மாநில பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியர்களை நியமிக்க தமிழ்நாடு மாநில தகுதித் தேர்வை (TNSET) அண்ணாமலை பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. அதில் இடஒதுக்கீட்டிற்கான வகைகளில் கிரீமிலேயர் அல்லாத ஒபிசி பிரிவினருக்கு ஒரு வகை சேர்க்கப்பட்டுள்ளது, இது தேர்வு எழுதக் கூடிய ஆசிரியர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் தமிழ்நாடு அரசாங்கத்தின் 69% இடஒதுக்கீடு கொள்கையின் கீழ், இது போன்ற கிரீலேயர் மற்றும் கிரீமிலேயர் அல்லாத ஒபிசி பிரிவு என்ற வகைப்பாடு இல்லை. இது மத்திய அரசு இடஒதுக்கீட்டு கொள்கைகளில் மட்டுமே உண்டு. இதுவே தற்போதைய குழப்பத்திற்கு காரணம்.
ஆசிரியர் தகுதித் தேர்வுகளுக்கு மத்திய அரசின் இடஒதுக்கீட்டு விதிகள் குழப்பத்தை உருவாக்குகிறது
தமிழ்நாடு மாநில தகுதித் தேர்வில் (TNSET) இடஒதுக்கீடு செய்வதற்கான வகையாக கிரீமிலேயர் அல்லாத ஒபிசி பிரிவு சேர்க்கப்படுவது ஆயிரக்கணக்கான தேர்வை எழுதக் கூடிய ஆசிரியர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏனென்றால், மாநில அரசின் 69% இடஒதுக்கீடு கொள்கையின் கீழ், மத்திய அரசின் இடஒதுக்கீட்டு கொள்கைகளில் உள்ளது போல் “கிரீமிலேயர்” மற்றும் “க்ரீமிலேயர் அல்லாத ” ஒபிசி போன்ற வேறுபாடுகள் இல்லை. இருப்பினும், மாநில பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியர்களை நியமிக்க டி.என்.எஸ்.இ.டி 2021 ஆம் ஆண்டிற்கான தேர்வை நடத்தி வரும் அண்ணாமலை பல்கலைக்கழகம், விண்ணப்ப படிவங்களில் இந்த வேறுபாட்டை உருவாக்கியுள்ளது.
ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை பதிவு செய்வது திங்கட்கிழமை முதல் தொடங்குகிறது. முதுநிலை படிப்புகளில் குறைந்தபட்சம் 55% மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றவர்கள் இந்த தேர்வை எழுத தகுதி பெற்றவர்களாகும். பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்த தேர்வர்களுக்கு 5% தளர்வு உண்டு. கடந்த ஆண்டு வரை, இந்த 5% தளர்வு பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் இனத்தவர்கள் மற்றும் பழங்குடியினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த தேர்வர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த ஆண்டு, அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் அறிவிப்பில் எஸ்சி, எஸ்டி மற்றும் பிற்படுத்தப்பட்டோர் (கிரீமிலேயர் அல்லாத ஓபிசி) என தேர்வர்களுக்கான வகை குறிப்பிடப்பட்டுள்ளது.
அறிவிப்பின் முதல் பாதியில் கிரீமிலேயர் அல்லாத ஓபிசி பிரிவினருக்கு 5% தளர்வு அளிப்பதைக் குறிப்பிடுகையில், இரண்டாவது பாதியில் அத்தகைய குறிப்புகள் எதுவும் இல்லை. அதற்கு பதிலாக, கட்டணம் மற்றும் தேர்வு முடிவுகளைப் பற்றி குறிப்பிடும்போது அறிவிப்பில் MBC மற்றும் BC ஆகிய சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது குழப்பத்தை மேலும் அதிகரித்துள்ளது.
ஓபிசி பணியாளர் நலச் சங்கத்தின் அகில இந்திய கூட்டமைப்பின் சார்பில் கூறுகையில், தமிழகத்தின் தற்போதைய 69% இடஒதுக்கீடு விதிப்படி, கிரீமிலேயர் அல்லாத ஒபிசி என்று அழைக்கப்படும் எந்த வகையும் இல்லை. மத்திய அரசாங்கத்தின் இந்த இட ஒதுக்கீட்டு கருத்தை மாநில அரசு ஏற்கவில்லை.
இது குறித்து தமிழ்நாடு மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், இந்த விவகாரம் திங்கள்கிழமை காலை தனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதாகவும், அதை சரிபார்க்குமாறு அதிகாரிகளை கேட்டுக் கொண்டதாகவும் கூறினார்.
அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவி காலியாக இருப்பதால், விளக்கம் பெற விண்ணப்ப செயல்முறைகளை கண்காணிக்க அமைக்கப்பட்ட குழுவை தொடர்பு கொள்ள முயற்சிக்கிறோம், இது குறித்து விரைவில் தெளிவுபடுத்தப்படும். என்றும் அமைச்சர் கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.