Advertisment

Tamil News Highlights: மகாராஷ்டிராவில் மேலும் இருவருக்கு ஒமிக்ரான்...பாதிப்பு 23 ஆக உயர்வு

தமிழகத்தில் நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
New Update
Tamil News Highlights: மகாராஷ்டிராவில் மேலும் இருவருக்கு ஒமிக்ரான்...பாதிப்பு 23 ஆக உயர்வு

Corona Update: உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் புதுவகை உருமாறிய ஒமிக்ரான் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் கால்பதித்து விட்டது. இதனால் மத்திய மாநில அரசுகள், சர்வதேச விமான நிலையங்களில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக அதிக அபாய பட்டியலில் உள்ள நாடுகளிலிருந்து வரும் பயணிகள் பலகட்ட சோதனைக்கு பிறகு, ஒமிக்ரான் இல்லை என உறுதியான பிறகுதான் விமான நிலையங்களில் இருந்து வெளியே வர அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நேற்றுமட்டும் புதிதாக 9 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை, நேற்று அபாய நாடுகளிலிருந்து திரும்பிய 5 பேருக்கு டெல்டா வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் யாருக்கும் ஒமிக்ரான் பாதிப்பு இல்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Advertisment

Petrol, Diesel Price: சென்னையில் தொடர்ந்து 32வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.101. 40 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 91.43 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Nagaland Civilian Killings: நாகாலாந்தில் மோன் மாவட்டத்தில் கிளர்ச்சியாளர்கள் என நினைத்து நிலக்கரி சுரங்கத்தில் வேலை பார்த்து வந்த அப்பாவி மக்கள் 12 பேரை பாதுகாப்பு படையினர் சுட்டு கொன்றனர். கண்டித்து நாகாலாந்தின் டியூன்சாங் நகரில் பல அரசு கட்டடங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இதனால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.  இதனிடையே இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த நாகாலாந்து முதல்வர் நைபியு ரியோ, உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டார்.

 “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil


  • 21:55 (IST) 06 Dec 2021
    அரிசி உட்பட அனைத்து பொருட்களும் ஒரே தவணையில் வழங்கப்பட வேண்டும் - உணவுத்துறை

    பிரதமரின் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் அரிசி உட்பட அனைத்து பொருட்களும் ஒரே தவணையில் வழங்கப்பட வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.


  • 21:43 (IST) 06 Dec 2021
    கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் - தமிழக அரசு

    கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது


  • 21:29 (IST) 06 Dec 2021
    ‘கழுவெளி' ஈரநிலத்தை பறவைகள் காப்பகமாக அறிவித்து அரசாணை வெளியீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ‘கழுவெளி' ஈரநிலத்தை தமிழ்நாட்டின் 16வது பறவைகள் காப்பகமாக அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆணை பல்லுயிர் மற்றும் பறவைகள் பாதுகாப்பில் முக்கியப் பங்களிப்பாக இருக்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்


  • 20:55 (IST) 06 Dec 2021
    TNPSC தேர்வு தேதி செவ்வாய்க் கிழமை அறிவிப்பு

    இந்த ஆண்டிற்கான TNPSC தேர்வு அட்டவணை நாளை செவ்வாய்க்கிழமை வெளியிடப்படும் என தேர்வாணையம் தெரிவித்துள்ளது


  • 20:10 (IST) 06 Dec 2021
    தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 719 பேருக்கு கொரோனா; 10 பேர் உயிரிழப்பு

    தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 719 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 10 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்


  • 19:39 (IST) 06 Dec 2021
    மகாராஷ்டிராவில் மேலும் 2 பேருக்கு ஒமிக்ரான் கொரோனா தொற்று உறுதி

    மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் இருவருக்கு ஒமிக்ரான் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அமெரிக்கா மற்றும் தென் ஆப்ரிக்காவிலிருந்து மகாராஷ்டிரா வந்த இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


  • 19:18 (IST) 06 Dec 2021
    புனே சென்றடைந்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

    புனே விமானப்படை தளத்தில் நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த பங்கேற்க உள்ளநிலையில், தற்போது புனே சென்றடைந்துள்ளார்


  • 19:16 (IST) 06 Dec 2021
    மருந்து கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

    நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் மருந்து கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் குறித்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.


  • 19:14 (IST) 06 Dec 2021
    வணிகர் நல வாரியத்தில் கட்டணமின்றி நிரந்தர உறுப்பினராக சேர்வதற்கான கால அவகாசம் நீட்டிப்பு

    தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தில் கட்டணமின்றி நிரந்தர உறுப்பினராக சேர்வதற்கான கால அவகாசத்தை மார்ச் 31, 2022 வரை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்


  • 19:14 (IST) 06 Dec 2021
    அதிமுக தேர்தல் முடிவுகளை வெளியிட தடை கோரிய வழக்கு - நீதிமன்றம் உத்தரவு

    அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் முடிவுகளை வெளியிட தடை கோரிய வழக்கில், அதிமுக தேர்தல் ஆணையர்கள் பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன் பதிலளிக்க சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது


  • 18:29 (IST) 06 Dec 2021
    இந்தியா - ரஷ்யா இடையே அதிக முதலீடுகள் செய்யப்பட வேண்டும்- பிரதமர் மோடி

    அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள ரஷ்ய அதிபர் புதின், பிரதமர் மோடியை சந்தித்து வருகிறார். அப்போது இந்தியா - ரஷ்யா இடையே அதிக முதலீடுகள் செய்யப்பட வேண்டும். கொரோனா காலத்திலும் இந்தியா, ரஷ்யா உறவில் பாதிப்பு ஏற்படவில்லை. இந்தியாவுக்கு ரஷ்யா அளித்து வரும் ஒத்துழைப்புக்கு நன்றி என பிரதமர் மோடி கூறியுள்ளார்


  • 18:28 (IST) 06 Dec 2021
    இந்தியாவை வலுவான நாடாகவும், நம்பகமான நண்பனாக கருதுகிறோம் - ரஷ்ய அதிபர் புதின்

    அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள ரஷ்ய அதிபர் புதின், பிரதமர் மோடியை சந்தித்து வருகிறார். அப்போது இந்தியாவை வலுவான நாடாகவும், நம்பகமான நண்பனாக கருதுகிறோம் என ரஷ்ய அதிபர் புதின் கூறியுள்ளார்


  • 18:07 (IST) 06 Dec 2021
    திமுக அரசைக் கண்டித்து டிச.9ஆம் தேதி ஆர்ப்பாட்டம் - அதிமுக அறிவிப்பு

    மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்தாத திமுக அரசைக் கண்டித்து டிசம்பர் 9ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக அறிவித்துள்ளது


  • 17:50 (IST) 06 Dec 2021
    அதிமுக ஒருங்கிணைப்பாளர்களாக போட்டியின்றி தேர்வு; ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ்-இபிஎஸ் மரியாதை

    அதிமுக ஒருங்கிணைப்பாளர்களாக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து இருவரும் ஜெயலலிதா நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர்


  • 17:47 (IST) 06 Dec 2021
    85% பேருக்கு முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி - மத்திய சுகாதாரத்துறை

    இந்தியாவில் 85% பேருக்கு முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்


  • 17:42 (IST) 06 Dec 2021
    முறைப்படி செயற்குழு கூடி தேர்தல் நடைபெற்றது - தம்பிதுரை

    முறைப்படி செயற்குழு கூடி அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. அதிமுக தேர்தல் விதிகளில் மாற்றம் குறித்து தலைமை தேர்தல் ஆணையரிடம் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது என தம்பிதுரை கூறியுள்ளார்


  • 16:50 (IST) 06 Dec 2021
    ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கில் வாரிசுகள் ஜெ தீபா, தீபக்கை சேர்க்க ஐகோர்ட் உத்தரவு

    2008, 2009ம் ஆண்டு செல்வ வரி கணக்கை தாக்கல் செய்யவில்லை என வருமான வரித்துறை வழக்கு தொடர்ந்திருந்த்நது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஜெயலலிதாவுக்கு எதிரான செல்வ வரி வழக்கில், ஜெயலலிதா காலமாகிவிட்டதால் அவரது வாரிசுகளான தீபக், தீபாவை வழக்கில் சேர்க்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


  • 16:05 (IST) 06 Dec 2021
    அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் போட்டியின்றி தேர்வு

    அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பி.எஸ், இணை ஒருங்கிணைப்பாளராக இ.பி.எஸ் ஓபிஎஸ், ஈபிஎஸ் போட்டியின்றி தேர்வானதாக அறிவிப்பு வெளியானது. இதனால், அதிமுக தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகள், தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.


  • 16:00 (IST) 06 Dec 2021
    அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் போட்டியின்றி தேர்வு

    அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பி.எஸ், இணை ஒருங்கிணைப்பாளராக இ.பி.எஸ் ஓபிஎஸ், ஈபிஎஸ் போட்டியின்றி தேர்வானதாக அறிவிப்பு வெளியானது. இதனால், அதிமுக தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகள், தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.


  • 15:25 (IST) 06 Dec 2021
    நாகாலாந்தில் தவறான தகவலின் பேரில் துப்பாக்கிச்சூடு.. அமித்ஷா விளக்கம்

    தீவிரவாதிகள் இருந்ததாக வந்த தகவலின் பேரில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.நாகாலாந்தில் பதற்றம் நிலவினாலும் சூழ்நிலை தற்போது கட்டுக்குள் உள்ளது துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக ராணுவம் உயர்மட்ட விசாரணை நடத்தி வருகிறது. அப்பாவி மக்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு மத்திய அரசு வருத்தம் தெரிவிக்கிறது. இனி இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க கவனத்துடன் செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


  • 15:25 (IST) 06 Dec 2021
    நாகாலாந்தில் தவறான தகவலின் பேரில் துப்பாக்கிச்சூடு.. அமித்ஷா விளக்கம்

    தீவிரவாதிகள் இருந்ததாக வந்த தகவலின் பேரில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.நாகாலாந்தில் பதற்றம் நிலவினாலும் சூழ்நிலை தற்போது கட்டுக்குள் உள்ளது துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக ராணுவம் உயர்மட்ட விசாரணை நடத்தி வருகிறது. அப்பாவி மக்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு மத்திய அரசு வருத்தம் தெரிவிக்கிறது. இனி இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க கவனத்துடன் செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


  • 14:02 (IST) 06 Dec 2021
    பாலியல் தொல்லை - மதுரை அரசு மருத்துவமனை மருத்துவர் சஸ்பெண்ட்

    பெண் நோயாளிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில், மதுரை அரசு மருத்துவமனை ரேடியாலஜி மருத்துவர் சக்கரவர்த்தியை சஸ்பெண்ட் செய்து மருத்துவ கல்வி இயக்குநர் நாராயணபாபு உத்தரவிட்டுள்ளார்.


  • 13:57 (IST) 06 Dec 2021
    ஐஐடியில் தமிழ்த்தாய் வாழ்த்து - தமிழச்சி தங்கபாண்டியன் வலியுறுத்தல்

    சென்னை ஐஐடியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.


  • 13:17 (IST) 06 Dec 2021
    எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் படம் பார்த்த மாவட்ட ஆட்சியர்

    திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை உற்சாகப்படுத்தும் வகையில் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு படத்திற்கு அழைத்துச் சென்று பார்த்து மகிழ்ந்துள்ளனர்.


  • 13:17 (IST) 06 Dec 2021
    மாமனிதன் படத்தின் டீசர் இன்று வெளியீடு

    யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் விஜய் சேதுபதி மற்றும் காயத்ரி நடிப்பில் உருவாகியுள்ள மாமனிதன் படத்தின் டீசர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


  • 13:01 (IST) 06 Dec 2021
    எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் படம் பார்த்த மாவட்ட ஆட்சியர்

    திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை உற்சாகப்படுத்தும் வகையில் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு படத்திற்கு அழைத்துச் சென்று பார்த்து மகிழ்ந்துள்ளனர்.


  • 12:53 (IST) 06 Dec 2021
    10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

    நெல்லை, தென்காசி, தேனி, மதுரை, விருதுநகர், திருச்சி, கரூர், திருப்பூர், நாமக்கல், திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


  • 12:52 (IST) 06 Dec 2021
    சென்னையில் பருவமழை

    சென்னை ஆலந்தூர், பரங்கிமலை, கிண்டி, மீனம்பாக்கம், ஆதம்பாக்கம் உள்பட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் ஒரு வாரத்திற்கு பின் கனமழை பெய்ய துவங்கியுள்ளது.


  • 12:50 (IST) 06 Dec 2021
    வானிலை அறிவிப்பு

    தென்மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


  • 12:37 (IST) 06 Dec 2021
    மாநிலங்களவை 2 மணி வரை ஒத்திவைப்பு

    நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சிகல் அமளி காரணமாக மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது


  • 12:20 (IST) 06 Dec 2021
    ICC தரவரிசையில் இந்தியா முன்னிலை

    நடப்பு உலக டெஸ்ட் சாம்பியனான நியூசிலாந்து அணியை பின்னுக்கு தள்ளி, ஐ.சி.சி. தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளது இந்திய அணி. நியூசிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரில் வெற்றி பெற்றதன் மூலம் முன்னிலை பெற்றுள்ளது இந்திய அணி


  • 11:39 (IST) 06 Dec 2021
    இரட்டைத் தலைமை தொடரும் - கடம்பூர் ராஜூ

    அதிமுகவில் இனி இரட்டைத் தலைமைதான் தொடரும் என்றும், டி.டி.வி. தினகரன் மற்றும் சசிகலாவை மீண்டும் கட்சியில் இணைப்பது குறித்த கேள்விக்கே இடம் இல்லை. அதிமுகவின் நிரந்தரப் பொதுச்செயலாளர் ஜெயலலிதா மட்டுமே என்று முன்னாள் அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜூ அறிவிப்பு


  • 11:37 (IST) 06 Dec 2021
    விமான நிலையங்கள் விரிவாக்கம் - முதல்வர் ஆலோசனை

    தமிழகத்தில் விமான நிலையங்கள் விரிவாக்கத்திற்காக நிலங்களை கையகப்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் என்ன என்பது குறித்து வருவாய்த்துறை அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை


  • 11:34 (IST) 06 Dec 2021
    ராஜாஜி மருத்துவமனையில் மருத்துவர் இடைநீக்கம்

    மதுரை அரசு மருத்துவமனையில் ஸ்கேன் எடுக்க சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த மருத்துவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்


  • 11:25 (IST) 06 Dec 2021
    கமல் ஹாசனிடம் விளக்கம் கேட்கப்படும் - ராதாகிருஷ்ணன்

    மருத்துவமனையில் தனிமைபடுத்தப்பட்டிருந்தாலும், அதன் பின் 7 நாட்கள் வீட்டுத்தனிமையில் இருக்க வேண்டும் என்றுகூறி கொரோனாவிலிருந்து குணமடைந்த சில நாட்களிலேயே பொது நிகழ்ச்சியில் பங்கேற்றது குறித்து கமல்ஹாசனிடம் விளக்கம் கேட்கப்படும் என்று ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


  • 11:23 (IST) 06 Dec 2021
    டெல்லியில் எதிர்கட்சிகள் போராட்டம்

    12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.


  • 10:53 (IST) 06 Dec 2021
    தமிழகம் வந்த 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

    ஹை ரிஸ்க் நாடுகளில் இருந்து தமிழகம் வந்த 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மேலும், 7 பேருக்கும் ஒமிக்ரான் பாதிப்பு இருக்கிறதா என்று பரிசோதிக்கப்பட்டதில் 6 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.


  • 10:51 (IST) 06 Dec 2021
    இந்திய அணி வெற்றி

    மும்பை, வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் 372 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. மேலும் இதன் மூலம், 2013-ம் ஆண்டு முதல் இந்தியாவில் நடைபெற்ற அனைத்து டெஸ்ட் தொடரையும் வென்று இந்திய அணி அசத்தி வருகிறது.


  • 10:50 (IST) 06 Dec 2021
    இந்திய அணி வெற்றி

    மும்பை, வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் 372 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. மேலும் இதன் மூலம், 2013-ம் ஆண்டு முதல் இந்தியாவில் நடைபெற்ற அனைத்து டெஸ்ட் தொடரையும் வென்று இந்திய அணி அசத்தி வருகிறது.


  • 10:49 (IST) 06 Dec 2021
    பிரதமர் பொறுப்பேற்க வேண்டும் - திருமாவளவன்

    நாகாலாந்து துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் பொறுப்பேற்க வேண்டும் என்று எம்.பி., திருமாவளவன் கூறியுள்ளார்.


  • 10:15 (IST) 06 Dec 2021
    மருத்துவக் கல்லூரி மாணவன் தற்கொலை முயற்சி

    தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் 2-ம் ஆண்டு மாணவன் தற்கொலை முயற்சி செய்துள்ளார். மூன்றாம் ஆண்டு மாணவர்கள் ராகிங் செய்ததால் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


  • 10:13 (IST) 06 Dec 2021
    தகுதியற்ற வேட்புமனுக்கள் நிராகரிப்பு

    அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் வேட்புமனு பரிசீலனையில் தகுதியற்ற வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. ஓபிஎஸ்- இபிஎஸ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாகவும் அறிவிக்கப்பட உள்ளது.


  • 09:13 (IST) 06 Dec 2021
    கரூர் மாவட்டத்தில் பள்ளிகள் விடுமுறை

    கரூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக 1 முதல் 8-ம் வகுப்புகளுக்கு மட்டும் இன்று விடுமுறை கொடுத்து ஆட்சியர் பிரபுசங்கர் அறிவித்துள்ளார்.


  • 09:12 (IST) 06 Dec 2021
    தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு அனுமதி இல்லை

    நாமக்கல் நகராட்சியில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள், பொது இடங்களுக்கு செல்ல அனுமதி இல்லை என்று நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.


  • 09:10 (IST) 06 Dec 2021
    அம்பேத்கர் நினைவு தினம்

    அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி அவரது சிலைக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்டோர் டெல்லியில் மரியாதை செலுத்தினர்.


  • 08:24 (IST) 06 Dec 2021
    புதுச்சேரியில் 1 முதல் 8-ம் வகுப்புகளுக்கு இன்று முதல் நேரடி வகுப்புகள் தொடக்கம்

    கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ள நிலையில், புதுச்சேரியில் 1 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கு 20 மாதங்களுக்குப் பிறகு, இன்று நேரடி வகுப்புகள் தொடங்குகின்றன. ஒருநாள் விட்டு ஒருநாள் மதியம் வரை மட்டுமே வகுப்புகள், பள்ளிக்கு வருவது கட்டாயமில்லை, பெற்றோரின் அனுமதி கடிதம் அவசியம், ஆசிரியர்களும் ஊழியர்களும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.


  • 08:21 (IST) 06 Dec 2021
    இந்தியா வந்தடைந்தார் ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர்

    டெல்லியில், இன்று நடைபெறும் இந்தியா மற்றும் ரஷ்யா இடையிலான உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா வந்தடைந்தார் ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கே லாவ்ரோவ்.


  • 08:21 (IST) 06 Dec 2021
    ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இந்தியா வருகை

    இந்தியா- ரஷ்யா இடையேயான 21-வது உச்சி மாநாடு நடைபெற உள்ளதை அடுத்து அரசு முறை பயணமாக இந்தியாவுக்கு இன்று வருகிறார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின். புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு இருக்கிறது.


  • 08:19 (IST) 06 Dec 2021
    பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி 3 அடுக்கு பாதுகாப்புடன் கண்காணிப்பு

    பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் தீவிர வாகனச் சோதனைகளில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.மேலும், அரசுக் கட்டடங்களுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, சென்னை முழுவதும் 3 அடுக்கு உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.


  • 08:15 (IST) 06 Dec 2021
    முட்டை கொள்முதல் விலை 20 காசுகள் உயர்வு!

    நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு, தினமும் 4 கோடி முட்டைகள் உற்பத்தி ஆகிறது. இங்கிருந்து அண்மை மாநிலங்களுக்கு முட்டை இறக்குமதி செய்யப்படுகிறது. இந்நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் முட்டை கொள்முதல் விலை கடந்த வாரம், , 15 காசுகள் உயர்ந்து, ரூ.4.50 காசுகளாக இருந்தது. இந்நிலையில் இன்று, மீண்டும் முட்டை கொள்முதல் விலை, 20 காசுகள் அதிகரித்து ரூ. 4.85 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


Tamilnadu News Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment