/indian-express-tamil/media/media_files/2024/11/13/PSR68hu4XpCllIVJSrsf.jpg)
பெட்ரோல், டீசல் விலை: சென்னையில் பெட்ரோல் டீசல் விலை இன்று ரூ.5 காசுகள் குறைந்து மீண்டும் பழைய விலைக்கு விற்பனையாகிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75-க்கும், டீசல் லிட்டருக்கு ரூ.92.34-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தேர்தல் நிலவரம்: வயநாடு தொகுதி இடைத் தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 13.04% வாக்குப்பதிவும் ஜார்க்கண்ட் முதல்கட்ட தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 13.04% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
-
Nov 13, 2024 22:43 IST
மருத்துவரை கத்தியால் குத்திய வழக்கு: இளைஞருக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல்
கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவரை கத்தியால் குத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞர் விக்னேஷ் சைதாப்பேட்டை நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவருக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
-
Nov 13, 2024 22:01 IST
அர்ஜூன் சம்பத்தின் மகன் ஓம்கார் பாலாஜி கைது
நக்கீரன் கோபாலுக்கு மிரட்டல் விடுத்த வழக்கில் அர்ஜூன் சம்பத்தின் மகன் ஓம்கார் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார்
-
Nov 13, 2024 21:58 IST
மருத்துவர் பாலாஜியிடம் நலம் விசாரித்த ஸ்டாலின்
கத்திகுத்தால் படுகாயமடைந்த மருத்துவர் பாலாஜியிடம் தொலைபேசியில் பேசி முதலமைச்சர் ஸ்டாலின் நலம் விசாரித்தார்
-
Nov 13, 2024 21:57 IST
மருத்துவருக்கு கத்திக்குத்து- ஆளுநர் கண்டனம்
மருத்துவருக்கு கத்திக்குத்து நடந்த விவகாரத்திற்கு கண்டனம் தெரிவித்த ஆளுநர் ஆர்.என்.ரவி, மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள் மீதான எத்தகைய தாக்குதலையும் ஏற்றுக்கொள்ள முடியாது. மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்
-
Nov 13, 2024 20:25 IST
டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பவுலிங் தேர்வு
இந்தியாவுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது
-
Nov 13, 2024 20:07 IST
மருத்துவருக்கு கத்திக்குத்து விவகாரம்; நாளை போராட்டம்
சென்னையில் மருத்துவர் கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தப்பட்டதற்கு நாளை காலை 8 மணி முதல் 10 மணி வரை தர்ணா போராட்டம் நடைபெறும் என மருத்துவ சங்கம் அறிவித்துள்ளது. போராட்டத்தை வாபஸ் பெற்றாலும் நாளை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
-
Nov 13, 2024 19:22 IST
மருத்துவர்களின் கோரிக்கை ஏற்பு – அமைச்சர் மா.சு
பாதுகாப்பு தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை மருத்துவர்கள் முன் வைத்தனர். மருத்துவர்களின் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது என தலைமைச் செயலகத்தில் மருத்துவர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக்கு பின், அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்
-
Nov 13, 2024 18:53 IST
கேவலமாக பேசிய டாக்டர் பாலாஜி; விக்னேஷ் தாயார் குற்றச்சாட்டு
முறையாக சிகிக்சை அளிக்காமல் ஆங்கிலத்தில் பேசி எங்களை அவமதிப்பார். நான் பிழைக்க மாட்டேன் என்பது என் மகனை வேதனையடைய செய்திருக்கிறது என மருத்துவரை தாக்கிய வழக்கில் கைதான விக்னேஷ் தாயார் தெரிவித்துள்ளார்.
-
Nov 13, 2024 18:51 IST
பாலியல் வன்கொடுமை முயற்சி - பேராசிரியர் கைது
கோவையில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற கல்லூரி பேராசிரியர் சிவப்பிரகாசம் கைது செய்யப்பட்டுள்ளார்
-
Nov 13, 2024 18:34 IST
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் போராட்டம்
மருத்துவர் கத்திக்குத்து விவகாரம் தொடர்பாக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை வளாகத்தில், மாணவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் போராட்டம் நடத்தினர்
-
Nov 13, 2024 18:10 IST
மருத்துவர் கத்தியால் குத்தப்பட்ட விவகாரம்; கைதான விக்னேஷ் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு
சென்னை கிண்டி மருத்துவமனையில், மருத்துவர் கத்தியால் குத்தப்பட்ட விவகாரத்தில், கைதான விக்னேஷ் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
-
Nov 13, 2024 17:57 IST
சென்னையில் மற்றொரு மருத்துவர் மீது தாக்குதல்
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கடந்த ஒரு மாதமாக சிகிச்சை பெற்றுவந்த நோயாளி இன்று சிகிச்சைக்கு வந்தபோது மருத்துவர் மீது தாக்குதல் நடத்திவிட்டு ஓடினார். காயமடைந்த மருத்துவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது
-
Nov 13, 2024 17:56 IST
மருத்துவர் பாலாஜியின் தாயார் பேட்டி
என் மகன் மீது தாக்குதல் என்ற செய்திகேட்டு பதைபதைப்புடன் வந்தேன். உடனடியாக உரிய சிகிச்சை கொடுத்து என் மகனை காப்பாற்றி விட்டார்கள் என மருத்துவர் பாலாஜியின் தாயார் தெரிவித்துள்ளார்.
-
Nov 13, 2024 17:54 IST
மருத்துவர்களுக்கான பாதுகாப்பு – அமைச்சர் ஆலோசனை
சென்னை கிண்டி மருத்துவமனையில், மருத்துவர் கத்தியால் குத்தப்பட்ட நிலையில், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுடன், அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது
-
Nov 13, 2024 16:53 IST
மருத்துவர் கத்திக்குத்து விவகாரம் - கைதான விக்னேஷின் தாயார் பேட்டி
கடந்த மாதம் 14,15,16 தேதிகளில் சென்று சிகிச்சை பெற்றேன். தனியார் மருத்துவமனையில் என்னைக் காப்பாற்ற முடியாது என்று கூறி விட்டனர்.
காலை சென்ற எனக்கு மாலை வரை சிகிச்சை அளிக்கவில்லை. நான் பிழைப்பது கஷ்டம் எனக் கூறியதால் என் மகன் மன உளைச்சலில் இருந்தான். எனக்கு அளித்த சிகிச்சைகளை மருத்துவர் முறையாக கவனிக்கவில்லை. என்னை மிகவும் கஷ்டமான நிலையில் பார்த்ததால், இப்படி செய்தான என்று தெரியவில்லை." என்று கிண்டியில் அரசு மருத்துவரை கத்தியால் குத்திய வழக்கில் கைதான விக்னேஷின் தாயார் கூறியுள்ளார்.
-
Nov 13, 2024 16:37 IST
முடிவு பெற்ற பேச்சு வார்த்தை - கிண்டியில் மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்
சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் புற்றுநோய் மருத்துவராக பணிபுரிந்து வந்த டாக்ட்டர் பாலாஜியை, தனது தாயாருக்கு சரியாக மருத்துவம் பார்க்கவில்லை எனக்கூறி விக்னேஷ் என்பவர் கத்தியால் குத்தினார். அவரை போலீசார் செய்தனர். மருத்துவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, மருத்துவர் சங்கங்கள் போராட்டம் அறிவித்தன. இதேபோல் கிண்டி மருத்துவமனையில் பணியாற்றி வந்த மருத்துவர்களும், செவிலியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், தலைமை செயலகத்தில் மருத்துவர் சங்கங்களுடன் அரசு நடத்திய பேச்சு வார்த்தையைத் தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
-
Nov 13, 2024 15:19 IST
நடவடிக்கை எடுக்கப்படும் - உதயநிதி ஸ்டாலின்
"அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு அங்கு சிகிச்சை செல்வோர் முழு ஒத்துழைப்பு வழங்குவதும் - அரசு மருத்துவர்களின் பணியிட பாதுகாப்பை உறுதி செய்வதும் நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.
இரவு - பகல் பாராது மக்களை காக்கும் மகத்தான பணியில் ஈடுபட்டு வரும் அரசு மருத்துவர்களுக்கு கழக அரசு என்றுமே பாதுகாப்பு அரணாகத் திகழும்.
இதுபோன்ற சம்பவங்கள் இனியும் தொடராதிருக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்" என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
Nov 13, 2024 15:15 IST
விக்னேஷ் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு - பெருநகர காவல் ஆணையர் தகவல்
"கிண்டியில் மருத்துவரைத் தாக்கிய விக்னேஷ் என்பவர் மீது கொலை முயற்சி வழக்குப் பதியப்பட்டுள்ளது" என்று தாக்குதல் சம்பவம் நடைபெற்ற இடத்தை பார்வையிட்ட பெருநகர காவல் ஆணையர் அருண் கூறியுள்ளார்.
-
Nov 13, 2024 15:12 IST
மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் அவலம்
மதுரையில் எந்தவித பாதுகாப்பு உபகரணமும் இன்றி பாதாள சாக்கடையில் இறங்கி மாநகராட்சி ஊழியர் தூய்மை பணியில் ஈடுபட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
-
Nov 13, 2024 14:14 IST
துணை முதல்வர் வாகனம் முன்பு மருத்துவர்கள் தர்ணா
சென்னை கிண்டி மருத்துவமனையில் அரசு மருத்துவருக்கு காத்திக்குத்து ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு ஆய்வுக்கு வந்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் வாகனம் முன்பு அமர்ந்து மருத்துவர்கள் தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார்கள்.
-
Nov 13, 2024 13:47 IST
மருத்துவருக்கு கத்திக்குத்து - இ.பி.எஸ் கண்டனம்!
சென்னை கிண்டி மருத்துவமனை மருத்துவருக்கு கத்திக்குத்து தொடர்மாக அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
Nov 13, 2024 13:23 IST
”விஜய் எனது சகோதரன்'” - சீமான்
தவெக தலைவர் விஜய் எனது சகோதரன், கட்சி கொள்கை கோட்பாடுகளில் தான் வேற்றுமைகள் உள்ளது என நாதக தலைமை ஒருங்கினைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
-
Nov 13, 2024 13:22 IST
தமிழ் பண்பாட்டு ஆய்வாளர் ராஜ் கௌதமன் காலமானார்!
தமிழ் பண்பாட்டு ஆய்வாளரும் பேராசிரியருமான ராஜ் கௌதமன் காலமானார்.
-
Nov 13, 2024 13:04 IST
ஆசிரியர்களை டிரான்ஸ்ஃபர் செய்ய உத்தரவு!
தஞ்சை அருகே அய்யம்பட்டியில் மாணவர்கள் வாயைல் டேப் ஒட்டிய விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களை உடனே இடமாற்றம் செய்ய உத்தரவு வந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
-
Nov 13, 2024 13:03 IST
மருத்துவமனையில் நடந்தது என்ன? - அமைச்சர் விளக்கம்
கத்தியால் குத்திய நபர் தமிழகத்தை சேர்ந்த விக்னேஷ் என்றும் தனது தாய்க்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என்று தவறாக புரிந்துகொண்டு கத்தியால் குத்தியதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். இந்நிலையில் மருத்துவர் பாலாஜி தற்போது நலமுடன் உள்ளதாகவும் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
-
Nov 13, 2024 12:56 IST
அதிமுக போராட்டம் அறிவிப்பு
சென்னை மாடம்பாக்கத்தில் 520 ஏக்கர், அகரம் தென் ஊராட்சியில் 22 ரக்கர், கோயிலாஞ்சேரியில் 58 ரக்கர் விவசாய இலம் கையகப்படுத்துவதைக் கண்டித்து அதிமுக சார்பில் பதுவஞ்செரி-மப்பேடு சந்திப்பில் 19 ஆம் தேதி காலை 10 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
-
Nov 13, 2024 12:54 IST
அரசு மருத்துவர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு
சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் புற்றுநோய் மருத்துவருக்கு கத்திக்குத்து ஏற்பட்டதையடுத்து காலவரையின்றி அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
-
Nov 13, 2024 11:48 IST
ஆளுங்கட்சியினருக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்..
தவறான விமர்சனம் செய்தால் ஆளுங்கட்சியினருக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என கோவையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டியளித்துள்ளார்.
-
Nov 13, 2024 11:44 IST
சென்னையில் அரசு மருத்துவருக்கு கத்திகுத்து
சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் மருத்துவரை கத்தியால் குத்திய இருவரை போலீசார் கைது செய்தனர்.
-
Nov 13, 2024 11:11 IST
நவ.20ல் திமுக உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம்
சென்னையில் நவம்பர் 20 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு தி.மு.க உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
Nov 13, 2024 11:08 IST
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் புதிய திட்டப்பணிகள் தொடக்கம்
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.190.40 கோடி மதிப்பீட்டில் 18 கோயில்களில் 25 புதிய திட்டப்பணிகளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 4 அலுவலக கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர் ஸ்டாலின் ரூ.42.75 கோடியில் 15 கோயில்களில் 25 முடிவுற்ற திட்டப் பணிகளையும் 2 அலுவலக கட்டடங்களையும் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
-
Nov 13, 2024 11:02 IST
டெல்லியில் அடர் பனிமூட்டம்
டெல்லியில் 10 மணியை கடந்தும் சாலையில் சூழ்ந்த பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதி, விமானங்கள், ரயில்கள் தாமதமடைந்துள்ளன.
-
Nov 13, 2024 10:49 IST
ஆதீன மடாதிபதியை வெளியேற்றி பூட்டு..!
தஞ்சாவூரில் திருமணம் செய்துகொண்ட சூரியனார் கோயில் மடாதிபதியை வெளியேற்றி கோயிலை பூட்டி சாவியை இந்துசமய அறநிலையத்துறையிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர்.
-
Nov 13, 2024 10:44 IST
திருவொற்றியூர் வாயுக்கசிவு- பள்ளி மீண்டும் திறப்பு
திருவொற்றியூரில் விக்டரி தனியார் பள்ளியில் வாயுக்கசிவு ஏற்பட்டு பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டிருந்த நிலையில் இன்று 10,11,12 ஆம் வகுப்புகள் திறக்கப்பட்டன.
-
Nov 13, 2024 10:34 IST
யூடியூபர் இர்ஃபான் வீடியோ வெளியிட்ட விவகாரம்...
யூடியூபர் இர்ஃபானுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது, அவர் செய்தது கொலை குற்றமில்லை என கோவையில் மக்கள் மற்றும் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் பேட்டி அளித்துள்ளார்.
-
Nov 13, 2024 10:32 IST
சுங்கச்சாவடியை திறக்க எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டம்..
திருப்பூர் மாவட்டம் வேலம்பட்டியில், புதிதாக சுங்கச்சாவடியை திறக்க எதிர்ப்பு தெரிவித்து 15 மணி நேர தொடர் போராட்டத்தையடுத்து பேச்சுவார்த்தைக்கு மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.
-
Nov 13, 2024 10:30 IST
பயிற்சியின்போது எஸ்எஸ்ஐ மாரடைப்பால் உயிரிழப்பு
சென்னை ஆவடியில் உடல் தகுதி மற்றும் அலுவல் பணி கையாள்வது குறித்த பயிற்சியின்போது மாரடைப்பு ஏற்பட்டு சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் பிரபாகர் உயிரிழந்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.