Advertisment

Tamil Nadu news updates: திமுகவில் கொள்கை பரப்புச் செயலாளராக தங்க தமிழ்ச்செல்வன் நியமனம்

Tamil Nadu news today live updates: தமிழகம் மற்றும் இந்தியாவில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகள், வானிலை, தங்கம், வெள்ளி, பெட்ரோல், டீசல் விலை நிலவரம் ஆகியவற்றை இந்த லைவ் பிளாக்கில் காணலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu news today live updates

Tamil Nadu news today live updates

Tamil Nadu news today live updates: தமிழகம் மற்றும் இந்தியாவில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகள், வானிலை, தங்கம், வெள்ளி, பெட்ரோல், டீசல் விலை நிலவரம் ஆகியவற்றை இந்த லைவ் பிளாக்கில் காணலாம்.

Advertisment

அமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த தங்க தமிழ்செல்வனுக்கு திமுக கொள்கை பரப்புச் செயலாளர் பதவி வழங்கி திமுக அறிவித்துள்ளது.

திமுக தொடர்ந்த அவதூறு வழக்கில் மதிமுக பொதுச்செயலாளரும் மாநிலங்களவை எம்பியுமான வைகோவை சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதி கருணாநிதி விடுதலை செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியில் இருந்தபோது, மதிமுகவை உடைக்க முன்னாள் முதல்வர் கருணாநிதி முயற்சித்தார் என வைகோ கூறியதாக அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் சித்தனாதன், கந்த விலாஸ் பஞ்சாமிர்த கடைகளில் 2-வது நாளாக 30-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.

இன்று சென்னையில் 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.3,846-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.3,689-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல, இன்று சென்னையில் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் ரூ.74.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் ஒரு லிட்டர் ரூ.68.94-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகள், மற்றும் வானிலை, தங்கம் வெள்ளி விலை நிலவரம், பெட்ரோல் டீசல் விலை நிலவரம் ஆகியவற்றை உடனடியாக தெரிந்துகொள்ள இந்த லைவ் பிளாக்கில் இணைந்திருங்கள்.

Live Blog

Tamil Nadu and Chennai news today live updates of weather, traffic, train services and airlines தமிழகம் மற்றும் இந்தியாவில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகள், வானிலை, தங்கம், வெள்ளி, பெட்ரோல், டீசல் விலை நிலவரம் ஆகியவற்றை தெரிந்துகொள்ள இந்த லைவ் பிளாக்கில் இணைந்திருங்கள்.



























Highlights

    22:12 (IST)30 Aug 2019

    திமுகவில் கொள்கை பரப்புச் செயலாளராக தங்க தமிழ்ச்செல்வன் நியமனம்

    திமுகவில் கொள்கை பரப்புச் செயலாளராக தங்க தமிழ்ச்செல்வனை திமுக தலைவர் ஸ்டாலின் நியமனம் செய்துள்ளார்.  திமுகவுக்கும், மு,க.ஸ்டாலினுக்கும் தன் வாழ்நாள் இறுதிவரை உண்மையாக இருந்து உழைப்பேன் தங்க.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

    20:43 (IST)30 Aug 2019

    மந்தநிலையில் இந்திய பொருளாதாரம் – ஸ்டாலின்

    மொத்த உள்நாட்டு உற்பத்தி 5 சதவீதமாக குறைந்திருப்பது, இந்திய பொருளாதாரம் மந்தநிலையில் உள்ளதை காட்டுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். வேலையிழப்பு, தொழில்துறை பிரச்சனைகளில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

    17:07 (IST)30 Aug 2019

    இந்தியாவில் உள்ள 27 பொதுத்துறை வங்கிகளை பாதியாக குறைப்பு

    இந்திய பொருளாதார மந்த நிலையை சரி செய்யும் விதமாக இந்தியாவில் உள்ள  27  பொதுத்துறை  வங்கிகளை இணைத்து  12 வங்கிகளாக மாற்றி அமைத்தார் . 

    publive-image

    16:45 (IST)30 Aug 2019

    பொதுத்துறை வங்கியில் பெரிய மாற்றங்கள் அறிவிப்பு

    பஞ்சாப் தேசிய வங்கி , யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா , ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் போன்ற வங்கிகளை ஒன்றிணைத்தார் இந்தியா நிதி அமைச்சர்  . 

    publive-image

    16:32 (IST)30 Aug 2019

    நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்து வருகிறார்.

    இந்தியாவின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சற்று முன் செய்தியாளர்களை சந்தித்து, பொருளாதார மந்தநிலைக்கு அரசு எடுத்துக் கொண்டிருக்கிற  நடவடிக்கைகளை  பற்றி பேசி வருகிறார். அவரின் வாதத்தில் அமைந்துள்ள முக்கிய சாராம்சங்களை கீழே காணலாம். 

    publive-image 

    publive-image

    15:26 (IST)30 Aug 2019

    ஒப்பந்தப்படி தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது - கர்நாடகா முதல்வர் எடியூரப்பா

    கே.ஆர்.எஸ். அணையில் சமர்ப்பண பூஜை மேற்கொண்ட கர்நாடகா முதல்வர் எடியூரப்பா செய்தியாளர்களிடம் பேசுகையில், கே.ஆர்.எஸ். அணையில் தற்போது 49.50 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது. இதேபோன்று ஒவ்வொரு ஆண்டும் மழை பெய்து அணைகள் நிரம்பி விவசாயிகள் சந்தோஷமாக இருக்க வேண்டும். காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஒப்பந்தப்படி இந்த ஆண்டு தமிழகத்திற்கு, கர்நாடகம் சார்பில் வழங்கப்பட வேண்டிய தண்ணீர் முழுவதும் திறந்து விட்டுள்ளதால், இந்த ஆண்டு தமிழகத்திற்கும், கர்நாடகத்திற்கும் இடையே காவிரி நீர் பிரச்சினை இருக்காது” என்று கூறினார்.

    15:02 (IST)30 Aug 2019

    மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மாலை 4 மணிக்கு செய்தியாளர்கள் சந்திப்பு

    மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மாலை 4 மணிக்கு டெல்லியில் உள்ள தேசிய ஊடக மையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேச உள்ளார்.

    14:38 (IST)30 Aug 2019

    அண்ணா வழியில் எடப்பாடி பழனிசாமி கோட்சூட் அணிந்து செயல்படுகிறார் - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

    முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் பழனிசாமி லண்டனில் கோட்சூட் அணிந்து அந்நாட்டு அதிகாரிகளை சந்தித்துவருகிறார். அவர் கோட்சூட் அணிந்தது தொடர்பாக சிலர் சமூக ஊடகங்களில் கேலி செய்துவரும் நிலையில், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் “அறிஞர் அண்ணா வழியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் கோட்சூட் அணிந்து செயல்படுகிறார்” என புகழ்ந்துள்ளார்.

    14:34 (IST)30 Aug 2019

    காவேரி கூக்குரல்: சினிமா நடிகர்கள், நடிகைகள் ஜகி வாசுதேவுடன் சந்திப்பு

    ஜகி வாசுதேவ், 'காவேரி கூக்குரல்' என்ற தலைப்பில் செப்டம்பர் 3ஆம் தேதி தன்னுடைய பிறந்த நாளில், தலைக்காவிரியான குடகுவில் தொடங்கி , ஒசூர் ,மேட்டூர், திருவாரூர் வரை வேளாண் காடுகள் வளர்ப்பு குறித்து இருசக்கர வாகனத்தில் சுமார் 1200 கிலோ மீட்டர் தொலைவு விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்கிறார். இது தொடர்பாக சென்னையில், பிரபு, சந்தானபாரதி,மனோ பாலா, ரேவதி, சுஹாசினி, வரலட்சுமி சரத்குமார், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட சினிமா நடிகர்கள், நடிகைகளை சந்தித்து ஜகி வாசுதேவ் ஆதரவு திரட்டினார்.

    14:13 (IST)30 Aug 2019

    திமுகவின் செய்தி தொடர்பு செயலாளராக டி.கே.எஸ்.இளங்கோவன் மீண்டும் நியமனம் - திமுக அறிவிப்பு

    தங்க தமிழ்ச்செல்வனை திமுகவின் கொள்கைப் பரப்புச் செயலாளராக அறிவிக்கப்பட்ட நிலையில், திமுகவைச் சேர்ந்த மூத்த தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் திமுகவின் செய்தித் தொடர்பு செலாளராக மீண்டும் நியமித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

    13:58 (IST)30 Aug 2019

    வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு கிடையாது: ஆகஸ்ட் 31 கடைசி தேதி - வருமான வரித்துறை

    வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய செப்டம்பர் 30 வரை அவகாசம் அளிக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் பரவும் அறிக்கை போலியானது என்று வருமான வரித்துறை அறிவித்துள்ளது. மேலும், வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கெடு ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி நாளையுடன் முடிவடைகிறது என்று வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.

    13:49 (IST)30 Aug 2019

    நாடு முழுவதும் 12,000 ஆயுஷ் நிலையங்கள் அமைக்க இலக்கு - பிரதமர் மோடி

    டெல்லியில் ஆயுஷ் அமைச்சகத்தில் யோகா விருந்து வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விருதுகளை வழங்கிய பிரதமர் மோடி 10 ஆயுஷ் சுகாதார நிலையங்களை தொடங்கிவைத்துப் பேசுகையில், நாடு முழுவதும் 12,000 ஆயுஷ் நிலையங்கள் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக நடப்பு ஆண்டில் 4000 ஆயுஷ் நிலையங்கள் அமைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று கூறினார்.

    13:40 (IST)30 Aug 2019

    காவிரி விவகாரத்திற்கு ஏற்கனவே தீர்வு காணப்பட்டுவிட்டது - கர்நாடகா அமைச்சர் ஈஸ்வரப்பா

    மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த கர்நாடகா மாநில ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஈஸ்வரப்பா செய்தியாள்ர்களிடம் பேசும்போது, காவிரி பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற கேள்விக்கு, காவிரி பிரச்னைக்கு ஏற்கெனவே தீர்வு காணப்பட்டுவிட்டது என்று கூறினார்.

    13:24 (IST)30 Aug 2019

    எந்த பதவியும் கேட்டு நான் திமுகவில் இணையவில்லை; ஸ்டாலினுக்கு நன்றி - தங்க தமிழ்ச்செல்வன்

    அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த தங்க தமிழ்ச்செல்வனை திமுக கொள்கைப் பரப்புச் செயலாளராக நியமித்தது. இதையடுத்து, தங்க தமிழ்ச்செல்வன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தங்க தமிழ்ச்செல்வன்: மு.க.ஸ்டாலினிடம் எந்த பதவியும் கேட்டு நான் திமுகவில் இணையவில்லை; கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் பதவி

    வழங்கிய ஸ்டாலினுக்கு நன்றி என்று கூறினார்.

    13:18 (IST)30 Aug 2019

    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல திமுக ஆக்கிரமிப்பு அதிமுக இருக்கிறது - அமைச்சர் ஜெயக்குமார்

    அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த தங்க தமிழ்ச்செல்வனுக்கு திமுக கொள்கைப் பரப்புச் செயலாளர் பதவியை வழங்கியுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல திமுக ஆக்கிரமிப்பு அதிமுக இருக்கிறது. கட்சியில் இருந்து யார் சென்றாலும் அதிமுக அழியாது. தங்க தமிழ்ச்செல்வனுக்கு பொறுப்பு தந்தை அக்கட்சியில் பலர் ஏற்பார்களா என தெரியவில்லை. திமுகவில் ஒன் மேன் ஷோ தான். அது ஸ்டாலின் ஷோதான்” என்று கூறினார்.

    13:10 (IST)30 Aug 2019

    சந்தையூர் சுவர் பிரச்னை: இருதரப்பு இடையே சமரசம் ஏற்பட்டதால் வழக்கை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

    சந்தையூர் சுவர் பிரச்னையில் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் இருதரப்பினர் இடையே சமரசம் ஏற்பட்டதை அடுத்து, அது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

    13:07 (IST)30 Aug 2019

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையைப் பொறுத்தவரை மாலையிலோ அல்லது இரவிலோ லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

    13:00 (IST)30 Aug 2019

    பழங்குடியினர் போலி சாதிச் சான்று; சட்டீஸ்கர் முன்னாள் முதல்வர் மீது வழக்குப்பதிவு

    பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்தவர் என போலி சாதிச்சான்றிதழ் ஏற்படுத்தியதாக சட்டீஸ்கர் முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான அஜித் ஜோகி மீது அம்மாநில போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அம்மாநிலத்தில் உள்ள பிலாஸ்பூர் மாவட்ட ஆட்சியர் அடங்கிய உயர்மட்டக்குழுவின் ஆய்வில் இந்த விவகாரம் கண்டுபிடிக்கப்பட்டது.

    12:47 (IST)30 Aug 2019

    கோட், சூட் போடுவது தனி மனித உரிமை முதலமைச்சருக்கு ஆதரவாக பேசிய சீமான்

    முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதலமைச்சர் பழனிசாமி, லண்டனில் கோட்சூட்டுடன் அந்நாட்டு அதிகாரிகளை சந்தித்துவருகிறார். இதனை சமூக ஊடகங்களில் சிலர் கேலி செய்துவரும் நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: ஆடை என்பது அவரவர் தனி மனித உரிமை. வெளிநாடு சென்றுள்ள முதலமைச்சர் அது ஒரு குளிர்பகுதி என்பதால் அதற்கு ஏற்ப உடை அணிகிறார். அதை வேலை இல்லாதவர்கள் கேலி செய்கிறார்கள். அது மன நோயாளிகளின் வேலை. ஆயிரம் இருந்தாலும் அவர் தமிழகத்தின் முதலமைச்சர்.” என்று தெரிவித்தார்.

    12:34 (IST)30 Aug 2019

    2018 - 2019 ஆம் நிதி ஆண்டில் 500 ரூபாய் கள்ள நோட்டுகள் புழக்கம் அதிகரித்துள்ளது - ரிசர்வ் வங்கி அறிவிப்பு

    2018 - 2019 ஆம் நிதி ஆண்டில் 500 ரூபாய் கள்ள நோட்டுகள் புழக்கம் கடந்த நிதி ஆண்டில் இருந்ததைவிட 121 சதவீதம் அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி அறிக்கை தெரிவித்துள்ளது.

    12:29 (IST)30 Aug 2019

    மானாம்பதியில் கண்டெடுக்கப்பட்ட வெடிகுண்டு வெடிக்க வைத்து செயலிழப்பு

    காஞ்சிபுரம் மாவட்டம், மானாம்பதியில் கடந்த 26 ஆம் தேதி ராக்கெட் லாஞ்சர், வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது. இது பத்தாண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்டது என்று போலீசார் தெரிவித்திருந்தனர். இதையடுத்து அந்த குண்டுகளை வெடிக்க வைத்து அழிக்க முடிவு செய்த வெடிகுண்டு நிபுணர்கள், பாதுகாப்பான இடத்தில் ரிமோட் மூலம் வெடிக்க வைத்து அழித்தனர்.

    12:20 (IST)30 Aug 2019

    தெலங்கானாவில் விநாயகர் சதூர்த்திக்காக 61 அடி உயரத்தில் பிரம்மாண்ட சிலை

    தெலங்கானா மாநிலம், கைதராபாத் விநாயகர் கோயிலில் விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு 61 அடி உயரத்தில் விநாயகர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த விநாயகர் சிலை ஆதித்ய மஹா கணபதி அவதார வடிவில் உள்ளது.

    12:09 (IST)30 Aug 2019

    பழனிசாமி தமிழகத்தின் முதல்வர்; அவர் கோட் சூட் அணிவதை கேலியாக பார்க்க முடியாது - சீமான்

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில்: ஆயிரம் இருந்தாலும் பழனிசாமி தமிழகத்தின் முதலமைச்சர். அதனால், அவர் கோட் சூட் அணிவதை கேலியாக பார்க்க முடியாது என்று தெரிவித்துள்ளார். மேலும், சினிமாவில் ரஜினிகாந்துக்கு அடுத்த நிலையில் விஜய் இருக்கிறார் என்று அவர் தெரிவித்தார்.

    12:06 (IST)30 Aug 2019

    திமுக கொள்கை பரப்புச் செயலாளராக தங்க தமிழ்செல்வன் அறிவிப்பு

    அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த தங்க தமிழ்ச்செல்வனுக்கு கொள்கைப் பரப்புச் செயலாளர் பதவியை வழங்கி அறிவித்துள்ளது திமுக. திமுகவில் கொள்கைப் பரப்புச் செயலாளர்களாக உள்ள திருச்சி சிவா, ஆ.ராசா ஆகியோருடன் இணைந்து செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது

    ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் 7 பேரின் விடுதலையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா எடுத்த முடிவின்படியே செயல்படுவோம் என துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

    கேரள மாநிலம் கொச்சியிலிருந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விக்ரம் தலைமையில் 5 குழுக்களாக நேற்றுக்காலை கோவை வந்து உக்கடம் ஜி.எம்.நகரில் உள்ள 5 பேர் வீடுகளில் சோதனை நடத்தினார்கள். கோவை மாநகர போலீசாரின் உதவியுடன் நடத்தப்பட்ட இந்த சோதனை காலை 6 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணி வரை நீடித்தது. இந்த சோதனையில் ஒரு மடிக்கணினி, 5 செல்போன்கள், 4 சிம் கார்டுகள், ஒரு மெமரி கார்டு, 8 சி.டி.க்கள் மற்றும் டி.வி.டி.க்கள் மற்றும் ஆட்சேபகரமான நோட்டீசுகளையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைப்பற்றினார்கள். இதைத்தொடர்ந்து 5 பேரையும் கோவை ரேஸ்கோர்சில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலகத்துக்கு வரவழைத்து விசாரணை நடத்தினார்கள். அங்கு இரவு வரை விசாரணை நடந்தது.

    Tamil Nadu
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment