திற்கு மதியம் 2:20 மணிக்கு வந்து சேரும்.
மறுமார்க்கத்தில் வண்டி எண் : 06242 செங்கோட்டை - மைசூர் சிறப்பு விரைவு ரயில் 05/09/2024 ( வியாழன்) மற்றும் 08/09/2024 ( ஞாயிறு) ஆகிய தேதிகளில் சிவகாசி ரயில் நிலையத்தில் இருந்து இரவு 9:35 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10:50 மணிக்கு கே.எஸ்.ஆர் பெங்களூர் ரயில் நிலையத்தையும், மதியம் 2:20 மணிக்கு மைசூர் ரயில் நிலையத்தையும் சென்றடையும்
இந்த ரயில்களானது செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர், பாம்பகோவில்சந்தை, சங்கரன்கோவில், இராஜபாளையம்,ஶ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், குப்பம், பங்காருபேட்டை, கிருஷ்ணராஜபுரம், கே.எஸ்.ஆர். பெங்களூர், கெங்கேரி, ராமநகரம்,மத்தூர்,மாண்டியா, மைசூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“