Advertisment

Tamil News Highlights: சட்டசபையில் இன்று வீட்டுவசதி மானிய கோரிக்கை மீது விவாதம்

Tamil Nadu News, Tamil News LIVE Updates, Latest News 19 April 2022- தமிழ்நாட்டில் நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
New Update
Tamil Nadu Tamil News: tn to govt allocated Rs. 1 crore to develop the Tamil language in foreign and foreign states

Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் 12ஆவது நாளாக இன்றும் மாற்றமில்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.110.85க்கும், டீசல் ரூ.100.94க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

Tamilnadu news update: நீட் விலக்கு மசோதா விவகாரம் குறித்து தேவைப்பட்டால் அனைத்து சட்டமன்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தை கூட்டி அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு எடுக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

மின்வெட்டே இல்லை-அமைச்சர்

தமிழகத்தில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

India News Update: உத்தரப் பிரதேசத்தில் 6 மாவட்டங்களில் முகக் கவசம் கட்டாயம் என்று அந்த மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கவுதம புத்தா நகர், காசியாபாத், ஹபூர், மீரட், புலந்த்சாகர், பாக்பட் ஆகிய மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து முகக் கவசம் கட்டாயம் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

World news update: இந்தோனேஷியாவில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் அது 6.0 ஆக பதிவானது.

இலங்கையில் நீடிக்கும் பொருளாதார நெருக்கடி காரணமாக பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84 அதிகரித்து ரூ.338க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை ரூ.113 அதிகரித்து ரூ.289க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Ipl Update: இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) கிரிக்கெட் போட்டியில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா அணியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“


  • 22:26 (IST) 19 Apr 2022
    மு.க.ஸ்டாலின் உடன் இயக்குநர் சீனு ராமசாமி சந்திப்பு

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இயக்குநர் சீனு ராமசாமி சந்தித்து பேசினார். பின்னர் பேசிய சீனு ராமசாமி, தமிழகத்தை ஆளும் 'ஆண் தாய்' முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றேன் என்று கூறியுள்ளார்


  • 21:52 (IST) 19 Apr 2022
    கிராண்ட்மாஸ்டர் குகேஷ்க்கு முதல்வர் வாழ்த்து

    சர்வதேச ஓபன் செஸ் போட்டியில் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற கிராண்ட்மாஸ்டர் குகேஷ்க்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்


  • 20:39 (IST) 19 Apr 2022
    ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை டெல்லி பயணம்

    தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை டெல்லி செல்கிறார். நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் தர கோரி தமிழக அரசின் சார்பில் தொடர் வலியுறுத்தல் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் ஆளுநரின் டெல்லி பயணம் அமைகிறது


  • 20:25 (IST) 19 Apr 2022
    தேநீர் விருந்தை முதல்வர் நிராகரித்தது சரியான செயல் அல்ல - வானதி சீனிவாசன்

    ஆளுநரின் தேநீர் விருந்தை முதல்வர் நிராகரித்தது சரியான செயல் அல்ல என பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கூறியுள்ளார்


  • 20:19 (IST) 19 Apr 2022
    ஆளுநரின் கார் மீது கருப்புக்கொடி வீசியது ஏற்புடையது அல்ல - திருமாவளவன்

    ஆளுநரின் கார் மீது கருப்புக்கொடி வீசியது ஏற்புடையது அல்ல என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்


  • 20:07 (IST) 19 Apr 2022
    ஆளுநரின் கான்வாய் மீது கற்கள், கொடிகள் வீசப்படவில்லை - ஏடிஜிபி விளக்கம்

    ஆளுநரின் கான்வாய் மீது கற்கள், கொடிகள் வீசியதாகக் கூறப்படுவதில் எந்த உண்மையும் இல்லை என ஆளுநரின் வாகனம் மீது தாக்குதல் நடந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டிற்கு சட்டம், ஒழுங்கு ஏடிஜிபி விளக்கம் அளித்துள்ளார்


  • 19:53 (IST) 19 Apr 2022
    சென்னை மாநகராட்சியில் 4.6 டன் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல்

    சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 4ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை 4.6 டன் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தியதற்காக ரூ.11.52 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது


  • 19:39 (IST) 19 Apr 2022
    எஸ்.பி. சஸ்பெண்ட் வழக்கு; சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு

    சஸ்பெண்ட் உத்தரவை திரும்பப் பெற தமிழக அரசுக்கு உத்தரவிட கோரி முன்னாள் எஸ்.பி. தொடர்ந்த வழக்கில், சட்டத்திற்கு உட்பட்டு பரிசீலித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    முன்னதாக, பாலியல் தொல்லை புகார் அளிக்க வந்த பெண் ஐபிஎஸ் அதிகாரியை தடுத்து நிறுத்தியதாக எஸ்.பி. சஸ்பெண்ட் செய்யப்பட்டார்


  • 19:27 (IST) 19 Apr 2022
    இலங்கையில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு; ஒருவர் உயிரிழப்பு

    இலங்கையின் கேகாலை மாவட்டம் ரம்புக்கன பகுதியில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.


  • 19:08 (IST) 19 Apr 2022
    நமது பாரம்பரிய மருத்துவ முறைகள் குறித்து பிரதமர் மோடி பெருமிதம்

    நமது பாரம்பரிய மருத்துவ முறைகளில் எந்தெந்த பருவத்தில் எதைச் சாப்பிடலாம், எதைச் சாப்பிடக்கூடாது என்பது பற்றிய தகவல்கள் நிறைந்துள்ளன. நம் முன்னோர்கள் எந்த நோய்க்கும் பாதி சிகிச்சை சமச்சீரான உணவில் இருப்பதாக நம்பினர் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்


  • 18:52 (IST) 19 Apr 2022
    ஸ்டெர்லைட் கழிவு - மாசு கட்டுப்பாடு வாரியம் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள அபாயகரமாக கழிவுகளை அப்புறப்படுத்தக் கோரிய வழக்கில் மாசு கட்டுப்பாடு வாரியம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது


  • 18:36 (IST) 19 Apr 2022
    இளையராஜாவை விமர்சனம் செய்து காயப்படுத்த வேண்டாம் - விஜயகாந்த்

    இசையமைப்பாளர் இளையராஜாவை விமர்சனம் செய்து காயப்படுத்தாமல் இருப்பது பெருந்தன்மையானது. இளையராஜாவின் கருத்தை 'கருத்து சுதந்திரம்' என்ற நோக்கத்தோடு ஏற்றுக்கொள்ள வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்


  • 18:27 (IST) 19 Apr 2022
    TANCET பொது நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க காலகெடு நீட்டிப்பு

    எம்.பி.ஏ, எம்.சி.ஏ உள்ளிட்ட படிப்புகளுக்கான TANCET பொது நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க காலகெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

    இதற்கு விண்ணப்பிக்க வரும் 21ம் தேதி மாலை 4 மணி வரை tancet.annauniv.edu என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.


  • 18:05 (IST) 19 Apr 2022
    காலியாக உள்ள 325 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கான சிறப்பு கலந்தாய்வு அறிவிப்பு

    அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் காலியாக உள்ள 325 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கான சிறப்பு கடைசி கட்ட கலந்தாய்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை ஒதுக்கீடு பெறாத மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்க வரும் 20,21 தேதிகளில் ஆன்லைன் வழியில் கட்டணம் செலுத்த வேண்டும்.


  • 17:42 (IST) 19 Apr 2022
    குஜராத் : பாரம்பரிய மருந்துகளுக்கான சர்வதேச மையத்திற்கு மோடி அடிக்கல்

    குஜராத் மாநிலம் ஜாம்நகரில் அமைக்கப்பட்டுள்ள பாரம்பரிய மருந்துகளுக்கான உலக சுகாதார அமைப்பின் சர்வதேச மையத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இது பாரம்பரிய மருந்துகளுக்கான முதல் சர்வதேச மையமாகும்


  • 17:21 (IST) 19 Apr 2022
    பக்கிங்ஹாம் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் - ஐகோர்ட்

    பக்கிங்ஹாம் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, முழுமையாக பழைய நிலைக்கு மீட்டெடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், ஆக்கிரமிப்பாளர்களுக்கு மறுவாழ்வு வழங்குவது, ஆக்கிரமிப்பை ஊக்குவிப்பது போன்றது என்றும் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது


  • 16:19 (IST) 19 Apr 2022
    ஆளுநர் வாகனம் மீதான தாக்குதலுக்கு முதல்வர் என்ன பதில் சொல்லப்போகிறார்? - இ.பி.எஸ் கேள்வி

    தமிழக ஆளுநரின் வாகனம் மீதான தாக்குதலுக்கு முதல்வர் என்ன பதில் சொல்லப்போகிறார்? என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.


  • 15:26 (IST) 19 Apr 2022
    தமிழ்நாடு முதலீட்டாளர்களின் முதல் முகவரி - அமைச்சர் தங்கம் தென்னரசு

    அமைச்சர் தங்கம் தென்னரசு: தமிழ்நாடு முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக இருந்து வருகிறது. சென்னையில் 2வது புதிய விமான நிலையம் அமைய உள்ள இடம் விரைவில் அறிவிக்கப்படும். திமுக அரசு ஏற்றுமதியில் ஏற்றத்திற்கான தனி கொள்கையை உருவாக்கியது. விவசாயிகளின் தோழனாக திமுக அரசு எப்போதும் இருக்கும். தென் கிழக்கு ஆசியாவில் தொழிலுக்கு உகந்த மாநிலமாக தமிழகத்தை மாற்றுவோம் ” என்று கூறினார்.


  • 15:10 (IST) 19 Apr 2022
    பேருந்து படிக்கட்டில் நின்று பயணித்தால் வழக்குப்பதிவு - சென்னை காவல்துறை எச்சரிக்கை

    பேருந்து படிக்கட்டில் நின்று பயணித்தால் வழக்குப்பதிவு செய்யப்படும் என சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையில் பேருந்து படிக்கட்டுகளில் நின்று பயணம் செய்த மாணவர்கள் அல்லாத 60 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று மட்டும் 111 பள்ளி மாணவர்கள், 43 கல்லூரி மாணவர்கள் படிக்கட்டில் நின்று பயணம் செய்ததால் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து அபராதம் விதிக்கப்பட்டது.


  • 14:36 (IST) 19 Apr 2022
    என்னை விட வலிமையான ஆளுநர் இங்கு யாரும் இல்லை, பெண்களால் எதையும் சாதிக்க முடியும் - தமிழிசை

    தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்: “நான் அதிகாரத்தை பயன்படுத்துவதாக சிலர் விமர்சனம் செய்கின்றனர்; நான் அதிகாரத்தை பயன்படுத்தவில்லை, அன்பைத் தான் பயன்படுத்துகிறேன். என்னை விட வலிமையான ஆளுநர் இங்கு யாரும் இல்லை, பெண்களால் எதையும் சாதிக்க முடியும்.” என்று தெரிவித்துள்ளார்.


  • 14:13 (IST) 19 Apr 2022
    ஆளுநருக்கே பாதுகாப்பு இல்லையென்றால், பொதுமக்களுக்கு பாதுகாப்பு எப்படி இருக்கும்? அண்ணாமலை கேள்வி

    மயிலாடுதுறையில் ஆளுநர் சென்ற நிகழ்வில் பாதுகாப்பு குறைபாடு என பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஆளுநருக்கே பாதுகாப்பு இல்லையென்றால், பொதுமக்களுக்கு பாதுகாப்பு எப்படி இருக்கும் என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். ஆளுநர் ஆர்.என்.ரவி கான்வாய் மீது திமுகவினர் தாக்குதல் என அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.


  • 13:02 (IST) 19 Apr 2022
    666 திருக்கோயில்களில் ₹844 கோடி செலவில் திருப்பணிகள்!

    தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றதிலிருந்து இப்போது வரை, சுமார் 666 திருக்கோயில்களில் ₹844 கோடி செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என சட்டப்பேரவையில், அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.


  • 12:57 (IST) 19 Apr 2022
    தென் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு..

    தென் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. வட தமிழக உள் மாவட்டங்களில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.


  • 12:52 (IST) 19 Apr 2022
    இயற்கை எரிவாயு வழங்க திட்டம்.. தமிழக அரசு!

    தமிழ்நாடு முழுவதும் 2.28 கோடி வீடுகளுக்கு ₹35,000 கோடியகுழாய்கள் மூலம் இயற்கை எரிவாயு வழங்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. 38 மாவட்டங்களில் 2,785 விற்பனை நிலையங்கள் மூலம் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.


  • 12:21 (IST) 19 Apr 2022
    வரி உயர்வுக்கு முதல் எதிரியாக இருந்தவர் பிரதமர் மோடி!

    ஜி.எஸ்.டி.யால் எதிர்பார்த்த அளவு வளர்ச்சி இல்லை. நிதியும் வரவில்லை. ஜி.எஸ்.டி வரி உயர்வுக்கு முதல் எதிரியாக இருந்தவர் தற்போதைய பிரதமர் மோடி. ஜி.எஸ்.டி.யை சீரமைக்க வேண்டிய அவசியம் உள்ளதாக சட்டப்பேரவையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.


  • 12:16 (IST) 19 Apr 2022
    ஓசூர் பகுதியில் புதிய விமான நிலையம்!

    ஓசூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க தமிழ்நாடு அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்க டிட்கோவுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது என சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட தொழில்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  • 12:13 (IST) 19 Apr 2022
    திராவிடர்களை எருமையுடன் ஒப்பிட்ட சீமான்.. ஜெயக்குமார் கண்டனம்!

    திராவிடர்களை எருமையுடன் ஒப்பிட்டு சீமான் பேசியது கண்டிக்கத் தக்கது. ஒட்டுமொத்த திராவிடர்களையும் கொச்சைப்படுத்தும் வகையில் அவரது கருத்து உள்ளது என முன்னாள் அதிமுக ஜெயக்குமார் கடுமையாக சாடியுள்ளார்.


  • 12:12 (IST) 19 Apr 2022
    கஞ்சா விற்றால் குண்டர் சட்டம்..

    கஞ்சா விற்றால் குண்டர் சட்டம் பாயும் என புதுச்சேரி ஐ.ஜி. சந்திரன் எச்சரித்துள்ளார். மேலும் கஞ்சா விற்பவர்கள் தொடர்பாக பொதுமக்கள் 112 என்ற எண்ணுக்கு புகார் அளிக்கலாம் எனவும் ஐஜி அறிவித்துள்ளார்.


  • 12:03 (IST) 19 Apr 2022
    மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கு!

    மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி’ அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடி செய்த வழக்கில்’ பணமோசடி வழக்கு ஆவணங்களை வழங்க மறுத்த சிறப்பு நீதிமன்ற உத்தரவை ரத்து செய்த தீர்ப்புக்கு, உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. மேலும் மேல்முறையீடு மனுவுக்கு பதிலளிக்க அமலாக்கத்துறை, தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


  • 11:43 (IST) 19 Apr 2022
    கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்க பணி!

    கிழக்கு கடற்கரை சாலையை 6 வழி சாலையாக மாற்றுவதற்கான பணிகள் மத்திய அரசால் நடைபெற்று வருகிறது. சாலை அமைக்கும் வரை சுங்க கட்டணம் தமிழக அரசுக்கு கிடைக்கும் என சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.


  • 11:40 (IST) 19 Apr 2022
    பள்ளி வேன் மோதி’ சிறுவன் உயிரிழப்பு.. 3 பேர் நீக்கம்!

    சென்னை ஆழ்வார்திருநகரில் கடந்த மாதம் 28 ஆம் தேதி, தனியார் பள்ளி வளாகத்தில் வேன் மோதி’ சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் பள்ளி முதல்வர் உள்ளிட்ட 3 பேரை பணி நீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.


  • 11:21 (IST) 19 Apr 2022
    தங்கம் தென்னரசு மீது ஓ.பி.எஸ் தாக்கு!

    நுணலும் தன் வாயால் கெடும்" என்ற பழமொழிக்கேற்ப, இந்தி மொழி விஷயத்தில் தி.மு.க.வின் இரட்டை வேடத்தை மறைமுகமாக ஒத்துக் கொண்ட அமைச்சர் தங்கம் தென்னரசு- ஓபிஎஸ் தாக்கு!


  • 11:14 (IST) 19 Apr 2022
    ஒரு சவரன் தங்கம் ரூ. 40,232-க்கு விற்பனை!

    இன்றைய காலை நிலவரப்படி,சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 168 குறைந்து ரூ. 40,232-க்கும், ஒரு கிராம் தங்கம் 5,029 ரூபாய்க்கு விற்பனையாகிறது.


  • 10:53 (IST) 19 Apr 2022
    புஷ்பா பட பாணியில் கடத்தல்

    தெலங்கானா மாநிலம் வாரங்கலில் புஷ்பா பட பாணியில் போலீசாரை ஏமாற்றி லாரி மற்றும் காரில் கஞ்சா கடத்திய 4 பேர் கைது; 500 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


  • 10:40 (IST) 19 Apr 2022
    சென்னையில் பள்ளி வாகனம் மோதி விபத்து-3 பேர் பணியிடைநீக்கம்

    சென்னையில் பள்ளி வாகனம் மோதி மாணவன் உயிரிழந்த விவகாரத்தில் தனியார் பள்ளி முதல்வர் உள்பட 3 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். கல்வித்துறை பரிந்துரையின் பேரில் பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.


  • 10:34 (IST) 19 Apr 2022
    இளையராஜா கூறியது தனிப்பட்ட கருத்து-சீமான்

    பிரதமர் மோடி குறித்து இளையராஜா கூறியது அவரது தனிப்பட்ட கருத்து; இப்பொழுது இளையராஜாவை திட்டுபர்கள் ஏற்கனவே மோடியை புகழ்ந்தவர்கள்தான் என்று நாம் தமிழர் கட்சியின் சீமான் தெரிவித்தார்.


  • 10:05 (IST) 19 Apr 2022
    திருட முடியாத சொத்து எது தெரியுமா?

    பள்ளிப்பருவம் என்பது திரும்ப கிடைக்காத மகிழ்ச்சியான காலம்; திருட முடியாத சொத்து உங்களின் கல்வி மட்டும் தான் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.


  • 09:52 (IST) 19 Apr 2022
    திருவல்லிக்கேணியில் விழிப்புணர்வு வாகனங்கள்

    சென்னை, திருவல்லிக்கேணியில் விழிப்புணர்வு வாகனங்களை துவக்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அரசு பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு நிகழ்வு லேடி வெலிங்டன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது. அமைச்சர் அன்பில் மகேஷ், திமுக எம்.எல்.ஏ உதயநிதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


  • 09:36 (IST) 19 Apr 2022
    மேலும் கொரோனா தொற்று அதிகரிப்பு

    இந்தியாவில் மேலும் 1,247 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஒருவர் உயிரிழந்தார்.

    நாடு முழுவதும் 11,860 பேர் சிகிச்சையில் உள்ளனர் என்று மத்திய சுகாதாரத் துறை தெரிவித்தது.


  • 09:21 (IST) 19 Apr 2022
    குழந்தையின் எதிர்காலத்திற்கு கல்விதான் ஏணிப்படி-அமைச்சர்

    குழந்தையின் எதிர்காலத்திற்கு கல்வி தான் ஏணிப்படி என்பதை உணர்ந்திருக்கும் அரசாங்கம் கல்வித்துறைக்கு அதிக நிதியை ஒதுக்கியுள்ளது; பள்ளிக் கல்வித் துறையை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்லும் நாளாக இந்த நாள் அமைய உறுதி ஏற்போம் என்றார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.


  • 09:09 (IST) 19 Apr 2022
    அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார் இலங்கை நிதி அமைச்சர்

    அமெரிக்காவில் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் இலங்கை நிதியமைச்சர் அலி சப்ரி சந்தித்தார். இலங்கை பொருளாதாரம் குறித்து இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


  • 08:47 (IST) 19 Apr 2022
    தொழில்துறை மானிய கோரிக்கை மீது இன்று விவாதம்

    தமிழக சட்டப்பேரவையில் தொழில்துறை, தமிழ் வளர்ச்சி துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெறுகிறது. தொழில் பூங்காக்கள், சிப்காட் தொழிற்சாலைகள், சென்னைக்கு அருகே விமான நிலையம் உள்ளிட்ட புதிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது.


  • 08:34 (IST) 19 Apr 2022
    இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்

    இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

    ரிக்டர் அளவில் 6ஆக பதிவானது.


Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment