Advertisment

Tamil Nadu news today updates: 'பொருளாதார மந்தநிலை குறித்து அனைத்து துறையினருடனும் ஆலோசனை' - அமைச்சர் நிர்மலா சீதாராமன்

Tamil Nadu news today updates: தமிழகம் மற்றும் இந்தியாவில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகள், வானிலை, பெட்ரோல், டீசல் விலை நிலவரம் ஆகியவற்றை தெரிந்துகொள்ள இந்த லைவ் பிளாக்கில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu news today updates

Tamil Nadu news today updates

Tamil Nadu news today updates: தமிழகம் மற்றும் இந்தியாவில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகள், வானிலை, தங்கம், வெள்ளி, பெட்ரோல், டீசல் விலை நிலவரம் ஆகியவற்றை இந்த லைவ் பிளாக்கில் காணலாம்.

Advertisment

தமிழக அரசின் ஐஏஎஸ், ஐபிஎஸ் பயிற்சி நிலையத்தில் அளிக்கப்படும் பயிற்சிகளை வலைதளத்தில் நேரடியாக ஒளிபரப்ப ரூ.33 லட்சம் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன் மூலம், பயிற்சி மையத்தில் படிக்கும் மாணவர்கள் மட்டுமில்லாமல் பரந்த அளவில் அரசு பயிற்சி மையம் அளிக்கும் பயிற்சி சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குரூப் - 4 அரசுப் பணிகளுக்கான டி.என்.பி.எஸ்.சி தேர்வுகள் இன்று நாடு முழுவதும் நடைபெறுகிறது. தமிழக அரசில் காலியாக உள்ள 6,491 குரூப் 4 பணிகளுக்காக விண்ணப்பித்திருந்த தேர்வர்கள் தமிழகம் முழுவதும் சுமார் 3 ஆயிரம் மையங்களில் 16 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதுகின்றனர். இந்த தேர்வு காலை 10 மணி முதல் மதியம் 1 மணிவரை நடைபெறுகிறது. தேர்வுக்கு தேர்வர்கள் அரை மணிநேரம் முன்னதாக வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இன்று சென்னையில் பெட்ரோல், டீசல் நேற்றைய விலையில் மாற்றமின்றி, பெட்ரோல் லிட்டருக்கு ரூ.74.80-க்கும், டீசல் லிட்டருக்கு ரூ.68.94-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகம் மற்றும் இந்தியாவில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகள், வானிலை, தங்கம், வெள்ளி, பெட்ரோல், டீசல் விலை நிலவரம் ஆகியவற்றை தெரிந்துகொள்ள இந்த லைவ் பிளாக்கில் இணைந்திருங்கள்

Live Blog

Tamil Nadu and Chennai news today updates of weather, traffic, train services and airlines,

தமிழகம் மற்றும் இந்தியாவில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகள், வானிலை, பெட்ரோல், டீசல் விலை நிலவரம் ஆகியவற்றை இந்த லைவ் பிளாக்கில் காணலாம்.














Highlights

    22:05 (IST)01 Sep 2019

    பொருளாதார மந்தநிலை குறித்து ஆலோசனை - நிர்மலா சீதாராமன்

    பொருளாதார மந்தநிலை குறித்து, அனைத்து துறையினருடனும் ஆலோசனை நடத்தி வருவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

    சென்னை கலைவாணர் அரங்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வாகன உற்பத்திக்கான ஜி.எஸ்.டியை குறைப்பது குறித்து, ஜி.எஸ்.டி. குழுவே முடிவெடுக்கும் என்றும், நிதித்துறை சார்பில் அதற்கான பரிந்துரைகள் வழங்கப்படும் என்றும் கூறினார்.

    பொருளாதார மந்த நிலை காரணமாக, வாகன உற்பத்தி சரிவடைந்ததாகவும், மூன்றரை லட்சம் பேர் வேலையிழந்ததாகவும் கூறப்படுவதற்கு, எந்தவித புள்ளி விவரமும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார். தங்கத்தின் மீது இந்தியாவில் அதிக ஈர்ப்பு உள்ளதாகவும், உலக நாடுகளின் முதலீடுகளை பொருத்தே, விலை அதிகரித்து வருவதாகவும் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.

    21:19 (IST)01 Sep 2019

    KEW தாவரவியல் பூங்காவில் முதல்வர் பழனிசாமி

    லண்டனில் புகழ்பெற்ற KEW தாவரவியல் பூங்காவினை முதல்வர் பழனிசாமி பார்வையிட்டார்

    தமிழகத்தில் உள்ள தாவரவியல் பூங்காக்களை மேம்படுத்துவது பற்றியும், தாவரங்களை வேளாண் ஆராய்ச்சிக்காக எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றியும் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார்

    20:13 (IST)01 Sep 2019

    பிரதமர் மோடி பொருளாதார நிபுணர்களை கலந்தாலோசிக்க வேண்டும் - ஸ்டாலின்

    சரிந்து கொண்டிருக்கும் இந்திய பொருளாதாரம் உலக நாடுகள் மத்தியில் தலை நிமிர, பிரதமர் மோடி பொருளாதார நிபுணர்களை கலந்தாலோசித்து முனைப்பான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    19:17 (IST)01 Sep 2019

    வரும் வாரம் முதல் வாகன சட்ட திருத்தம்

    தமிழகத்தில் வரும் வாரம் முதல் வாகன சட்ட திருத்தம் அமலாகும் என தமிழக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும், இன்று வாகன சட்ட திருத்தம் அமலான நிலையில், தமிழகத்தில் மட்டும் பழைய சட்டம் கடைபிடிக்கப்பட்டது.

    18:50 (IST)01 Sep 2019

    மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு அதிகரிப்பு

    மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு வினாடிக்கு 10,000லிருந்து 13,000 கன அடியாக அதிகரிப்பு

    நீர் மட்டம் - 117.43 அடி

    நீர் இருப்பு - 89.43 டிஎம்சி

    டெல்டா பாசனத்திற்கான நீர் திறப்பு படிப்படியாக 18,000 கன அடியாக அதிகரிக்கப்படும் எனத் தகவல்

    18:31 (IST)01 Sep 2019

    மிதமான மழை முதல் கனமழை

    கோவை மற்றும் தர்மபுரி சுற்றுவட்டாரப்பகுதியில் மிதமான மழை பெய்து வருகிறது.

    கன்னியாகுமரி மாவட்டம் அழகியமண்டபம், தக்கலை, குளச்சல் சுற்றுவட்டார பகுதிகளில் லேசான முதல் கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தென்மேற்கு பருவமழை பொய்த்த நிலையில், கடந்த சில வாரங்களாக மழை பெய்துவருகிறது.

    18:27 (IST)01 Sep 2019

    ஆர்பிட்டரில் இருந்து லேண்டர் தனியாக பிரியும் - இஸ்ரோ

    நிலவின் இறுதி வட்டப்பாதைக்கு சற்று நேரத்தில் மாறுகிறது சந்திரயான்-2. நாளை ஆர்பிட்டரில் இருந்து லேண்டர் தனியாக பிரியும் என இஸ்ரோ அறிவித்துள்ளது. 

    18:04 (IST)01 Sep 2019

    வெளியானது 'வெறித்தனம்' பாடல்

    அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் 'பிகில்'படத்தின்  'வெறித்தனம்' எனும் பாடலின் லிரிக் வீடியோ இன்று வெளியாகியுள்ளது. இப்பாடலை விஜய் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

    17:58 (IST)01 Sep 2019

    ஆன்லைனில் வருமான வரி செலுத்தும் முறையில் புதிய சாதனை

    ஆன்லைனில் வருமான வரி செலுத்தும் முறையில் புதிய சாதனை நிகழ்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் ஆன்லைன் மூலமாக மட்டும் 49.29 லட்சம் பேர் வருமானவரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர் என மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.

    17:55 (IST)01 Sep 2019

    காங்கிரஸ் கட்சிக்குள் மோடி அணி

    பாஜக மூத்தத் தலைவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "காங்கிரஸ் கட்சிக்குள் மோடி அணி ஒன்று உருவாகி வருகிறது. மோடி அரசுக்கு பாராட்டு கிடைக்கும் என்று காங்கிரஸ் கட்சியினரிடம் இருந்து எதிர்பார்க்க முடியாது" என்று தெரிவித்தார். 

    17:18 (IST)01 Sep 2019

    தமிழிசைக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து

    தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசை சவுந்திரராஜனுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். வெளிநாடு சுற்றுப்பயணம் சென்றுள்ள அவர், லண்டனில் இருந்து தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, தமிழிசைக்கு வாழ்த்து தெரிவித்தார்.

    16:38 (IST)01 Sep 2019

    முதுநிலை படிப்பிற்கு மானவர்கள் தயக்கம்

    முதுநிலை படிப்புகளுக்கு நடத்தப்படும் தமிழ்நாடு பொது சேர்க்கையில் மாணவர்கள் பெரும் அளவில் அர்வம் காட்டவில்லை. இதில், மாநிலத்தில் மொத்தமாய் உள்ள 15,574 இடங்களில் 12,801 இடங்கள் நிரப்படாமல் இருந்துள்ளது. ஏன்… மிகவும் பிரபலமான சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் மொத்தம் உள்ள  2,198 இடங்களில், 895 இடங்கள் நிரப்பப்படாமல் இருந்தன.

    15:41 (IST)01 Sep 2019

    தமிழிசை சௌந்தரராஜன் பதவி விலகல்

    தெலங்கானாவின் முதல் பெண் அளுநராக நியமிக்கப்பட்ட தமிழிசை சௌந்தரராஜன் தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்தும், கட்சியின்  அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் விலகினார்.

    15:24 (IST)01 Sep 2019

    மன்மோகன் சிங் கருத்துகளை நான் ஆய்வு செய்வேன் - நிர்மலா சீதா ராமன்

    மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கைகளினால் இந்திய தனது வளர்ச்சி விகிதத்தில் மந்த நிலையை அடைந்து உள்ளது என்று முன்னாள் பிரதமரும், பொருளாதார நிபுணருமான  மன்மோகன் சிங் வீடியோ பதிவின் மூலம் கருத்து தெரிவித்திருந்தார்.

    இன்று,  சென்னை வந்திருந்த  நிர்மலா  சீதா ராமனிடம் இது பற்றி கருத்துக் கேட்டபோது -     கருத்துகளை ஆய்வு செய்ய அரசு தயாராக இருக்கிறது என்று தெரிவித்தார். 

    14:33 (IST)01 Sep 2019

    ரெட் லேபில் விளம்பரத்தில் என்ன தான் பிரச்னை ?

    உற்பத்தி நிறுவனமான இந்துஸ்தான் யூனிலீவர் லிமிட்டடின் தேயிலை தயாரிப்பான ரெட் லேபிள்  விளம்பரம் தற்போது ட்விட்டரில் சூடாக ஆரம்பித்துள்ளது . அவ் விளம்பரம் தத்துவ பாணியிலும், ஆழமாகவும் இருப்பதால்  கார சார விவாதங்கள் ட்விட்டரில் போய்க்கொண்டிருகின்றன.  

    13:48 (IST)01 Sep 2019

    ஆளுநராக நியமிக்கப்பட்ட தமிழிசையை இனி கட்சியுடன் இணைத்து பேசக் கூடாது - பொன்.ராதாகிருஷ்ணன்

    தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் தெலங்கானா மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார். இதையடுத்து அவர் தமிழக பாஜக தலைவர் பதவியிலிருந்து விடுவிக்கப்படுகிறார். அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், டிசம்பர் மாத இறுதியில் தமிழக பாஜகவிற்கு புதிய தலைவர் நியமிக்கப்பட உள்ளதாகவும், ஆளுநராக நியமிக்கப்பட்ட தமிழிசையை இனி கட்சியுடன் இணைத்து பேசக்கூடாது என்றும் தெரிவித்தார்.

    13:30 (IST)01 Sep 2019

    ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அன்பு மகள் தமிழிசைக்கு வாழ்த்துகள் - கி.வீரமணி

    பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளதற்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர், ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அன்பு மகள் தமிழிசைக்கு வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.

    13:05 (IST)01 Sep 2019

    தமிழுக்கும் தெலுங்குக்கும் இசை பாலமாக திகழ்வார் என நம்பிக்கை - வைரமுத்து தமிழிசைக்கு வாழ்த்து

    தெலங்கானா ஆள்நராக நியமனம் செய்யப்பட்டுள்ள தமிழிசை சௌந்தரராஜனுக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், ஒரு தமிழ்ப்பெண்மணி ஆளுநராவது பெருமிதம் தருகிறது. தமிழுக்கும் தெலுங்குக்கும் இசை பாலமாகத் திகழ்வார் என்று நம்புகிறேன் கூறியுள்ளார்.

    13:02 (IST)01 Sep 2019

    பூலித்தேவர் பிறந்த நாளில் அவரது சிலைக்கு மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை

    பூலித்தேவரின் 304வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

    12:57 (IST)01 Sep 2019

    தெலங்கானாவின் முதல் பெண் ஆளுநர் என்ற பெருமையைப் பெற்றார் தமிழிசை

    தெலங்கானா மாநிலம், 2014 ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேசம் மாநிலத்திலிருந்து பிரித்து தனி மாநிலமாக உருவாக்கப்பட்டது. இந்நிலையில், தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் தெலங்கானா மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டதன் மூலம் அவர் தெலங்கானாவின் முதல் பெண் ஆளுநர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

    12:54 (IST)01 Sep 2019

    பாரம்பரியம் மிக்க அரசியல் குடும்பத்திலிருந்து, ஆளுநராக பொறுப்பேற்கும் அன்புச் சகோதரி தமிழிசைக்கு வாழ்த்து - மு.க.ஸ்டாலின்

    பாரம்பரியம் மிக்க அரசியல் குடும்பத்திலிருந்து, ஆளுநராக பொறுப்பேற்கும் அன்புச் சகோதரி தமிழிசைக்கு வாழ்த்து - மு.க.ஸ்டாலின் தெலங்கான மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ள தமிழிசை சௌந்தரராஜனுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    12:44 (IST)01 Sep 2019

    விமர்சனங்களை தாங்கிக்கொண்டால் விமரிசையாக வாழலாம் என்பதற்கு உதாரணம் நான் - தமிழிசை

    தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்ட தமிழிசை சௌந்தரராஜன் ஊடகங்களிடம் பேசியதாவது: என் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டு தெலங்கானா ஆளுநர் பொறுப்பை பிரதமர் மோடி அளித்திருக்கிறார். பிரதமர் மோடிக்கும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் நன்றி. என் மீது பாசத்தை பொழிந்த தமிழக மக்களுக்கும், தொண்டர்களுக்கும் நன்றி. தெலங்கானா வளர்ச்சிக்கு மட்டுமின்றி, தமிழகத்தின் வளர்ச்சிக்கும் பாடுபடுவேன். விமர்சனங்களை தாங்கிக்கொண்டால் விமரிசையாக வாழலாம் என்பதற்கு நான் உதாரணம்.

    12:38 (IST)01 Sep 2019

    ஆளுநராக நியமிக்கப்பட்ட தமிழிசை சௌந்தரராஜனுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

    தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்ட தமிழிசை சௌந்தரராஜனுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
    தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    12:36 (IST)01 Sep 2019

    என்றுமே நான் தமிழக மக்களுக்கு சகோதரிதான் - தமிழிசை சௌந்தரராஜன்

    தெலங்கானா ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ள தமிழிசை சௌந்தரராஜன் ஊடகங்களிடம் பேசுகையில், ஆண்டவனுக்கும், நாட்டை ஆண்டு கொண்டிருப்பவருக்கும் மனமார்ந்த நன்றி. எல்லோரும் ஒரே நாடு என்ற எண்ணத்துடனே தெலங்கானா செல்கிறேன்; என்றுமே தமிழக மக்களுக்கு நான் சகோதரி தான் என்று கூறினார்.

    12:28 (IST)01 Sep 2019

    என்னை ஆளுநராக நியமனம் செய்தது எனக்கே ஆச்சரியமாக உள்ளது - தமிழிசை சௌந்தரராஜன்

    தெலங்கனா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசை சௌந்தரராஜனுக்கு தலைவவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இது குறித்து ஊடகங்களிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன்: என்னை ஆளுநராக நியமனம் செய்தது எனக்கே ஆச்சரியமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

    12:24 (IST)01 Sep 2019

    தமிழகத்தை சேர்ந்த தமிழிசைக்கு ஆளுநர் பதவி வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி - டிடிவி தினகரன்

    தெலங்கானா ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ள தமிழிசை சௌந்தரராஜனுக்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். மேலும், தமிழகத்தை சேர்ந்த தமிழிசைக்கு ஆளுநர் பதவி வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறியுள்ளார்.

    12:21 (IST)01 Sep 2019

    ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசைக்கு - முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வாழ்த்து

    தெலங்கானா ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ள தமிழிசைக்கு வாழ்த்துகள் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். மேலும், தமிழக பாஜகவுக்கு டிசம்பர் மாதத்துக்குள் தலைவர் நியமிக்கப்படுவார் என தெரிவித்துள்ளார்.

    12:15 (IST)01 Sep 2019

    தெலங்கானா மக்களுக்காக தமிழிசை சிறப்பாக பணியாற்றுவார் என நம்பிக்கை - திமுக எம்.பி கனிமொழி வாழ்த்து

    தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் மத்திய அரசால் தெலங்கானா ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார். அவருக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். திமுக எம்.பி கனிமொழி வாழ்த்து தெரிவிக்கையில், தெலங்கானா மக்களுக்காக தமிழிசை சிறப்பாக பணியாற்றுவார் என நம்புகிறேன் என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    12:10 (IST)01 Sep 2019

    தமிழிசை சௌந்தரராஜன் தெலங்கானா ஆளுநராக நியமனம் - தலைவர்கள் வாழ்த்து

    தமிழிசையின் உழைப்புக்கும், தியாகத்துக்கும் கிடைத்த அங்கீகாரம் தான் தெலங்கானா ஆளுநர் பதவி என தமிழக பாஜகவைச் சேர்ந்த மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    11:23 (IST)01 Sep 2019

    தமிழிசை சௌந்தரராஜன் தெலங்கானா ஆளுநராக நியமனம்

    மத்திய அரசு புதிய ஆளுநர்களை நியமித்து ஆளுநர்களை மாற்றம் செய்தும் அறிவித்துள்ளது. அதன்படி, ஏ.என்.ஐ. வெளியிட்டுள்ள செய்தியில், இமாச்சலப் பிரதேச ஆளுநராக இருந்த கல்ராஜ் மிஸ்ரா ராஜஸ்தான் ஆளுநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பகத்சிங்க் கோஷியரி மகாராஷ்டிரா ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். பண்டாரு தத்தாத்ரேயா இமாச்சலப் பிரதேச ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கேரளா ஆளுநராக ஆரிஃப் முஹம்மது கான் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழிசை சௌந்தரராஜன் தெலங்கானா ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    11:09 (IST)01 Sep 2019

    நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் - துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

    திருநெல்வேலியில், செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் குறித்து எதிர்க்கட்சியினர் கீழ்தரமான அரசியல் செய்து வருகின்றனர். நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் என்று கூறினார்.

    10:50 (IST)01 Sep 2019

    வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு; விவரங்களை திருத்துவதற்கான சிறப்பு திட்டம் இன்று முதல் தொடக்கம்

    வாக்காளர் பட்டியலின் தரத்தை மேம்படுத்துதல் மற்றும் தகுதியுள்ள அனைத்து வாக்காளர்களையும், வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்காக, தேர்தல் ஆணையம் இன்று முதல் 30-ம் தேதி வரை, வாக்காளர் சரிபார்ப்பு திட்டம் என்ற புதிய திட்டத்தினை நடைமுறைப்படுத்தியுள்ளது.வாக்காளர் பட்டியலில் உள்ள தங்களது பெயர், பிறந்த தேதி, வயது, உள்ளிட்ட பதிவுகளை வாக்காளர்களே சரிபார்த்து கொள்ளவும், திருத்தங்கள் ஏதும் இருப்பின் அவைகளை மேற்கொள்ளவும் எளிய வசதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    10:40 (IST)01 Sep 2019

    அரசின் பொருளாதார நிலை ஆழ்ந்த கவலையளிக்கிறது - முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்

    முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறுகையில், இன்று அரசின் பொருளாதார நிலை ஆழ்ந்த கவலை அளிக்கிறது. கடந்த காலாண்டு நாட்டின் மொத்த வளர்ச்சி விகிதம் 5 சதவீதமாக காட்டிய நிலையில், அதன் மத்தியில் மெதுவாக வீழ்ந்துள்ளது. இந்தியா பொருளாதாரம் வேகமாக வளர்வதற்கான திறன் உள்ளது. ஆனால், மோடி அரசின் தவறான நிர்வாகத்தால் இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக” தெரிவித்துள்ளார்.

    10:24 (IST)01 Sep 2019

    அமமுக மாவட்ட செயலாளர்களை அறிவித்த டிடிவி தினகரன்

    அமமுகவின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் முதற்கட்டமாக அமமுகவின் 19 பேர் கொண்ட மாவட்ட செயலாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளார்.

    10:19 (IST)01 Sep 2019

    புலித்தேவர் 304 வது பிறந்த நாள்; சிலைக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை

    சுதந்திர போராட்ட மன்னர் புலித்தேவரின் 304வது பிறந்தநாளை முன்னிட்டு நெல்லையில் உள்ள அவரது சிலைக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    10:01 (IST)01 Sep 2019

    பஞ்சாமிர்தம் தயாரிக்கும் நிறுவனங்கள் ரூ.90 கோடி வரி ஏய்ப்பு - வருமான வரித்துறை தகவல்

    திண்டுக்கல் மாவட்டம், பழனியில் பஞ்சாமிர்தம் தயாரிக்கும் நிறுவனங்களான சித்தனாதன் பஞ்சாமிர்தம், கந்த விலாஸ் பஞ்சாமிர்தம் ஆகிய நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரின் பேரில் வருமான வரித்துறை அதிகாரிகள் 50-க்கும் மேற்பட்டோர் 30 இடங்களில் சோதனை செய்தனர். இரண்டு நாட்களாக நடந்த இந்த சோதனையில், பஞ்சாமிர்த நிறுவனங்கள் ரூ.90 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமான வரித்துறை தகவல் தெரிவித்துள்ளனர்.

    09:52 (IST)01 Sep 2019

    மருத்துவ மாணவியிடம் தவறாக நடந்துகொள்ள முயன்ற டிக்கெட் பரிசோதகர் சஸ்பெண்ட்

    சென்னை - ராமேஸ்வரம் ரயிலில், மருத்துவ மாணவியிடம் தவறாக நடந்துக்கொள்ள முயன்றதாக கைதான டிக்கெட் பரிசோதகர் தன்ராஜ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    09:40 (IST)01 Sep 2019

    கச்சத் தீவு அருகே தமிழக மீனவர்கள் கடலில் மூழ்கியது; அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 4 மீனவர்கள்

    ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் சென்ற படகு கச்சத்தீவு அருகே பாறையில் மோதி கடலில் மூழ்கியது. இதில் படகில் இருந்த 4 மீனவர்கள் அதிர்ஷ்ட வசமாக உயிர்தப்பி கச்சத்தீவில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

    09:35 (IST)01 Sep 2019

    விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள் - முதலமச்சர் பழனிசாமி

    நாடு முழுவதும் நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழக முதலமச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் உளம் கனிந்த நல்வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

    நூறு ஆண்டுகளுக்கு மேல் இயங்கிவரும் சென்னைப் பல்கலைக்கழகம் ஆகஸ்ட் 29-ம் தேதியன்று ஒரு சுற்றறிக்கையை  வெளியிட்டது . “பாலியல் தொந்தரவு இல்லாத வளாகம்” என்பதே அந்த சுற்றறிக்கையின் அடிப்படை சாராம்சம். சில நாட்களுக்கு முன்பு, மெட்ராஸ் கிறிஸ்டின் காலேஜில் இரு பேராசிரியர்கள் கல்லூரி சுற்றிலாவின் பொது மாணவிகளை பாலியல் தொந்தரவுக் கொடுத்ததன் பேரில் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

    இது போன்ற நிகழ்வுகளைத் தடுப்பதற்காக சென்னைப் பல்கலைக்கழகம்: இனி பேராசிரியர்கள்,விரிவுரையாளர்கள் எந்த காரணங்களுக்காவும் தங்களது வீடுகளுக்கு மாணவ, மாணவியர்களை அழைக்கக்கூடாது. மாணவர்களை வீட்டிற்கு அழைத்தாள், அது  பாலியல் தொந்தரவு என்று இயல்பாகக் கருதப்படும். ஒருவேளை, மாணவர்கள் பேராசிரியர் வீடுகளில் தாங்கும் சூழ்நிலை ஏற்பட்டால் பல்கலைக்கழகத்தின் ஒப்புதல் கட்டாயம் வாங்கி இருக்க வேண்டும். மேலும், மாணவர்கள் தங்கள் வழிகாட்டியோடு(guide) கல்வி சுற்றுலா சென்றாலும் பல்கலைக்கழகத்தின் அனுமதி பெற்றே செல்லவேண்டும்.

    மதுரை மாவட்டம்,  செல்லூர், கைலாசபுரத்தைச் சேர்ந்த குமரன் என்பவர் புரட்சிகர மாணவர் இயக்க முன்னணியில் மாவட்ட செயலாளராக உள்ளார்.  மத்திய அரசை விமர்சித்ததுடன் காஷ்மீரில் மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு எதிராக ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக தியாகப்பிரியன் என்பவர் அளித்த புகாரின் பேரில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    Tamil Nadu Tamilnadu Weather Tamil Nadu Politics
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment