/tamil-ie/media/media_files/uploads/2023/01/Sri-ravi-Shankar.jpg)
'வாழும் கலை' அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ரவிசங்கர் சென்ற ஹெலிகாப்டர் அவசரமாக சத்தியமங்கலம் அருகே கடம்பூர் மலைப்பகுதியில் தரையிறக்கப்பட்டது
'வாழும் கலை' அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ரவிசங்கர் இன்று காலை கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தில் ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டுள்ளார். இந்த ஹெலிகாப்டர், ஈரோடு மாவட்டத்திற்கு வந்தபோது, திடீரெ சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு அருகே கடம்பூர் மலைப்பகுதியில், உகினியம் என்ற கிராமத்தின் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் தரையிறக்கப்பட்டது.
காலை 10.30 மணிக்கு பள்ளி வளாகத்தில் திடீரென ஹெலிகாப்டர் தரையிறங்கியது அப்பகுதிய மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மோசமான வானிலை மற்றும் கடுமையான பனிமூட்டம் காரணமாக பாதை தெளிவாக தெரியாத காரணத்தினால், ஹெலிகாப்டர் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்த ஹெலிகாப்டரில் வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ரவிசங்கர் உள்ளிட்ட 4 பேர் இருந்தனர்.
ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்ட நிலையில், சுமார் 1 மணி நேரம் தனது உதவியாளர்கள் 4 பேருடன் காத்திருந்த ஸ்ரீ ரவிசங்கர், வானிலை சீரான பின் ஹெலிகாப்டர் மூலம் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். பனிகாலத்தில் ஆகாய மார்கமான போக்குவரத்துக்கள் அதிகம் பாதிக்கப்படுவது வழக்கமான ஒன்றுதான் என்றாலும் கூட, பள்ளி வளாகத்தில் திடீரன ஹெலிகாப்டர் தரையிறங்கியது அப்பகுதி மக்களை குழப்பத்தில் ஆழ்த்தியது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.