Advertisment

Tamil News : சென்னை உட்பட 22 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை தொடரும் - வானிலை மையம்

Chennai Rain News Live, Tamil Nadu Flood Latest Updates

author-image
WebDesk
New Update
Tamil News : கனமழை எதிரொலி : இதுவரை 4 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு

Rain Update: தெற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், திருவண்ணாமலை, கடலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய 10 மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை,  ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை தொடரும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Advertisment

School, College Leave: தெற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவாரூர், அரியலூர்,பெரம்பலூர்,விழுப்புரம், திருநெல்வேலி, தூத்துக்குடி,புதுக்கோட்டை, ராமநாதபுரம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை தஞ்சாவூர், திருச்சி, கடலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  இதேபோல புதுச்சேரி மற்றும் காரைக்காலில், இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Petrol, Diesel Price: பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.101. 40 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 91.43 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 21:25 (IST) 27 Nov 2021
    சென்னை தி.நகர் பகுதியில் முதல்வர் ஆய்வு

    சென்னை உட்பட தமிழகம் முழுவதும் பலத்த மழை பெய்து வரும் நிலையில், முதல்வர் ஸ்டாலின், சென்னை தி.நகர் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். இதில் விஜயராகவா சாலை, ஜி.என்.சாலையில் கொட்டும் மழையிலும் முதல்வர் நேரில் ஆய்வு செய்து வருகிறார்.



  • 20:34 (IST) 27 Nov 2021
    தமிழகத்தில் 15 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை

    தமிழகத்தில் சென்னை செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் நாகை கடலூர் ராமநாதபுரம் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.



  • 19:55 (IST) 27 Nov 2021
    ரயில் மோதி யானை பலி : ஓட்டுநர் உதவியாளர் மீது வழக்கு

    கோவையில் ரயில் மோதி யானைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக ரயில் ஓட்டுநர் சுபயர் மற்றும் உதவியாளர் அகில் ஆகியோர் மீது வன உயிர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.



  • 19:53 (IST) 27 Nov 2021
    பிளாஸ்டிக் பைகளுக்கு எதிராக மக்கள் இயக்கம்

    மக்கள் துணிப்பைகளை மீண்டும் பயன்படுத்தும் வகையில், பிளாஸ்டிக் பைகளுக்கு எதிராக மக்கள் இயக்கம் செயல்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.



  • 19:04 (IST) 27 Nov 2021
    கடுமையான மழை வெள்ளம் : செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தண்ணீர்

    கடுமையான மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மாநகராட்சியில் பல பகுதியில் தண்ணீரில் தத்தளித்து வரும் நிலையில், வியாசர்பாடியில் உள்ள ஜீவா சப்வேயில் அரசு பேருந்து சிக்கிக்கொண்டதால் பரபரப்பை ஏற்பட்டுள்ளது. மேலும் செங்கல்பட்டில் உள்ள அரசு மருத்துவமனை தண்ணீரில் மூழ்கியுள்ள நிலையில், மேலும் கனமழைக்கு வாப்புள்ளதால் சென்னை மக்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.



  • 19:01 (IST) 27 Nov 2021
    சொந்த ஊர் திரும்பிய தமிழக மீனவர்கள்

    இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட நாகை மாவட்டத்தை சேர்ந்த 18 மீனவர்கள் இன்று தங்களது சொந்த ஊரான அக்கரைபேட்டைக்கு வந்தடைந்தனர்.



  • 18:17 (IST) 27 Nov 2021
    மகளிர் டி20 உலககோப்பை தகுதிச்சுற்று போட்டிகள் ரத்து

    ஜிம்பாப்வேயில் நடைபெறும் மகளிர் டி20 உலககோப்பை தகுதிச்சுற்று போட்டிகள் உருமாறிய கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.



  • 18:03 (IST) 27 Nov 2021
    தென்ஆப்பிரிக்க தொடரை ரத்து செய்த நெதர்லாந்து

    உருமாறிய கொரோனா அச்சுறுத்தல்’ காரணமாக தென்ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்தை நெதர்லாந்து கிரிக்கெட் அணி ரத்து செய்துள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான எஞ்சிய போட்டிகள் பின்னர் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



  • 17:00 (IST) 27 Nov 2021
    கான்பூர் டெஸ்ட்: இந்திய அணி 63 ரன்கள் முன்னிலை!

    கான்பூரில் நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 345 ரன்கள் சேர்த்த நிலையில், தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 296 ரன்களை சேர்த்துள்ளது.

    நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர்கள் வில் யங் 89 ரன்களும், டாம் லாதம் 95 ரன்களும் சேர்த்தனர். இந்தியா தரப்பில் அக்சர் படேல் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    தொடர்ந்து 2வது இன்னிங்ஸில் களமிறங்கிய இந்திய அணியில் சுப்மன் கில் 1 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார். தற்போது 3ம் நாள் ஆட்டநேரம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், இந்திய அணியில் மயங்க் அகர்வால் 4 ரன்னுடனும், சேதேஷ்வர் புஜாரா 9 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

    தற்போது நியூசிலாந்து அணியை விட இந்திய அணி 63 ரன்கள் முன்னிலையில் இருக்கிறது.



  • 16:57 (IST) 27 Nov 2021
    டிராக்டர் பேரணி ஒத்திவைப்பு; விவசாய சங்கங்கள் அறிவிப்பு

    3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வதற்கான வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா-2021- வரும் 29-ந் தேதி தொடங்குகிற நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், அன்று நடத்துவதாக இருந்த டிராக்டர் பேரணி ஒத்திவைக்கப்படுவதாக விவசாய அமைப்புகள் தெரிவித்துள்ளன.



  • 16:31 (IST) 27 Nov 2021
    கோவை: ரயில்மோதி உயிரிழந்த யானை கருவுற்றிருந்தது பிரேத பரிசோதனையில் கண்டுபிடிப்பு

    கோவையில் ரயில் மோதி உயிரிழந்த யானைகளில் ஒன்று கருவுற்று இருந்தது பிரதே பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. கருவுற்ற யானையின் வயிற்றில் இருந்து யானை சிசு இறந்த நிலையில் மீட்கப்பட்டது. தற்போது இரயில் மோதி உயிரிழந்த யானைகளின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.



  • 15:51 (IST) 27 Nov 2021
    5 ஆயிரம் பரிசு!

    சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் சேர்ப்பவர்களுக்கு ரூ5 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைதுறை அமைச்சகம் அறிவித்துள்ளது. ஓர் ஆண்டில் அதிகபட்சமாக 5 பேருக்கு பரிசுத்தொகை வழங்கப்படும் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • 15:39 (IST) 27 Nov 2021
    3 வேளாண் சட்ட ரத்து மசோதா வரும் 29-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல்..!

    மத்திய அமைச்சர்கள் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் கடந்த 24 ந்தேதி நடந்தது. இந்த கூட்டத்தில் 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வதற்கான வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா-2021-க்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

    இந்நிலையில், இந்த மசோதா வரும் 29-ந் தேதி தொடங்குகிற நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடரில் தாக்கலாகிறது. இது குறித்து பேட்டி அளித்த மத்திய வேளாண்துறை மந்திரி நரேந்திர சிங் தோமர், ‘மூன்று விவசாய சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதா, குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.



  • 15:04 (IST) 27 Nov 2021
    உருமாறிய ஒமிக்ரான் கொரோனா பரவலை தடுப்பதில் கவனம் தேவை - பிரதமர் மோடி அறிவுறுத்தல்

    உருமாறிய ஒமிக்ரான் கொரோனா பரவலை தடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். மேலும், உருமாறிய கொரோனா கண்டறியப்பட்ட நாடுகளில் இருந்து இந்தியா வருபவர்களை கண்காணிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்



  • 14:23 (IST) 27 Nov 2021
    சபரிமலை செல்ல குழந்தைகளுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் தேவையில்லை – கேரள அரசு

    சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் சமர்ப்பிக்க தேவையில்லை என கேரள அரசு அறிவித்துள்ளது.



  • 14:23 (IST) 27 Nov 2021
    சபரிமலை செல்ல குழந்தைகளுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் தேவையில்லை – கேரள அரசு

    சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் சமர்ப்பிக்க தேவையில்லை என கேரள அரசு அறிவித்துள்ளது.



  • 14:05 (IST) 27 Nov 2021
    போக்ஸோ சட்ட செயல்பாடுகள் - முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

    பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்க போக்ஸோ சட்ட செயல்பாடுகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். கூட்டத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திர பாபு உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.



  • 13:24 (IST) 27 Nov 2021
    29ம் தேதி ஏற்படும் காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்திற்கு ஆபத்து இல்லை - வானிலை ஆராய்ச்சி மையம்

    வருகின்ற 29ம் தேதி அன்று உருவாக உள்ளா புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் தமிழகத்திற்கு ஆபத்து ஏதும் இல்லை என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் அறிவித்துள்ளார். இயல்பைக் காட்டிலும் தமிழகம் இந்த ஆண்டு கூடுதலாக 74% மழைப் பொழிவைப் பெற்றுள்ளது.



  • 12:57 (IST) 27 Nov 2021
    வானிலை அறிவிப்பு

    ராணிப்பேட்டை, திருவள்ளூர் ஆகிய 2 மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதே நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி மற்றும் வேலூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிப்பு



  • 12:34 (IST) 27 Nov 2021
    நந்திவரம் ஏரி நிரம்பி வெள்ளப்பெருக்கு

    செங்கல்பட்டு கூடுவாஞ்சேரியில் உள்ள நந்திவரம் ஏரி நிரம்பியதால் ஜி.எஸ்.டி. சாலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ள நீர் புகுந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.



  • 12:14 (IST) 27 Nov 2021
    தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

    தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது



  • 12:13 (IST) 27 Nov 2021
    மழைநீர் தேக்கம் காரணமாக 3 சுரங்கப்பாதைகளில் போக்குவரத்துக்கு தடை

    சென்னையில் மழைநீர் தேக்கம் காரணமாக 3 சுரங்கப்பாதைகளில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ரங்கராஜபுரம் இருசக்கர வாகன சுரங்கப்பாதை, மேட்லி மற்றும் கணேஷேபுரம் சுரங்கப்பாதைகளில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று மாநகராட்சி அறிவித்துள்ளது.



  • 11:54 (IST) 27 Nov 2021
    நீட் மசோதா - ஒப்புதல் வழங்க வலியுறுத்தல்

    நீட் மசோதாவை உடனடியாக குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்து தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மருத்துவ மாணவர் சேர்க்கையில் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள பாதிப்பை கருத்தில் கொண்டு விரைவில் ஒப்புதல் பெற்றுத் தர கோரிக்கை வைத்துள்ளார்.



  • 11:37 (IST) 27 Nov 2021
    ஜெயலலிதா வீட்டு சாவியை ஒப்படைக்கக் கோரி மனு

    ஜெயலலிதாவின் வேதா இல்ல சாவியை ஒப்படைக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் தீபக் சார்பில் மனு கொடுத்துள்ளார். மனு குறித்து அரசு தலைமை வழக்கறிஞருடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் தகவல் அளித்துள்ளார்.



  • 11:34 (IST) 27 Nov 2021
    சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் அதிக மழை பெய்துள்ளது - அமைச்சர்

    சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதிக கனமழை பெய்து வருகிறது. சென்னையில் 34 இடங்களில் தண்ணீரை வெளியேற்றியுள்ளோம். 127 மோட்டர்கள் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் கூறியுள்ளார்.



  • 11:30 (IST) 27 Nov 2021
    புது ஒமிக்ரான் கொரோனா வைரஸ்- பிரதமர் மோடி அவசர ஆலோசனை!

    தென்னப்பிரிக்கா நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய புதுவகை ஒமிக்ரான் கொரோனா வைரஸ் வீரியம் மிகுந்தது. இது தடுப்பூசிகளுக்கு கட்டுப்படாது. எனவே உலக நாடுகளை பாதுகாப்புடன் இருக்க உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. இந்நிலையில், ஒமிக்ரான் வைரஸ் இந்தியாவில் பராவாமல் தடுக்க பிரதமர் மோடி, அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.



  • 11:29 (IST) 27 Nov 2021
    Chennai Rains: மழைநீர் தேங்கியதால் 2 சுரங்கப் பாதைகளில் போக்குவரத்து நிறுத்தம்!

    சென்னையில் தொடர்-மழையால் ரங்கராஜபுரம் மற்றும் டி.நகர் மேட்லி சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் இந்த 2 சுரங்கப்பாதைகளிலும் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.



  • 10:46 (IST) 27 Nov 2021
    சென்னையில் தொடர்மழை: பல இடங்களில் மின்விநியோகம் நிறுத்தம்!

    சென்னையின் பல பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனிடையே பசுல்லா சாலை, டி.நகர், உஸ்மான் சாலை, கிரியப்பா சாலை, பெரும்பாக்கம், அஜீஸ் நகர், கே.கே நகர் ஆகிய பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியிருப்பதால் முன்னெச்சரிக்கை கருதி அங்கு மின்விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.



  • 10:00 (IST) 27 Nov 2021
    Chennai Rains: மழைநீர் தேங்கியதால் 2 சுரங்கப் பாதைகளில் போக்குவரத்து நிறுத்தம்!

    சென்னையில் தொடர்-மழையால் ரங்கராஜபுரம் மற்றும் டி.நகர் மேட்லி சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் இந்த 2 சுரங்கப்பாதைகளிலும் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.



  • 09:56 (IST) 27 Nov 2021
    செம்பரம்பாக்கம் ஏரியில் உபரிநீர் திறப்பு 3,000 கன அடியாக உயர்வு: புழல் ஏரியிலிருந்து 1,500 கன-அடி நீர் வெளியேற்றம்!

    சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருவதால், செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 6000 கன-அடியாக உயர்ந்துள்ளது. இதனால் ஏரியிலிருந்து உபரிநீர் திறப்பு 2000 கன- அடியிலிருந்து 3000 கன-அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல புழல் ஏரிக்கு, நீர்வரத்து 803 கன-அடியிலிருந்து 2,633 கன-அடியாக அதிகரித்துள்ளது. இதனால் ஏரியிலிருந்து விநாடிக்கு 1,500 கன-அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.



  • 09:50 (IST) 27 Nov 2021
    தூத்துக்குடி: 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் அவதி!

    தெற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் தொடர்மழை பெய்து வருகிறது. தொடர் கனமழையால் பெரும்பாலான நீர் நிலைகள் நிரம்பிவிட்டன. இந்நிலையில் கனமழை காரணமாக தூத்துக்குடி கதிர்வேல் நகர் பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர். சூசை நகரில் மழைநீர் புகுந்ததால் பல மக்கள் வீடுகளைவிட்டு வெளியேறி, வெளியேறி, மேடான இடங்களுக்கு குடியேறினர்.



  • 09:16 (IST) 27 Nov 2021
    சென்னையில் விடியவிடிய கொட்டித் தீர்த்த மழை: செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 2000 கனஅடி நீர் வெளியேற்றம்!

    வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு இடி, மின்னலுடன் பலத்தமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்தது. புளியந்தோப்பு குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் குளம்போல் தேங்கியுள்ளது. இதனால் சாலைகளில் நீர்ப் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு ஆளாகினர். குறிப்பாக சென்னை அசோக்நகரில் உள்ள போஸ்டல் குடியிருப்பு முழுவதும் வெள்ளநீரால் சூழ்ந்துள்ளதால் மக்கள் தவித்து வருகின்றனர்.தொடர் கனமழையால் பெரும்பாலான நீர் நிலைகள் நிரம்பிவிட்டன. மேலும் பல நிரம்பும் தருவாயில் உள்ளன. இதனிடையே திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் மழை தொடர்வதால் செம்பரம்பாக்காம் ஏரியில் இருந்து 2000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.



  • 09:05 (IST) 27 Nov 2021
    புதுவகை ஒமிக்ரான் கொரோனா வைரஸ்: 10 மடங்கு வீரியம்: உலக நாடுகளுக்கு அச்சுறுத்தல்!

    தென்னாப்பிரிக்கா நாடுகளான போஸ்ட்வானா, ஹாங்காங், இஸ்ரேல் ஆகிய பகுதிகளில், பி.1.1.529 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அங்கிருந்து வரும் பயணிகளை தீவிர சோதனைக்கு உட்படுத்துமாறு மத்திய அரசு, மாநில அரசுகளை கேட்டுக்கொண்டது. இதனிடையே இந்த உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ்-க்கு ஒமிக்ரான் என உலக சுகாதார அமைப்பு பெயர் சூட்டியது. இந்த வைரஸ் 10 மடங்கு வீரியம் கொண்டது. தடுப்பூசிக்கு கட்டுப்படாமல், வேகமாக பரவக்கூடிய இந்த புதிய கொரோனா வைரஸ், உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளதாக கூறும் விஞ்ஞானிகள், இதை 'கவலைக்குரிய வைரஸ் வகை' என்ற பிரிவில் சேர்த்துள்ளனர்.



  • 08:51 (IST) 27 Nov 2021
    மாநாடு படக்குழுவுக்கு ரஜினிகாந்த வாழ்த்து!

    வெங்கட் பிரபு இயக்கத்தில், சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளியான மாநாடு திரைப்படம், தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. பலரும் நல்ல விமர்சனங்களைக் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், மாநாடு படத்தை பார்த்த ரஜினிகாந்த், என்னையும், சிலம்பரசனையும் வாழ்த்தினார், என பட இயக்குனர் வெங்கட் பிரபு டுவிட்டரில் கூறியுள்ளார்.



  • 08:49 (IST) 27 Nov 2021
    சென்னையில் விடியவிடிய கொட்டித் தீர்த்த மழை: செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 2000 கனஅடி நீர் வெளியேற்றம்!

    வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு இடி, மின்னலுடன் பலத்தமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்தது. புளியந்தோப்பு குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் குளம்போல் தேங்கியுள்ளது. இதனால் சாலைகளில் நீர்ப் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு ஆளாகினர். குறிப்பாக சென்னை அசோக்நகரில் உள்ள போஸ்டல் குடியிருப்பு முழுவதும் வெள்ளநீரால் சூழ்ந்துள்ளதால் மக்கள் தவித்து வருகின்றனர்.தொடர் கனமழையால் பெரும்பாலான நீர் நிலைகள் நிரம்பிவிட்டன. மேலும் பல நிரம்பும் தருவாயில் உள்ளன. இதனிடையே திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் மழை தொடர்வதால் செம்பரம்பாக்காம் ஏரியில் இருந்து 2000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.



  • 08:28 (IST) 27 Nov 2021
    தூத்துக்குடி: 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் அவதி!

    தெற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் தொடர்மழை பெய்து வருகிறது. தொடர் கனமழையால் பெரும்பாலான நீர் நிலைகள் நிரம்பிவிட்டன. இந்நிலையில் கனமழை காரணமாக தூத்துக்குடி கதிர்வேல் நகர் பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர். சூசை நகரில் மழைநீர் புகுந்ததால் பல மக்கள் வீடுகளைவிட்டு வெளியேறி, வெளியேறி, மேடான இடங்களுக்கு குடியேறினர்.



Tamilnadu News Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment