அரசு ஊழியர்கள் தங்களது விடுமுறையை சரண்டர் செய்து அதன்மூலம் பெரும் ஈட்டிய விடுப்பு சம்பவம் தற்காலிகமான நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மனிதவள மேம்பாட்டுத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு கொரோனா காலகட்டத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டது. இதில். கொரோனா நிவாரண பணிகளுக்காக தொழிலதிபர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலரிடம் இருந்து நன்கொடைகள் பெறப்பட்டது. அப்போது அரசு ஊழியர்கள் தங்களது விடுமுறையை சரண்டர் செய்து பெறப்படும ஈட்டிய சம்பளத்தை கடந்த மார்ச் 31 ந்தேதி வரை நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பு கடந்த மாத இறுதியுடன் முடிவுக்கு வந்த நிலையில், தற்போது மறு உத்தரவு வரும்வரை அரசு ஊழிர்களின் ஈட்டு சம்பளம் நிறுத்தி வைக்கப்படுவதாக மனிதவள மேம்பாட்டுத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. ஆண்டுக்கு 15 நாட்கள் கிடைக்கும் இந்த விடுமுறை சம்பளம் தற்போது கொடுக்க முடியாது என்றும், ஏற்கனவே கடந்த ஆண்டு ஒரு வருடம்நிறுத்தி வைக்கப்பட்டிருந்துந்த நிலையில் தற்போது மறு உத்தரவு வரும் வரை இதே நிலை தொடரும் என்று கூறப்பட்டு்ளளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “