scorecardresearch

முதல்வர் கோப்பை போட்டியில் வெல்பவர்களுக்கு ஸ்டாலின் கையால் பரிசு: அமைச்சர் உதயநிதி

ரூ.25 கோடி செலவில் தமிழ்நாட்டில் முதல் முறையாக முதலமைச்சர் கோப்பை போட்டி பல்வேறு மாவட்டத்தில் நடத்தி உள்ளோம்

dmk, youth wing, dmk youth wing, udhyanidhi, ministers,

திமுக இளைஞர் அணி மாவட்ட, மாநகர அமைப்பாளர் துணை அமைப்பாளர் ஆகிய பொறுப்புகளுக்கான நேர்காணல் அரியலூர், பெரம்பலூர், திருச்சி வடக்கு, தெற்கு, மத்திய மாவட்டங்களில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்க தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருச்சிக்கு விமானம் மூலம் வந்தார். 

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்,

விளையாட்டு துறைக்கு முதல்வரிடம் பல கோரிக்கை வைக்க உள்ளோம். ரூ.25 கோடி செலவில் தமிழ்நாட்டில் முதல் முறையாக முதலமைச்சர் கோப்பை போட்டி பல்வேறு மாவட்டத்தில் நடத்தி உள்ளோம். விரைவில் இதற்கான இறுதி போட்டி நடத்தி சென்னையில் முதலமைச்சர் கையால் விளையாட்டு வீரர்களுக்கு பரிசுகள் வழங்க உள்ளோம்.

தஞ்சை செங்கிப்பட்டி அருகே ஸ்பிர்ட்ஸ் சிட்டி எப்போது கொண்டு வருவீர்கள் என்ற கேள்விக்கு? அதை பார்வையிடத்தான் வந்துள்ளேன், விரைவில் விபரங்களை கூறிகிறேன் என்று கூறினார். இதன் பின்னர் கார் மூலம் அரியலூர் தஞ்சை மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

க.சண்முகவடிவேல்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tamilnadu sports minister udhayanithi press meet in trichy