கொரோனா தொற்று பொது முடக்கநிலை காரணமாக சிக்கித் தவிக்கும் மக்களை அனுப்பி வைக்க அல்லது அழைத்து வருவதற்கு சம்பந்தப்பட்ட மாநிலங்கள் விடுக்கும் கோரிக்கையின் அடிப்படையில் ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
புறப்பட்ட இடத்தில் இருந்து சேருமிடத்துக்கு நேரடியாக சென்று சேருவதாக (இடையில் வேறு எங்கும் நிற்காமல்) இந்த ரயில் சேவைகள் இருக்கும்.
இதனையடுத்து பீகார், ஜார்கண்ட், மேற்க வங்காளம, உத்தர பிரேதேசம் போன்ற மாநிலங்கள் தங்களது தொழிலாளர்கள், சுற்றுலாவாசிகள், மாணவர்களை தங்கள் மாநிலங்களுக்கு அழைத்து சிறப்பு ரெயில்கள் ஏற்பாடு செய்தது.
தமிழகத்தில் சிக்கித் தவிக்கும் ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் இதர மக்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்ல வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து வந்தனர்.
இந்நிலையில்,தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டம் கட்பாடியிலிருந்து ஜார்க்கண்டின் ராஞ்சிக்கு 1,136 பயணிகளைக் கொண்ட சிறப்பு ரயில் இயக்கTப்பட்டதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர்.
இந்த சிறப்பு ரயிலில் பயணம் செய்த அனைவரும் வேலூரில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற வந்த நோயாளிகள் மற்றும் அவர்களது உதவியாளர்கள் என்றும் கூறப்படுகிறது.
இது குறித்து அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், " பயணிகளின் உடல்நிலை பரிசோதனை செய்யப்பட்டு, அறிகுறிகள் ஏதும் இல்லாதவர்களை மட்டுமே பயணம் செல்ல அனுமதிக்கப் பட்டார்கள். கிருமி நீக்கம் செய்யப்பட்ட 16 பேருந்துகளில், தனி நபர் இடைவெளி விதிகளையும், மற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்றி காட்பாடி ரயில் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர். தமிழக அரசின் சார்பில், பயணிகளுக்கான உணவு மற்றும் குடிநீர் வழங்கப்பட்டது. மேலும், புலம்பெயர் தொழிலாளர்கள் போன்ற இதர மக்களால் கூட்டம் கூடமால் இருக்க, சிறப்பு ரயில் இயக்கம் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டது" என்று தெரிவித்தார்.
இந்த சிறப்பு ரயில்களில், மாநில அரசுகளால் அழைத்து வரப்பட்டு, வசதிகள் செய்து கொடுக்கப்பட்ட பயணிகளை மட்டுமே ரயில்வே அனுமதிக்கிறது. வேறு எந்த பயணிகள் குழுவினரோ அல்லது தனி நபரோ ரயில் நிலையத்திற்கு வர அனுமதி கிடையாது. எந்த ரயில் நிலையத்திலும், எந்த பயணச் சீட்டும் விற்கப்படவில்லை. மாநில அரசுகளின் வேண்டுகோளுக்கேற்ப இயக்கப்படும் ரயில்களைத் தவிர, வேறு எந்த ரயில்களையும் இரயில்வே இயக்கவில்லை என்றும் அந்த அதிகாரி தெளிவுபடுத்தினர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil