சனாதன தர்மம் கழுகு போன்றது. அதற்கு எதிராக பேசும் கும்பல் ஈசல் போன்றது. கழுகுக்கு இணையாக ஈசல் பறக்க நினைத்தால் அதன் சிறகுகள் கீழே விழுந்து எறும்புக்கு நேரும் நிலைதான் ஏற்படும் என மன்னார்குடி செண்டலங்கார ஜீயர் திருச்சியில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியுள்ளார்.
திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள ஜீயர் மடத்தில் செய்தியாளர்களை சந்தித்த மன்னார்குடி சென்டெலங்கார ஜீயர் கூறுகையில்.
அரசாங்கம் என்பது அரசாங்கமாக இருக்க வேண்டும். மாறாக ஜாதி, மதம் பார்ப்பதாக இருக்கக்கூடாது. உதயநிதிக்கு தைரியமிருந்தால் சர்ச், மசூதிக்குள் சென்று அனைத்து மதமும்-ஜாதியும் ஒன்று என சொல்லி பார்க்கட்டும். சனாதன தர்மம் குறித்து பேசிய உதயநிதி தலைக்கு ரூ.10 கோடி விலை நிர்ணயித்து வடமாநில சாமியார் பேசியுள்ளதை தவறு என்று சொல்ல மாட்டேன்.
சனாதன தர்மம் என்பது எங்கள் தாய்க்கு இணையானது. அதுகுறித்து தவறாக பேசிய உதயநிதிக்கு வடமாநில ஆச்சாரியார் தக்க பதிலடி கொடுத்துள்ளார். சனாதனம் என்பது பழமையை குறிப்பது. அதன் நடைமுறைகளை மாற்றக்கூடாது. சனாதன தர்மத்துக்குள் ஜாதியை புகுத்தக்கூடாது. அப்படி பூட்டினால் அதற்கான தண்டனையை அனுபவிப்பர் என செண்டலங்கார ஜீயர் தெரிவித்துள்ளார்.
க.சண்முகவடிவேல்
“தமிழ்இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“