தமிழ்நாட்டில் சமீபத்தில் நடந்த என்கவுன்டர் மரணங்கள் மற்றும் குண்டர் குடும்பத்திற்கு உதவி ஆணையர் மிரட்டல் விடுத்தது தொடர்பாக சென்னை காவல்துறையை மாநில மனித உரிமை ஆணையம் (SHRC) கண்டித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களில் ஒரு சில ரவுடிகள் எண்கவுண்டர் செய்யப்பட்டனர். இது தொடர்பான தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த எண்கவுண்டர்கள் குறித்து மாநில மனித உரிமை ஆணையம் அதிருப்தி தெரிவித்துள்ளது. மேலும் சென்னை திருவொற்றியூர் காவல் உதவி ஆணையர் இளங்கோவன், அப்பகுதியை சேந்த குண்டர் குடும்பத்திற்கு மிரட்டல் விடுத்ததாக எழுந்த புகார் மீதாத விசாரணை நேற்று முன்தினம் (அக்டோபர் 7) நடைபெற்றது.
மாநில மனித உரிமை ஆணயத்தின் தலைவரும், கேரள உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியுமான மணிக்குமார், உறுப்பினர் வி.கண்ணதாசனுடன் மேற்கொண்ட இந்த விசாரணையில், காவல் உதவி ஆணையர் இளங்கோவனை கண்டித்துள்ளார். இந்த வழக்கு தொடர்பான வெளியான ஒரு வீடியோ பதிவில், திருவெற்றியூரில் உள்ள ஒருவரின் மனைவியிடம், உங்கள் கணவர் குற்றச் செயல்களில் ஈடுபடத் துணிந்தால், அவரது கைகால்களை உடைத்து விடுவதாகவும், அவர் ஏதேனும் கொலை செய்தால், அவரை அடித்து நொறுக்குவதாகவும் உதவி ஆணையர் கூறியள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு உதவி ஆணையர் குண்டர்களின் வீட்டில் இது குறித்து பேசியபோது, அந்த வீட்டில் பக்கத்தில் வசிக்கும் ஒருவர் இந்த வீடியோவை பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ பதிவு வைரலாக பரவியதை தொடர்ந்து, புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரை விசாரித்த மாநில மனித உரிமை ஆணையம் தலைவர் உதவி ஆணையரை கண்டித்தார். இதற்கு பதில் அளித்த உதவி ஆணையர், மேலும் குற்றச் செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்கவே இப்படி ஒரு எச்சரிக்கை விடுத்ததாக கூறியுள்ளார்.
அவரின் பதிலை ஏற்காத மாநில மனித உரிமை ஆணையம், அவருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது. கடந்த ஜூலை 5-ந் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் கே.ஆம்ஸ்ட்ராங் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட பிறகு, சென்னை காவல்துறை என்கவுன்டர் நடவடிக்கைகளில் மூன்று பேர் மரணமடைந்துள்ளனர். ஆம்ஸ்ட்ராங் கொலையில் முக்கிய குற்றவாளியான திருவேங்கடம், கொலையில் நேரடியாக ஈடுபட்டதாகக் கூறி, சுட்டுக் கொல்லப்பட்டார்.
மாதவரம் ஏரிக்கரை வளாகத்தில் சாட்சியம் சேகரிக்க கொண்டு வரப்பட்டபோது திருவேங்கடத்தின் கைவிலங்குகள் கழற்றப்பட்டதால், அவர் தங்களை தாக்க முயன்றதாகவும், இதனால் அவரை சுட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. சில நாட்களுக்குப் பிறகு, மற்றொரு காக்காதோப்பு பாலாஜி, வியாசர்பாடியில் சென்னை காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். தங்களை தாக்க முயன்றதால், தற்காப்புக்காக துப்பாக்கிச்சூடு நடத்தியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
மற்றொரு சம்பவத்தில் ஆந்திராவில் கைது செய்யப்பட்டு சென்னைக்கு அழைத்து வரப்பட்ட பாதாள உலக தாதா ‘சீசிங்’ ராஜாவை சென்னை போலீசார் சுட்டு வீழ்த்தினர். இந்த கொலைகளை கவனத்தில் கொண்ட, மாநில மனித உரிமைகள் ஆணையம், சென்னை நகர போலீஸ் கமிஷனர் எம்.அருணுக்கும் சம்மன் அனுப்பியுள்ளது. காவல்துறை ஆணையராகப் பதவியேற்ற அருண், ஜூலை 7ஆம் தேதி செய்தியாளர்கள் சந்திப்பின்போது, ரவுடிகளை அவர்கள் புரிந்துகொள்ளும் மொழியில் காவல்துறை கையாளும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கு அக்டோபர் 14-ம் தேதி மாநில மனித உரிமைகள் ஆணையம் முன்பாக சென்னை நகர ஆணையர் விசாரணை நடத்த உள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“