Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் 12ஆவது நாளாக இன்றும் மாற்றமில்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.110.85க்கும், டீசல் ரூ.100.94க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Tamilnadu news update: தமிழ்நாடு முழுவதும் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து ரூ.2,600 கோடி மதிப்பிலான கோயில் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.
India News Update: நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்து வரும் மத மோதல்களை கண்டித்தும், இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் எதிர்க்கட்சிகள் சமீபத்தில் கூட்டறிக்கை வெளியிட்டிருந்தன. இதற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
World news update: உக்ரைனின் மரியுபோல் நகரம் வீழ்ச்சியின் விளிம்பில் உள்ளது. இதையடுத்து, உக்ரைன் வீரர்கள் அனைவரும் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடைந்தால் அனைவரும் உயிர் தப்பலாம் என்று ரஷ்யா எச்சரித்துள்ளது. உக்ரைன்-ரஷ்யாவுக்கு இடையே 50 நாட்களை கடந்து போர் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
IPL update: பஞ்சாப்-ஐதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஆட்டத்தில் ஐதராபாத் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. மற்றொரு ஆட்டத்தில் சிஎஸ்கே அணி குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் தோல்வி அடைந்தது.
சிஎஸ்கேவுக்கு இது 5ஆவது தோல்வி ஆகும். குஜராத் அணிக்கு கிடைத்த 5ஆவது வெற்றி ஆகும்.
புள்ளிப் பட்டியலில் குஜராத் அணி 10 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
முன்னாள் டிஜிபி ரமேஷ் குடவாலா மீது நடிகர் சூரி நில மோசடி தொடர்பாக அளித்த புகார் தொடர்பாக, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் 3வது முறையாக நடிகர் சூரி விசாரணைக்கு நேரில் ஆஜரானார்
நிர்வாக பணிகளை விரைந்து முடிக்க பேரூராட்சிகள், தேர்வுநிலை, சிறப்பு நிலை பேரூராட்சிகளில் பொது நிதியை பயன்படுத்த, உதவி இயக்குநர்களுக்கு உச்சவரம்பு உயர்த்தப்பட்டுள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
திட்டங்கள் வெற்றி பெறுவதற்கு உள்ளாட்சி பிரதிநிதிகள் தான் காரணமாக உள்ளனர். கோட்டையில் நாங்கள் திட்டங்களை தீட்டீனாலும், மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டியது நீங்கள் தான். எந்த புகாரும் இல்லாமல் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடித்துள்ளோம். அரசியல் சட்டத்திருத்தப்படி 5 ஆண்டுக்கு ஒரு முறை உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என பேரூராட்சி நிர்வாக பயிற்சி முகாம் நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியுள்ளார்
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா அருகே தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் ரயில்வே காவல்துறை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்
குஜராத் மாநிலத்திற்கு 3 நாள் பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடி, காந்தி நகரில் அமைக்கப்பட்டுள்ள பள்ளிகளுக்கான கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை பார்வையிட்டார்
புதிய இந்திய ராணுவ தளபதியாக மனோஜ் பாண்டே நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் பொறியாளராக இருந்து ராணுவ தளபதியாக உயர்ந்துள்ளார். பொறியாளர் ஒருவர் இந்திய ராணுவ தளபதியாவது இதுவே முதன்முறை. மனோஜ் பாண்டே கிழக்கு பிரிவு மற்றும் அந்தமான் நிக்கோபார் பிரிவு தளபதியாக பணியாற்றியவர். தற்போதைய ராணுவ தளபதி நரவனே வரும் ஏப்ரல் 30ம் தேதி ஓய்வு பெறும் நிலையில் புதிய தளபதி நியமிக்கப்பட்டுள்ளார்
இசையமைப்பாளர் இளையராஜாவின் கருத்து, அவரின் சொந்த கருத்து. நாகரீகமற்ற முறையில் யார் விமர்சித்தாலும் தவறு என சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்
மத்திய அரசு ஜி.எஸ்.டி. வரி விகிதங்களை உயர்த்த திட்டமிட்டு உள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கிறது. ஜி.எஸ்.டி. வரிகளை உயர்த்தும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்
டெல்லி ஜஹாங்கீர்புரி வன்முறை சம்பவத்தில் முக்கிய குற்றவாளிகளான அஸ்லாம் மற்றும் அன்சாருக்கு மேலும் 2 நாள் போலீஸ் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது
சொற்ப அளவிலான உதவித் தொகை வழங்கி மாற்றுத் திறனாளிகளை அவமானப்படுத்த வேண்டாம் என தமிழக சமூக நலத்துறை மீது சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. தற்போதைய விலைவாசிக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1000, ரூ.1500 எப்படி போதுமானதாக இருக்கும் என தலைமை நீதிபதி அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும், உதவித்தொகையை அதிகரித்து வழங்கும் விஷயத்தில் சமூக நலத்துறை செயலாளர் அக்கறையுடன் செயல்படவில்லை என கூறிய நீதிமன்றம், சமூக நலத்துறை முதன்மை செயலாளர் நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது
டெல்லியில், பிரசாந்த் கிஷோர் உடன் சோனியா காந்தி மீண்டும் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனையில், பிரியங்கா காந்தி, முகுல் வாஸ்னிக், ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, கே.சி.வேணுகோபால், அம்பிகா சோனி ஆகியோர் பங்கேற்றனர்.
மலைவாசஸ்தலங்களில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகள், கண்ணாடி பாட்டில்களை திரும்பப் பெறுவது தொடர்பான திட்டத்தை வகுக்காவிட்டால் மதுபான கடைகளை மூட உத்தரவிட நேரிடும் என்று டாஸ்மாக் நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை
தெரிவித்துள்ளது.
மலைவாசஸ்தலங்களில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகள், கண்ணாடி பாட்டில்களை திரும்பப் பெறுவது தொடர்பான திட்டத்தை வகுக்க ஏப்ரல் 25 வரை கெடு விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காடுகளில் வீசப்படும் காலி மதுபாட்டில்களின் கண்ணாடியை விலங்குகள் மிதிக்கும் போது காயமடைந்து, அடுத்த மூன்று மாதங்களில் அவை இறந்து விடுகின்றன என்பதால் நீதிபதிகள் வருத்தம் தெரிவித்தனர்.
மல்டி லெவல் மார்க்கெட்டிங் மூலம் மோசடி செய்த ஆம்வே இந்தியா நிறுவனத்தின் ரூ 758 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிறுவனத்தின் தொழிற்சாலை நிலங்கள் மற்றும் வங்கி வைப்புத் தொகை ஆகியவற்றையும் முடக்கப்பட்டுள்ளது.
வருவாய் துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், முதியோர் உதவித்தொகைக்கு செல்போன் மூலம் விண்ணப்பிக்கும் முறை விரைவில் கொண்டு வரப்படும் என்று கூறினார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை முறைகள் குறித்து ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்போலோ மருத்துவர்கள் வாக்குமூலம் அளித்தனர்.
வெளிநாடுகளுக்கு இணையான சிகிச்சை முறைகள் அப்போலோ மருத்துவமனையில் வழங்கப்பட்டதால் ஜெயலலிதாவை வெளிநாடு அழைத்துச் செல்ல வேண்டிய அவசியம் எழவில்லை என்று வாக்குமூலம் அளித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 217 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு உள்ளது மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்று காவல்துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தில் முககவசம் அணிவதை மாநில அரசு மீண்டும் கட்டாயமாக்கியுள்ளது. கொரோனா தொற்று பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ள நிலையில் உ.பி. அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி அணியில் ஆடிவரும் வெளிநாட்டு வீரர் ஒருவருக்கும், அணி நிர்வாகத்தில் ஒருவருக்கும் பாதிப்பு என தகவல் கூறுகின்றன
தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் டேபிள் டென்னிஸ் சாம்பியன் விஷ்வா தீனதயாளன் மறைவு அதிர்ச்சியையும், வேதனையையும் தருகிறது என பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
தனியார் கல்லூரிகளில் மருத்துவ மேற்படிப்புக்கு கலந்தாய்வு இன்றி மாணவர் சேர்க்கை முறைகேடு நடைபெற்றது குறித்து சிபிஐ விசாரணைக்கு ஏன் மாற்றக் கூடாது என விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தாதது ஏன்? உயர் நீதிமன்ற உத்தரவுப்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டதா? எனவும் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்
ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு ஏப்.26 வரை நீட்டிக்கப்படுவதாக தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. மார்ச் 14ஆம் தேதி முதல் ஏப்ரல் 13ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் தற்போது கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
இதில் *நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி திருப்பத்தூர் மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு .இருப்பதாக கூறியுள்ளது.
கோடை காலத்தில் 2,500 மெகாவாட் மின் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. தமிழகத்தின் கோடை கால மின் தேவை 17,196 மெகாவாட். எனவே கூடுதல் மின்சாரம் பெற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மின் பற்றாக்குறையை சமாளிக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை- சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி!
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அதிமுகவை சேர்ந்த அனுபவ் ரவி என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன்ர்.
மத்திய அரசின் அணை பாதுகாப்பு சட்டத்தில் முல்லைப் பெரியாறு அணையும் அடக்கம். அணைகளின் நீர் இருப்பு, வெளியேற்றம் உள்ளிட்டவை கூட அணை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வருகின்றன. அணை பாதுகாப்பு சட்டம் முழுமையாக நடைமுறைக்கு வர இன்னும் ஒரு வருடம் ஆகும். அனைத்து அணைகளும் பாதுகாப்பு சட்டத்திற்கு கட்டுப்பட்டுதான் ஆக வேண்டும். பராமரிக்கும் பொறுப்பை நம்மிடம் அணை பாதுகாப்பு சட்டம் கொடுத்துள்ளதால் எந்த பாதிப்பும் இல்லை என சட்டப்பேரவையில் துரைமுருகன் விளக்கம்!
முல்லை பெரியாறு அணை பிரச்சினை தொடர்பாக பேரவையில் அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது. அப்போது கேரள அரசின் நட்பை பயன்படுத்தி, முல்லை பெரியாறு அணையின் முழு கொள்ளளவை அதிகரிக்க முதல்வர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஓபிஎஸ் வலியுறுத்தினார்.
இளையராஜாவின் கருத்து பிடிக்கவில்லையென்றால், விமர்சிப்பதா? ஒரு குறிப்பிட்ட கட்சிக்கும், அதன் கூட்டணிக்கட்சிகளுக்கும் எதிரான கருத்தை தெரிவித்தால் எதிர்ப்பதா? ஆதரவாக பேசவில்லையென்பதற்காக இளையராஜாவை விமர்சிப்பது சரியான அணுகுமுறை அல்ல என இளையராஜாவுக்கு பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆதரவு தெரிவித்துள்ளார்.
கார் விபத்தில் உயிரிழந்த டேபிள் டென்னிஸ் வீரர் விஷ்வா தீனதயாளன் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி வழங்கி முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தேநீர் விருந்து புறக்கணித்ததில் ஆளுநர் மீது தனிப்பட்ட விரோதம் இல்லை. நீட் விலக்கு மசோதா 210 நாட்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. நீட் விலக்கு மசோதா முடங்கி கிடக்கும்போது, தேநீர் விருந்தில் எப்படி பங்கேற்க முடியும்? நீட் விலக்கு மசோதாவை முடக்குவது தமிழக மக்களை அவமதிப்பதாகும் என சட்டப்பேரவையில் முக ஸ்டாலின் விளக்கம்!
கடந்த 2ஆம் தேதி இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 19 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
லக்கீம்பூர் வன்முறை சம்பவத்தில் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு வழங்கப்பட்ட ஜாமினை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. ஒரு வாரத்துக்குள் சரணடையவும் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாம் பிழைக்கப்போகிற இடத்தில் எந்த மொழி தேவைப்படுகிறதோ அதனை கற்றுக்கொள்ளலாம். ஆனால், கேரளாவில் வேலைக்கு செல்வதற்கு எதற்கு இந்தி? என்று நடிகர் சத்யராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.
சேலத்தில் தொடர் திருட்டில் ஈடுபட்டுவந்த ஈரானிய கொள்ளை கும்பலை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
முக்கிய குற்றவாளி உட்பட 3 பேரை தனிப்படை போலீஸார் தேடி வருகின்றனர்.
புதிய அமைச்சரவையில் 18 பேர் இடம்பெற உள்ளனர். கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இன்று பதவியேற்கிறது புதிய அமைச்சரவை. இலங்கை நெருக்கடி சூழ்நிலைக்கு மத்தியில் புதிய அமைச்சரவை பதவியேற்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டை சேர்ந்த இளம் டேபிள் டென்னிஸ் வீரர் விஷ்வா தீனதயாளன் மறைவுக்கு பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.
காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தின் அடுத்த பாடலான Dippam Dappam விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எண்ணூரில் கடல் அரிப்பை தடுக்க பாறாங்கற்களைக் கொட்டும் திட்டத்துக்கு கடலோர ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட அனுமதியை தேசிய பசுமை தீர்ப்பாயம் ரத்து செய்துள்ளது.
விவசாயிகளுக்கு அரசு உற்றதோழனாக இருக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
உதகை அருகே, கர்ப்பிணிகள் முன்னிலையில் யோகா செய்து காண்பித்தார் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
பிரதமர் மோடி 3 நாட்கள் பயணமாக இன்று குஜராத் செல்கிறார். பல்வேறு நிகழ்ச்சிகளில் ரூ.22,000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
4 நாட்கள் தொடர் விடுமுறையால் சொந்த ஊருக்கு சென்றவர்கள் சென்னைக்கு திரும்பியதால், பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல்; உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
4 நாட்கள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது.