Advertisment

Tamil Nadu news today: தமிழகத்தில் தீவிரவாதம் தலைதூக்காது; யாரும் அச்சப்பட வேண்டாம் - அமைச்சர் ஜெயக்குமார்

Tamil Nadu news today updates: தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகள், வானிலை, தங்கம் வெள்ளி விலை நிலவரம் உள்ளிட்டவற்றை இந்த லைவ் பிளாக்கில் காணலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu news today updates

Tamil Nadu News Today live updates

Tamil Nadu news today updates: தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகள், வானிலை, தங்கம் வெள்ளி விலை நிலவரம் உள்ளிட்டவற்றை இந்த லைவ் பிளாக்கில் காணலாம்.

Advertisment

தமிழகத்தில் விநாயகர் சதூர்த்தி மற்றும் வேளாங்கண்ணி மாதா கோவில் விழாவை சீர்குலைக்க பயங்கரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருக்கிறார்கள் என்று மத்திய உளவுத்துறையால் தமிழ்நாடு போலீஸ் டிஜிபி ஜே.கே.திரிபாதிக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. அந்த மின்னஞ்சலில் இலங்கையில் இருந்து லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 6 பயங்கரவாதிகள் தமிழகத்தில் ஊடுருவி இருப்பதாகவும் அவர்கள் கோவையில் பதுங்கி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிகைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழகத்தில், கோயில்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீசார் தமிழகத்தில் சென்னையில் ஒருவரையும், கோவையில் ஒருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதன் எதிரொலியாக கேரளாவில் திருச்சூரைச் சேர்ந்த ஒருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தமிழகம் மற்றும் இந்தியாவில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த லைவ் பிளாக்கில் இணைந்திருங்கள்.

Live Blog

Tamil Nadu news today live updates: தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகள், வானிலை, தங்கம் வெள்ளி விலை நிலவரம் உள்ளிட்டவற்றை இந்த லைவ் பிளாக்கில் காணலாம்.



























Highlights

    20:22 (IST)25 Aug 2019

    உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: தங்கம் வென்ற சிந்துவுக்கு குடியரசுத் தலைவர் வாழ்த்து

    உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில், பி.வி.சிந்து தங்கம் வென்றதன் மூலம் ஒட்டுமொத்த நாடும் பெருமைகொள்ள வேண்டிய தருணம் இது என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    19:57 (IST)25 Aug 2019

    சென்னையில் இரவு நேரங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

    கடந்த 2 வாரங்களாக சென்னையில் அவ்வப்போது மழை பெய்து வரும் நிலையில், இன்று சென்னையில் இரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    19:15 (IST)25 Aug 2019

    உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: தங்கம் வென்ற பி.வி.சிந்துவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

    இந்தியாவை மீண்டும் பெருமை கொள்ளச் செய்திருக்கும் பி.வி.சிந்துவிற்கு பிரதமர் மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். மேலும், பி.வி.சிந்துவின் வெற்றி வருங்கால வீரர்களுக்கும் ஊக்கமளிப்பதாக அமையும் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

    19:12 (IST)25 Aug 2019

    உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி; தங்கம் வென்றார் சிந்து

    உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி, மகளிர் ஒற்றையர் பிரிவில் இறுதி போட்டியில், இந்தியாவின் பி.வி.சிந்து, ஜப்பான் வீராங்கனையை வீழ்த்தி தங்கம் வென்று சாதனை படைத்தார்.

    18:59 (IST)25 Aug 2019

    வடபழனி பணிமனை விபத்தில் உயிரிழந்த 2 பணியாளர்கள் குடும்பத்திற்கு நிதி உதவி

    வடபழனி பணிமனை விபத்தில் உயிரிழந்த 2 பணியாளர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார் முதலமைச்சர் பழனிசாமி. போக்குவரத்து ஊழியர்கள் 2 பேரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

    18:36 (IST)25 Aug 2019

    தமிழகத்தில் எந்தவிதத்திலும் தீவிரவாதம் தலைதூக்காது; யாரும் அச்சப்பட வேண்டாம் - அமைச்சர் ஜெயக்குமார்

    அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், இந்திய அளவில் முழுமையாக அமைதி தவழும் மாநிலம் என்றால் அது தமிழகம் தான். அதனால், தமிழகத்தில் எந்தவிதத்திலும் தீவிரவாதம் தலைதூக்காது; யாரும் அச்சப்பட வேண்டாம் என்று கூறினார்.

    18:11 (IST)25 Aug 2019

    வேதாரண்யத்தில் இருதரப்பினர் இடையே மோதல் - பாதுகாப்புக்காக போலீஸ் குவிப்பு

    நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யத்தில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டதையடுத்து, காவல் நிலையம் முன்பு நிறுத்தப்பட்டிருந்த வாகனத்திற்கு தீ வைக்கப்பட்டது. மேலும், போலீசார் மீது கல் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கே பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதால் பாதுகாப்புக்காக போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    18:08 (IST)25 Aug 2019

    காஞ்சிபுரம் அருகே மர்ம பொருள் வெடித்து 5 பேர் படுகாயம்

    காஞ்சிபுரம் அருகே உள்ள மானாம்பதி பகுதியில் கங்கையம்மன் கோயில் அருகே மர்ம பொருள் வெடித்ததில் 5 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த அனைவரும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    17:34 (IST)25 Aug 2019

    பிக்பாஸில் சேரன் நீடிக்க கூடாது என கூறுவதற்கு யாருக்கும் தகுதியில்லை - இயக்குனர் பேரரசு

    நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் பேரரசு: தமிழ் படங்களுக்கு தேசிய விருது கிடைக்காதது குறித்து யோசிக்க வேண்டும். திரைக்கு வராத 'பாரம்' படத்திற்கு விருது வழங்கப்பட்டிருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இயக்குநர் சேரனை யாரும் இழுத்து கொண்டு போய் சிறை வைக்கவில்லை. இது சேரனின் தனிப்பட்ட முடிவு. குடும்ப சூழ்நிலை காரணமாக, பிக்பாஸ் நிகழ்ச்சியில் சேரன் கலந்து கொண்டுள்ளார். நிகழ்ச்சியில் அவர் நீடிக்க கூடாது என கூறுவதற்கு, யாருக்கும் தகுதியில்லை என்று பேரரசு கூறினார்.

    17:28 (IST)25 Aug 2019

    மேலூரில் பிரபல திரையரங்கில் மின் கசிவு; பெரும் விபத்து தவிர்ப்பு

    மதுரை மேலூரில் உள்ள பிரபல திரையரங்கில் மின் மோட்டார் அறையில் மின்கசிவால் தீப்பற்றி எரிந்தது. திரையங்கில் இருந்த ரசிகர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டு தீ அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து நேரவிருந்தது தவிர்க்கப்பட்டது.

    17:07 (IST)25 Aug 2019

    4 மாநில சட்டபேரவை தொகுதிகளுக்கு செப்டம்பர் 23-ல் இடைத் தேர்தல்

    சத்தீஸ்கர், கேரளா, திரிபுரா, உத்தரப்பிரதேசத்தில் உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு செப்டம்பர் 23 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. சத்தீஸ்கரில் தண்டேவாடா தொகுதிக்கும், கேரளாவில் பாலா தொகுதிக்கும், உத்தரப்பிரதேசத்தில் ஹமிர்புர் தொகுதிக்கும் திரிபுரால் பதார்காட் தொகுதிக்கும் இடைத்தேர்தல் செப்டம்பர் 23 ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    17:02 (IST)25 Aug 2019

    காஷ்மீர் சென்ற எதிர்க்கட்சி தலைவர்கள் திருப்பி அனுப்பப்பட்டிருப்பது மத்திய அரசின் சர்வாதிகாரத்தை காட்டுகிறது - வேல்முருகன்

    திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய வேல்முருகன்: நீர்நிலைகளை தூர்வாரும் பணிக்கு மத்திய அரசு ஒதுக்கிய 5 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை தமிழக அரசு முறையாக பயன்படுத்தவில்லை. காஷ்மீர் நிலையை பார்வையிட சென்ற எதிர்க்கட்சித் தலைவர்களை திருப்பி அனுப்பியது என்பது மத்திய அரசு சர்வாதிகாரப் போக்கில் செயல்படுகிறது என்பதற்கான சாட்சி. காஷ்மீர் மக்களின் மனதில் நீங்காத வடுவை ஏற்படுத்தி விட்டு காஷ்மீர் இந்தியாவுடன் சேர்ந்துவிட்டது என அமித்ஷா பேசியிருப்பது கண்டனத்துக்குரியது என்று கூறியுள்ளார்.

    16:30 (IST)25 Aug 2019

    தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு முதலமைச்சர் பழனிசாமி பிறந்த நாள் வாழ்த்து

    தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் 67வது பிறந்த நாள் விழா சென்னை கோயம்பேடுவில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்த நாளுக்கு தமிழக முதலமைச்சர் பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து பூங்கொத்துடன் வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளார். அதில், கலை ஆர்வம் மிக்கவராய் திரையுலகில் தனி முத்திரை பதித்தவர் நீங்கள். அரசியல், பொதுவாழ்வில் சிறப்பாக பணியாற்றி வருகிறீர்கள். நீண்ட ஆயுள் நல்ல ஆரோக்கியத்துடன் மக்கள் பணியாற்ற விரும்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

    15:32 (IST)25 Aug 2019

    ராசிபுரம் அருகே முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் கோவில்

    நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே குச்சிக்காடு கிராமத்தைச் சேர்ந்த 10 பேர் தங்களின் சொந்த நிலத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் கோயில் கட்டத் தொடங்கியுள்ளனர். கோயில் கட்டுவதற்காக இன்று பூமி பூஜை போடப்பட்டது. இதில் கட்சி வேறுபாடு இல்லாமல் அனைத்து தரப்பு மக்களும் கலந்துகொண்டனர். கோயில் கட்டும் பணியை தொடங்கியுள்ளவர்கள் கூறுகையில், அருந்ததியர் மக்களுக்கு 3% உள் இடஒதுக்கீடு பெற்று தந்ததற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ரூ.30 லட்சம் மதிப்பில் கோயில் கட்டும் பணியை தொடங்கியுள்ளதாக தெரிவித்தனர்.

    14:55 (IST)25 Aug 2019

    வழக்கை திரும்ப பெற்றதை பிகில் படக்குழுவினர் தவறாகப் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு

    பிகில் படம் தனது கதையின் பதிப்புரிமையை மீறுவதாக உள்ளது என்றும் படத்தின் படப்பிடிப்பு மற்றும் திரையிடலுக்கு தடைகோரி உதவி இயக்குனர் பி.கே.செல்வா என்பது வழக்கு தொடர்ந்தார். இதனைத் தொடர்ந்து அவர் பிகில் பட வழக்கை திரும்ப பெற்றார். இந்நிலையில், வழக்கை திரும்ப பெற்றதை பிகில் படக் குழுவினர் தவறாக விளம்பரப்படுத்துகின்றனர் என்றும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேலைகள் நடக்கின்றன என்றும் நியாயம் கிடைக்கும் வரை போராடுவேன் என - உதவி இயக்குநர் கே.பி.செல்வா கூறியுள்ளார்.

    14:30 (IST)25 Aug 2019

    செப்டம்பர் 15 ஆம் தேதி விஜயகாந்த் தலைமையில் முப்பெரும் விழா - பிரேமலதா அறிவிப்பு

    தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் 67வது பிறந்தநாள் சென்னை கோயம்பேடுவில் உள்ள தேமுதிகவின் தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்படுகிறது. நிகழ்ச்சியில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், வருகிற செப்டம்பர் 15 ஆம் தேதி திருப்பூரில் விஜயகாந்த் தலைமையில் முப்பெரும் விழா கொண்டாடப்படும் என்று கூறினார்.

    14:17 (IST)25 Aug 2019

    காவலர் எழுத்துத் தேர்வில் ஆள்மாறாட்டம்; 3 பேர் கைது

    அரியலூர் மாவட்டம் தத்தனூரில் நடைபெற்ற காவலர் எழுத்துத் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக, தேவ்பிரகாஷ் என்பவருக்கு பதிலாக தேர்வெழுதிய ரகுபதி மற்றும் அவரது சகோதரர் சந்தோஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    13:55 (IST)25 Aug 2019

    இந்தியா மிகப் பிரமாண்டமான விழாவுக்காக தயாராகிக்கொண்டிருக்கிறது - பிரதமர் மோடி

    மான் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி: மிகப் பிரமாண்டமான விழாவுக்காக இந்தியா தயாராகிக்கொண்டிருக்கிறது. இந்த திருவிழாவை இந்தியா மட்டுமல்லாமல் உலக நாடுகள் எல்லாம் கொண்டாடும். மகாத்மா காந்தியின்150வது பிறந்த தினம் அக்டோபர் 2 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஏழைகளுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர் மகாத்மா காந்தி. தென் ஆப்பிரிக்காவின் சுதந்திரத்துக்காகவும் போராடியவர் மகாத்மா காந்தி.

    13:48 (IST)25 Aug 2019

    பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும் - பிரதமர் மோடி

    மான் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி: இந்த நாள் முதல் நாம் அனைவரும் பிளாஸ்டிக் பயன்பாட்டை அனைவரும் தவிர்க்க வேண்டும். வணிகர்கள் அனைவரும் இயற்கையை பாதிக்காத பொருட்களை வழங்க முன்வர வேண்டும்.

    13:24 (IST)25 Aug 2019

    தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடந்தால் பார்த்துக்கொள்ளலாம் - அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்

    செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரனிடம், தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடக்குமா? என்ற கேள்விக்கு, உள்ளாட்சித் தேர்தல் நடந்தால் பார்த்துக் கொள்ளலாம் என்று பதில் அளித்துள்ளார். மேலும், பயங்கரவாத அச்சுறுத்தல் தொடர்பான தகவல்களை போலீசார் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

    12:44 (IST)25 Aug 2019

    நீலகிரி மலை ரயில் பாதையில் செல்ஃபி எடுத்தால் ரூ.2000 அபராதம்

    நீலகிரி மலை ரயில் பாதையில் செல்ஃபி எடுத்தால் ரூ.2000 அபராதம் விதிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தெற்கு ரயில்வேயின் அறிவிப்பில், ரயில் வரும் நேரத்தில் தண்டவாளத்தைக் கடந்து சென்றால் ரூ.1000 அபராதமும், பயணச்சீட்டு இன்றி நடைமேடைகளில் இருந்தால் ரூ.1000 அபராதமும் ரயில் நிலையைம் தண்டவாளங்களில் குப்பை கொட்டினால் ரூ.200 மற்றும் அசுத்தம் செய்டஹல் ரூ.300 அபராதம் வசூலிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே துண்டு பிரசுரங்களை ஒட்டியுள்ளது.

    12:27 (IST)25 Aug 2019

    காந்தியின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு பிளாஸ்டிக் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் - பிரதமர் மோடி

    மான் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், இந்தாண்டு காந்தியின் 150வது பிறந்தாநாளை முன்னிட்டு பிளாஸ்டிக் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம். திறந்தவெளி கழிப்பறை பயன்பாடு இல்லாத இந்தியாவையும் உருவாக்கி காந்தியடிகளுக்கு அர்ப்பணிப்போம் என்று கூறினார்.

    12:16 (IST)25 Aug 2019

    விஜயகாந்துக்கு தேமுதிக தலைமை கழக நிர்வாகிகள், தொண்டர்கள் பிறந்தநாள் வாழ்த்து

    தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு அவரது கட்சி தலைமைக் கழக ந்ரிவாகிகள் மற்றும் தொண்டர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

    12:13 (IST)25 Aug 2019

    நவம்பர் 14 ஆம் தேதிக்குள் திமுகவில் 30 லட்சம் புதிய உறுப்பினர்களை சேர்க்க இலக்கு

    சென்னையில் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றுவரும் திமுக இளைஞரணி கூட்டத்தில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றம். செப்டம்பர் 14 ஆம் தேதி முதல் நவம்பர் 14 ஆம் தேதிக்குள் 30 லட்சம் புதிய உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    12:07 (IST)25 Aug 2019

    தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்துக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பிறந்தநாள் வாழ்த்து

    தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்துக்கு இன்று பிறந்த நாள் என்பதால், அரசியல் தலைவர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் விஜயகாந்த்துக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். வாழ்த்து செய்தியில், விஜயகாந்த் நல்ல உடல்நலத்தோடும், நீண்ட ஆயுளோடும் பொதுப்பணியை தொடர்ந்திட வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

    Tamil Nadu and Chennai news today live updates of weather, traffic, train services and airlines தமிழகத்தில், பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள கோயில்கள், மக்கள் கூடும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பயங்கரவாத ஊடுருவல் அச்சுறுத்தல் தொடர்பாக, போலீசார் சென்னையைச் சேர்ந்த ஒருவரையும், கேரளாவில் திருச்சூரைச் சேர்ந்த ஒருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    சென்னையில் நேற்று பெட்ரோல் விலை ரூ.74.70க்கும், டீசல் விலை ரூ.68.84க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், சென்னையில் பெட்ரோல் விலை இன்று லிட்டர் ஒன்றுக்கு 8 காசுகள் உயர்ந்து ரூ.74.78க்கும், டீசல் விலை 11 காசுகள் உயர்ந்து ரூ.68.95க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment