தமிழக அரசுக்கு அதிக வருவாய் அளிப்பதில் டாஸ்மாக் கடைகளுக்கு முக்கிய பங்கு உண்டு. ஆனால் தற்போது கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், டாஸ்மாக் கடைகளுக்கு காலவரையற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகம் பெரும் வருவாய் இழப்பை சந்தித்து வரும் நிலையில், இந்த வருவாய் இழப்பை ஈடு செய்யும் வகையில், தமிழக அரசு சார்பில் தனி பார்கள் திறக்க உள்ளாதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தமிழக அரசின் இந்த முயற்சிக்கு பாஜக தலைவரும் முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சருமான அன்புணி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான விற்பனை நிலையங்களுடன் இணைக்கப்பட்ட முழுமையான பார்கள் மற்றும் தனியார் பார்கள் செயல்பட்டு வரும் நிலையில், தற்போதைய திமுக அரசு தனி பார்களை திறக்க முயற்சி செய்து வருகிறது. இந்த முடிவு திமுகவின் அடிப்படைக் கொள்கைகளுக்கு எதிரானது என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில், 2016 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னர் ஒரு தேர்தல் அறிக்கையை வெளியிட்டு, மாநிலத்தில் மொத்த டாஸ்மாக் கடைகளுக்கும் தடை விதிக்க வேண்டும் என்று அறிக்கை வெளியிடப்பட்டது. ஆனால் தற்போது முதல்வர் ஸ்டாலினின் தலைமையிலான திமுக அரசு இந்த பார்களை திறக்க முயற்சி செய்கிறது. திமுக அரசு இந்த முயற்சியை முன்னெடுத்து சென்றால், பாமக சார்பிலல், மாநில அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மாநில அரசுக்கு எழுதிய கடிதத்தில், தனிபார்கள் திறக்கும் இந்த நடவடிக்கை குடியிருப்பு பகுதிகளையும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஒரு பெரிய பிரச்சினையை உருவாக்கும். இது மாநில அரசுக்கு கடுமையான சட்டம் ஒழுங்கு பிரச்சினையாக மாறக்கூடும். இதனால் தி.மு.க தலைவர் இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்று கோரக்கை விடுத்துள்ளார். மேலும் இந்த தனி பார்கள் தொடர்பாக டாஸ்மாக் மாநில மார்க்கெட்டிங் கார்ப்பரேஷன் லிமிடெட் அதிகாரிகளுடன் தமிழக அரசு தொடர்ச்சியான சந்திப்புகளை நடத்தியுள்ளதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். கொரோனா தொற்றுநோயின் தாக்கம் காரணமாக சரிந்து வரும் மாநிலத்தின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும், வகையில் மதுபான விற்பனையிலிருந்து வருவாய் பங்கை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டு, இந்த திட்டத்திற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
ஆனால் தமிழகம் முழுவதும் ஏற்கனவே பல தனியார் பார்கள் செயல்பட்டு வருகிறது, ஆனால் அவை அனைத்தும் தமிழ்நாடு மதுபான உரிம விதிகளின்படி ஹோட்டல் அறைகளுடனும், டாஸ்மாக் விற்பனை நிலையங்களுடன் இணைக்கப்பட்டுள்ள மேலும் தனியார் மதுக்கடைகளில் இருந்து மாநில அரசு ஆண்டுக்கு ரூ .440 கோடி வருவாய் கிடைக்கிறது. தனித்தனி பார்கள் திறக்கப்பட்டால், மாநில அரசின் மதுபான விற்பனை வருவாய் பங்கை மூன்று மடங்கிற்கும் மேலாக அதிகரிக்க வாய்ப்புள்ளது. முந்தைய அதிமுக ஆட்சியின் போது இதேபோன்ற முன்மொழிவு எழுப்பப்பட்டதாக ஒரு மூத்த டாஸ்மாக் அதிகாரி கூறினார், ஆனால் பல காரணங்களால் அந்த முடிவை செயல்படுத்தவில்லை.
ஏ.ஐ.டி.யு.சியுடன் இணைந்த டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் என்.பெரியசாமி, "கடந்த பல ஆண்டுகளாக மாநில அரசு மதுபான விற்பனை நிலையங்களுடன் இணைக்கப்பட்டுள்ள அனைத்து டாஸ்மாக் பார்களையும் மூடிவிட்டு முழுமையான பார்களை அனுமதிக்க வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம். பல பார்கள். டாஸ்மாக் விற்பனை நிலையங்களுடன் இணைக்கப்பட்டுள்ளதால் அத்து மீறல்களின் மையங்களாக மாறியுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.
எஸ்.ஜே.எம் மாநிலப் பிரிவின் இணைச் செயலாளர் மகேஷ் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், "தனியார் தனித்தனி பார்கள் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை உருவாக்கும். எஸ்.ஜே.எம் எப்போதும் மதுவை ஊக்குவிப்பதை எதிர்த்து வருகிறது, இப்போது திமுக அரசு இலவசமாக மதுபானம் ஓட்ட திட்டமிட்டுள்ளது, இது மாநிலத்தில் பெரும் அராஜகத்திற்கு வழிவகுக்கும் என கூறியுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.