Advertisment

Tamil News Today : தமிழகம், புதுவையில் இன்று மோடி தொடங்கி வைக்கும் திட்டங்கள்!

Tamil Nadu News, Tamil News LIVE Updates, Tamil Nadu Omicron Latest News 11 January 2022-தமிழகத்தில் இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
New Update
Tamil News Today : தமிழகம், புதுவையில் இன்று மோடி தொடங்கி வைக்கும் திட்டங்கள்!

Tamil Nadu News Today LIVE:புதுச்சேரியில் 25வது இளைஞர் திருவிழா, திறந்தவெளி அரங்குடன் கூடிய காமராஜர் மணிமண்டபம் மற்றும் ரூ.122 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப மையத்தை பிரதமர் மோடி காணொலி வாயிலாக இன்று திறந்து வைக்கிறார்.

Advertisment

Pongal Special Buses: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்கள் சொந்த ஊருக்கு செல்ல வசதியாக, கோயம்பேடு, பூந்தமல்லி, மாதவரம், கே.கே.நகர், தாம்பரம், தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையங்களில் இருந்து, இன்று முதல் 13ஆம் தேதி வரை 16,768 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்ள மற்றும் புகார் தெரிவிக்க 94450 14450, 94450 14436 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தால் 1800 425 6151, 044-2474 9002 என்ற கட்டணமில்லா எண்களில் புகார் அளிக்கலாம் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.

Tamil Nadu News LIVE Updates

Corona Update: உலகம் முழுவதும் கொரோனாவால் 31 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் தினசரி கொரோனா பாதிப்பில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு நிலவரம்

அமெரிக்கா – 5 லட்சம்

இந்தியா – 1.61 லட்சம்

இங்கிலாந்து – 1.41 லட்சம்

இத்தாலி – 1 லட்சம்

ஸ்பெயின் – 97 ஆயிரம்

உலகம் முழுவதும் இதுவரை கொரோனாவில் இருந்து 26 கோடி பேர் குணமடைந்துள்ள நிலையில், 55.11 லட்சம் பேர் உயிரிழந்தனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil


  • 21:26 (IST) 11 Jan 2022
    3-வது டெஸ்ட் போட்டி : இந்திய அணி 223 ரன்களில் ஆல்அவுட்

    தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில், முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 223 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியுள்ளது. அதிகபட்சமாக கோலி – 79 ரன்களும் , புஜாரா - 43 ரன்கள் எடுத்தனர்


  • 20:54 (IST) 11 Jan 2022
    இந்த பதிவு சித்தார்த்தின் தாழ்வுமனப்பான்மையை காட்டுகிறது - வானதி சீனிவாசன்

    பிரதமர் மோடி பாதுகாப்பு மீறல் குறித்து கண்டனம் தெரிவித்து பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால்-க்கு பதில் அளித்த நடிகர் சித்தார்த்தின் ட்விட் தற்போது சமூக வைலைதளங்களில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரின் பதிவு பெண்களை தவறாக சித்திரிக்கும் வகையில் உள்ளதாக மகளிர் அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    இந்நிலையில், இந்த பதிவு சித்தார்த்தின் தாழ்வுமனப்பான்மையை காட்டுகிறது. என்று கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் கருத்து தெரிவித்துள்ளார்.


  • 20:53 (IST) 11 Jan 2022
    இந்த பதிவு சித்தார்த்தின் தாழ்வுமனப்பான்மையை காட்டுகிறது - வானதி சீனிவாசன்

    பிரதமர் மோடி பாதுகாப்பு மீறல் குறித்து கண்டனம் தெரிவித்து பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால்-க்கு பதில் அளித்த நடிகர் சித்தார்த்தின் ட்விட் தற்போது சமூக வைலைதளங்களில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரின் பதிவு பெண்களை தவறாக சித்திரிக்கும் வகையில் உள்ளதாக மகளிர் அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    இந்நிலையில், இந்த பதிவு சித்தார்த்தின் தாழ்வுமனப்பான்மையை காட்டுகிறது. என்று கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் கருத்து தெரிவித்துள்ளார்.


  • 20:27 (IST) 11 Jan 2022
    இனிமேல் முகக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே மதுபானம் வழங்கப்படும் - டாஸ்மாக்

    தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக பொதுமக்களுக்கு பல்வேறு கட்டப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், இனிமேல் முகக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே மதுபானம் வழங்கப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    மேலும் ஒரே நேரத்தில், 5 நபர்களுக்கு மட்டுமே அனுமதி என்றும், 2 பேருக்கு இடையில 6 அடி இடைவெளி கட்டாயம் என்றும், டாஸ்மாக் கடைக்கு முன்பு கூட்டம் கூட கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.


  • 19:55 (IST) 11 Jan 2022
    இனிமேல் முகக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே மதுபானம் வழங்கப்படும் - டாஸ்மாக்

    தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக பொதுமக்களுக்கு பல்வேறு கட்டப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், இனிமேல் முகக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே மதுபானம் வழங்கப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    மேலும் ஒரே நேரத்தில், 5 நபர்களுக்கு மட்டுமே அனுமதி என்றும், 2 பேருக்கு இடையில 6 அடி இடைவெளி கட்டாயம் என்றும், டாஸ்மாக் கடைக்கு முன்பு கூட்டம் கூட கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.


  • 19:53 (IST) 11 Jan 2022
    தமிழகத்தில் மேலும் 15,379 பேருக்கு கொரோனா தொற்று

    தமிழகத்தில் மேலும் 15,379 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் கொரோனாவுக்கு இன்று 20 பேர் பலியாகியுள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 36,886 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் கொரோனாவிலிருந்து மேலும் 3,043 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், 75,083 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்


  • 19:19 (IST) 11 Jan 2022
    பிப்ரவரி மாதம் ஐபிஎல் ஏலம்?

    ஐபிஎல் தொடரின் 2022-ம் ஆண்டு்காக வீரர்கள் ஏலம் பெங்களூருவில் பிப்ரவரி 12, 13 ஆகிய தேதிகளில் நடைபெற்றும் என்று தகவல் வெளியாகியுள்ளது.


  • 19:18 (IST) 11 Jan 2022
    வேலைநிறுத்த போராட்டங்களில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு பணி உயர்வு

    வேலைநிறுத்த போராட்டங்களில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க தொடக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் ஆசிரியர்கள் மீது பதியப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் ரத்த செய்யப்பட்டுள்ளதாகவுமு், பணிநீக்க காலத்தை பணிக்காலமாக மாற்றவும் நடவடிக்கை மேற்கொள்ப்படும் என்று தொடக்க கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  • 19:14 (IST) 11 Jan 2022
    11 மருத்துவ கல்லூரிகள் திறப்பு : தமிழகம் வரும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்

    தமிழகத்தில் 11 மருததுவக்க கல்லூரிகள் நாளை திறக்ககப்பட உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி காணொலி காட்சி வழியாக மருத்துவக்கல்லூரிகளை திறந்து வைக்க உள்ளார். இதற்காக தலைமை செயலகத்தில் நடைபெறும் விழாவில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கலந்துகொள்கிறார்.


  • 18:57 (IST) 11 Jan 2022
    கர்நாடகாவில் ஒரே நாளில் 14,473 நபர்களுக்கு கொரோனா

    கர்நாடகாவில் இன்று ஒரே நாளில் 14,473 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பெங்களூருவில் மட்டும் 10,800 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கர்நாடகாவில் பரவல் விகிதம் 10.3%ஆக உயர்ந்துள்ளது.


  • 18:52 (IST) 11 Jan 2022
    கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கம் தொடங்கியது. ஆனாலும், பயணிகள் இல்லாமல் கோயம்பேடு பேருந்து நிலையம் களையிழந்து காணப்படுகிறது.


  • 18:18 (IST) 11 Jan 2022
    பொங்கல் பரிசு: கொள்முதலில் முறைகேடு இருந்தால் ஆதாரத்தோடு புகார் அளிக்கலாம் - அமைச்சர்

    பொங்கல் பரிசு தொகுப்பு கொள்முதலில் முறைகேடு இருந்தால் ஆதாரத்தோடு புகார் அளிக்கலாம் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். பொங்கல் பரிசு தொகுப்பு கொள்முதலில் முறைகேடு இருப்பது நிரூபிக்கப்பட்டால் நடவடிக்கை எடுகத் தயார் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.


  • 17:49 (IST) 11 Jan 2022
    பொங்கல் பரிசு தொகுப்பு கொள்முதலில் முறைகேடு ஏதுமில்லை; அமைச்சர் சக்கரபாணி விளக்கம்

    பொங்கல் பரிசு தொகுப்பு கொள்முதலில் முறைகேடு நடந்துள்ளதாக அதிமுக குற்றம்சாட்டிய நிலையில், பொங்கல் பரிசு தொகுப்பு கொள்முதலில் முறைகேடு ஏதுமில்லை; திமுக ஆட்சியை குறை கூறவே பொங்கல் தொகுப்பு குறித்து அதிமுக புகார் கூறுகிறது என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.


  • 17:46 (IST) 11 Jan 2022
    தமிழகத்தில் ஜன. 17ம் தேதி அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை

    தமிழகத்தில் ஜனவரி 17ம் தேதி அரசு அலுவலகங்கள் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


  • 17:34 (IST) 11 Jan 2022
    பிரபல ரவுடி குணாவை என்கவுன்ட்டர் செய்யும் திட்டமில்லை - ஐகோர்ட்டில் போலீஸ் தகவல்

    பிரபல ரவுடி படப்பை குணாவை என்கவுன்ட்டர் செய்யும் திட்டம் ஏதுமில்லை என்று உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தெரிவித்துள்ளது. சரணடைந்தால் விதிகளுக்கு உட்பட்டு நடத்தப்படுவார் என்று காவல் துறை தெரிவித்துள்ளது.


  • 17:00 (IST) 11 Jan 2022
    கோவா தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை - சரத் பவார் பேட்டி

    கோவா சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் கூறியுள்ளார்


  • 16:50 (IST) 11 Jan 2022
    ஜல்லிக்கட்டு முன்பதிவு இன்று மாலை 5 மணிக்கு தொடக்கம்

    ஜல்லிக்கட்டு முன்பதிவு இன்று மாலை 5 மணிக்கு தொடங்கும் என்றும், போட்டியில் பங்கேற்கும் வீர‌ர்கள் https://madurai.nic.in/ என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம் என்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்


  • 16:15 (IST) 11 Jan 2022
    சபரிமலையில் பேட்டை துள்ளல் நிகழ்ச்சி

    சபரிமலையில் மகரஜோதிக்கு முன்பு நடைபெறும் பேட்டை துள்ளல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. ஆலங்காட்டை சேர்ந்தவர்கள் கொரோனா கட்டுப்பாடுகளுடன் பேட்டை துள்ளல் நிகழ்ச்சியில் பங்கேற்று வருகின்றனர்


  • 16:03 (IST) 11 Jan 2022
    கர்நாடகாவில் ரசாயன வாயு கசிவு - 20 பேர் மருத்துவமனையில் அனுமதி

    கர்நாடக மாநிலம் மங்களூருவில் மீன் பதப்படுத்தும் மையத்தில் ரசாயன வாயு கசிவு ஏற்பட்டது. இதில் பாதிக்கப்பட்டு, மூச்சுத்திணறல் ஏற்பட்ட 20 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்


  • 16:01 (IST) 11 Jan 2022
    தேர்தலில் மாயாவதி போட்டியிட மாட்டார் – பகுஜன் சமாஜ் எம்.பி. மிஸ்ரா

    உத்தரபிரதேச சட்டப்பேரவை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி போட்டியிட மாட்டார் என அக்கட்சியின் எம்.பி. மிஸ்ரா தெரிவித்துள்ளார்


  • 15:58 (IST) 11 Jan 2022
    நாடாளுமன்ற வளாகத்தில் சபாநாயகர் ஓம் பிர்லா ஆய்வு

    பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறவுள்ள நிலையில் கொரோனா முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து, நாடாளுமன்ற வளாகத்தில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆய்வு மேற்கொண்டார்


  • 15:56 (IST) 11 Jan 2022
    சென்னை மாநகராட்சியில் பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு வழங்கும் அறிவிப்பாணை ரத்து

    சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு வழங்கும் அறிவிப்பாணையை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. மேலும், வார்டுகளின் எண்ணிக்கை அடிப்படையிலேயே இடஒதுக்கீடு வழங்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


  • 15:36 (IST) 11 Jan 2022
    ஐம்பொன் சிலைகள் உட்பட 40 கோடி மதிப்புள்ள 11 சிலைகள் மீட்பு

    மாமல்லபுரத்தில் பல கோடி மதிப்புடைய ஐம்பொன் சிலைகள் உட்பட 11 சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட சிலைகளின் மதிப்பு சுமார் 40 கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது. மீட்கப்பட்ட சிலைகள் கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைக்க உள்ளன


  • 15:08 (IST) 11 Jan 2022
    பொறியியல் படிப்புகளில் 50% இடங்கள் நிரம்பவில்லை

    பொறியியல் படிப்புகளில் நடப்பாண்டு 70,437 இடங்கள் நிரம்பவில்லை. 1,51,870 இடங்களில் 81,433 இடங்கள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது


  • 15:01 (IST) 11 Jan 2022
    சுவாமி பிரசாத் மவுரியா ராஜினாமா

    உத்தரபிரதேச அமைச்சரவையில் இருந்து சுவாமி பிரசாத் மவுரியா ராஜினாமா செய்தார். மேலும், அகிலேஷ் யாதவ் முன்னிலையில் சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார் மவுரியா.


  • 14:22 (IST) 11 Jan 2022
    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,68,063 பேருக்கு கொரோனா

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 1,68,063 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 69,959 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். மேலும் 277 பேர் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்துள்ளனர்.


  • 14:19 (IST) 11 Jan 2022
    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி தேதி மாற்றம்

    வரும் 16-ம் தேதி நடைபெறவிருந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி, முழு ஊரடங்கு காரணமாக வரும் 17-ம் தேதி நடைபெறும் என்று ஆட்சியர் அனிஷ் சேகர் அறிவித்திருக்கிறார்.


  • 13:54 (IST) 11 Jan 2022
    மற்ற‌ மாநிலங்களோடு ஒப்பிட்டால் மட்டும் போதாது - ஸ்டாலின்

    தமிழ்நாட்டின் வளர்ச்சி இலக்குகளை மற்ற‌ மாநிலங்களோடு ஒப்பிட்டு பெருமை கொள்வது மட்டும் போதாது, வளர்ந்த நாடுகள் மற்றும் தெற்காசிய நாடுகளின் சிறந்த நாடுகளுடன் ஒப்பிட்டு நமது இலக்குகளை அடைய வேண்டும் என்று அனைத்து துறை செயலாளர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.


  • 13:53 (IST) 11 Jan 2022
    இந்தியா பேட்டிங் தேர்வு

    தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி தலைமையில் இந்திய அணி இன்று களமிறங்கும் இந்தியா பேட்டிங் தேர்வு செய்திருக்கிறது.


  • 13:43 (IST) 11 Jan 2022
    கொரோனா தொற்று குறைந்த பின் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தவேண்டும்

    தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அரசு வெளியிட்டுள்ள ஆணைக்கு இடைக்கால தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. கொரோனா தொற்று குறைந்த பின் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த மனுவில் கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. வரும் 14 முதல் 18-ம் தேதி வரை விழா காலங்களில் மதுக்கடைகளுக்கு அனுமதி அளித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் மனு குறிப்பிடப்பட்டுள்ளது.


  • 12:27 (IST) 11 Jan 2022
    ஈஷா மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு தடை - உயர் நீதிமன்றம்

    சுற்றுச்சூழல் அனுமதியின்றி கட்டுமானங்கள் மேற்கொண்டதாக ஈஷா அறக்கட்டளைக்கு எதிராக மேல் நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் நோட்டீஸை எதிர்த்து ஈஷா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


  • 12:09 (IST) 11 Jan 2022
    லதா மங்கேஷ்கர் மருத்துவமனையில் அனுமதி!

    பிரபல திரைப்பட பாடகி லதா மங்கேஷ்கர் உடல் நலக் குறைவு காரணமாக மும்பையில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


  • 11:38 (IST) 11 Jan 2022
    பொங்கலுக்குப் பிறகு முழு ஊரடங்கிற்கு அவசியமில்லை -அமைச்சர் மா.சுப்பிரமணியன்

    தமிழ்நாட்டில் பொங்கலுக்கு பிறகு முழு ஊரடங்கிற்கு அவசியமில்லை. மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை கடைப்பிடித்து மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்பதே முதல்வரின் நோக்கம் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.


  • 11:25 (IST) 11 Jan 2022
    டெல்லியில் தனியார் அலுவலகங்களை மூட உத்தரவு

    டெல்லியில் விலக்கு அளிக்கப்பட்ட தனியார் நிறுவனங்களை தவிர பிற அனைத்து நிறுவனங்களையும் மூட டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


  • 11:22 (IST) 11 Jan 2022
    நடிகர் சிம்புவுக்கு 'கவுரவ டாக்டர்' பட்டம்

    வேல்ஸ் பல்கலைக்கழகம் சார்பில் நடிகர் சிம்புவுக்கு 'கவுரவ டாக்டர்' பட்டம் வழங்கப்பட்டது. கலைத்துறையில் சிம்புவின் சாதனைகளை கவுரவப்படுத்தும் வகையில் டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது


  • 11:15 (IST) 11 Jan 2022
    மாநில முதல்வர்களுடன் ஜன.13 பிரதமர் மோடி ஆலோசனை

    கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக மாநில முதலமைச்சர்களுடனான பிரதமர் மோடியின் ஆலோசனைக் கூட்டம் வரும் 13ம் தேதி நடைபெற உள்ளது


  • 11:00 (IST) 11 Jan 2022
    ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு ஆன்லைன் முன்பதிவு!

    ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று பிற்பகல் 3 மணிக்கு துவங்க உள்ளது. இதில் பங்கேற்க விரும்புவர்கள் madurai.nic.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்யலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.


  • 10:47 (IST) 11 Jan 2022
    கொரோனா பரவல்: தொற்று இருந்தால் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள்!

    டெல்டாவும். ஒமிக்ரானும் வேகமாக பரவி வருகிறது. எனவே லேசான தொற்று உள்ளவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளலாம். வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டோருக்கு தொலைபேசி மூலம் ஆலோசனை வழங்கப்படும். வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள வசதி இல்லாதவர்கள் கொரோனா சிகிச்சை மையம் வரலாம்.

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 15-ஆம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடைபெறாது. அடுத்த வாரம் சனிக்கிழமை வழக்கம் போல் முகாம் நடைபெறும் என அமைச்சர் மா.சுப்பிரமணியம் கூறியுள்ளார்.


  • 10:44 (IST) 11 Jan 2022
    கொரோனா பரவல்: தொற்று இருந்தால் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள்!

    டெல்டாவும். ஒமிக்ரானும் வேகமாக பரவி வருகிறது. எனவே லேசான தொற்று உள்ளவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளலாம். வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டோருக்கு தொலைபேசி மூலம் ஆலோசனை வழங்கப்படும். வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள வசதி இல்லாதவர்கள் கொரோனா சிகிச்சை மையம் வரலாம்.

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 15-ஆம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடைபெறாது. அடுத்த வாரம் சனிக்கிழமை வழக்கம் போல் முகாம் நடைபெறும் என அமைச்சர் மா.சுப்பிரமணியம் கூறியுள்ளார்.


  • 10:32 (IST) 11 Jan 2022
    பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின்!

    முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே கோவிட் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் எடுத்த நிலையில், இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில், பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.


  • 10:31 (IST) 11 Jan 2022
    ஞாயிறு ஊரடங்கு: முன்பதிவு செய்தவர்களின் கட்டணம் திருப்பி தரப்படும்!

    தமிழகம் முழுவதும் ஞாயிறு அன்று முழு ஊரடங்கு அறிவிப்பால், ஏற்கெனவே 16ம் தேதி முன்பதிவு செய்தவர்களின் கட்டணம் 2 நாட்களில் திருப்பி தரப்படும் என போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.


  • 10:28 (IST) 11 Jan 2022
    பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின்!

    முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே கோவிட் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் எடுத்த நிலையில், இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில், பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டார்


  • 10:27 (IST) 11 Jan 2022
    கொரோனா பரவல்: மாநில முதல்வர்களுடன் மோடி அவசர ஆலோசனை!

    நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், பிரதமர் மோடி, இன்று மாலை 4 மணிக்கு மாநில முதல்வர்களுடன் அவசர ஆலோசனை நடத்துகிறார்.


  • 10:12 (IST) 11 Jan 2022
    இன்றைய தங்கம் விலை நிலவரம்!

    சென்னையில் இன்றைய காலை நிலவரப்படி, ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 உயர்ந்து, ரூ.35,896-க்கு விற்பனையாகிறது.


  • 10:08 (IST) 11 Jan 2022
    அமித்ஷா உடன் வரும் 17ஆம் தேதி தமிழக எம்.பி.க்கள் சந்திப்பு!

    மத்திய அமைச்சர் அமித்ஷா உடன் வரும் 17-ம் தேதி தமிழக எம்.பி.க்கள் சந்திக்க உள்ளனர். தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது தொடர்பாக நேரில் வலியுறுத்த உள்ளனர்.


  • 10:08 (IST) 11 Jan 2022
    டெல்லி சிறைகளில் கைதிகள், சிறை ஊழியர்களுக்கு கொரோனா!

    டெல்லியில் திகார் சிறையில் 42 கைதிகள், 34 ஊழியர்களுக்கும், மண்டோலி சிறையில் 24 கைதிகள், 8 ஊழியர்களுக்கும் மற்றும் ரோகினி சிறையில் 6 ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.


  • 09:41 (IST) 11 Jan 2022
    பொங்கல் பரிசு தொகுப்புக்கு பதிலாக ரூ.1000 கொடுத்திருக்கலாம்: ஓபிஎஸ்!

    ரேஷனில் வழங்கப்பட்ட பொங்கல் பரிசு பொருட்களை வெளிமாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்வது நியாயமா? தொகுப்புக்கு பதில் ரூ1000 கொடுத்திருந்தால் மகிழ்ச்சியாக இருக்கும் என மக்கள் கூறுவதாக ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.


  • 09:36 (IST) 11 Jan 2022
    கர்நாடகா காங்கிரஸ் மாநில தலைவர் சிவகுமார் மீது வழக்குப்பதிவு செய்ய வலியுறுத்தல்!

    அரசியல் நிகழ்வுக்கு பள்ளி மாணவர்களை பயன்படுத்தியதால், கர்நாடகா காங்கிரஸ் மாநில தலைவர் சிவகுமார் மீது வழக்குப் பதிய வேண்டும் என, கர்நாடக டிஜிபிக்கு, தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. . மேகதாது பாத யாத்திரையில் பள்ளி மாணவர்களை பயன்படுத்தியதால் சிவகுமார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்.


  • 09:33 (IST) 11 Jan 2022
    இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 4,461 ஆக உயர்வு!

    இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்துள்ளது. நேற்று 4,033 ஆக இருந்த ஒமிக்ரான் பாதிப்பு ஒரே நாளில் 4,461 ஆக உயர்ந்துள்ளது.


  • 09:31 (IST) 11 Jan 2022
    திமுக எம்.எல்.ஏ நல்லதம்பிக்கு கொரோனா உறுதி!

    திருப்பத்தூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. நல்லதம்பிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.


  • 09:30 (IST) 11 Jan 2022
    இந்தியாவில் ஒரே நாளில் 1,68,063 பேருக்கு கொரோனா தொற்று!

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,68,063 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. நேற்று ஒரே நாளில் 227 பேர் தொற்றால் உயிரிழந்தனர். மேலும் 69,959 கொரோனா தொற்றிலிருந்து குணமாகியுள்ளனர்.


  • 08:57 (IST) 11 Jan 2022
    மூத்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் மரணம்!

    மூத்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் எம்.முத்துராமன்(83) உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார்.


  • 08:54 (IST) 11 Jan 2022
    சென்னை புறநகர் ரயிலில் 2 டோஸ் போடாத 2,177 பேருக்கு அனுமதி மறுப்பு!

    சென்னை புறநகர் ரயிலில் பயணிக்க நேற்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன. இந்நிலையில் நேற்று மட்டும், சென்னை புறநகர் ரயிலில் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று இல்லாத 2,177 பேருக்கு நேற்று அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.


  • 08:51 (IST) 11 Jan 2022
    பெரியார் சிலை அவமதிப்பு: இந்து முன்னணி ஆதரவாளர் இருவர் கைது!

    கோவை வெள்ளலூரில் பெரியார் சிலையை அவமதித்த வழக்கில், இந்து முன்னணி ஆதரவாளர்களான அருண் கார்த்திக், மோகன்ராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இருவரையும் 15 நாட்கள் சிறையில் அடைக்க கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


  • 08:51 (IST) 11 Jan 2022
    மூத்த குடிமக்களுக்கு வீட்டிற்கே சென்று பூஸ்டர் தடுப்பூசி!

    சென்னையில் இணை நோய்கள் பாதித்த 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், ”1913” என்ற எண்ணில் பதிவு செய்தால், வீட்டிற்கே சென்று பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் என மாநகாராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.


  • 08:45 (IST) 11 Jan 2022
    பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள்!

    தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் 10,11,12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழக்கம்போல நேரடி வகுப்புகள் தொடரும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.


  • 08:45 (IST) 11 Jan 2022
    தமிழகத்தில் ஜனவரி 31 வரை கல்லூரிகளுக்கு விடுமுறை!

    தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக, ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதால், வரும் ஜனவரி 31 வரை அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை அளித்து உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


  • 08:44 (IST) 11 Jan 2022
    தமிழகத்தில்1 முதல் 9ஆம் வகுப்புகளுக்கு ஜனவரி 31 வரை விடுமுறை!

    தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, வரும் ஜனவரி 31ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மற்றும் கல்வித் தொலைக்காட்சி மூலம் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


  • 08:44 (IST) 11 Jan 2022
    சென்னை ஐஐடி-க்கு புதிய இயக்குனர் நியமனம்!

    வி.காமகோடி சென்னை ஐஐடி-யின் புதிய இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட சக்தி மைக்ரோபிராசசரை வடிவமைத்தவர்.


  • 08:43 (IST) 11 Jan 2022
    ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்!

    கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை, இலங்கை கடற்படையினர் எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி கற்கள், பாட்டில்களை தூக்கி எறிந்து விரட்டியடித்தனர். அத்துடன் மீனவர்களின் வலைகளையும் நாசம் செய்தனர்.


  • 08:32 (IST) 11 Jan 2022
    பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள்!

    பொதுத்தேர்வு எழுதும் 10,11,12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழக்கம்போல நேரடி வகுப்புகள் தொடரும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.


  • 08:31 (IST) 11 Jan 2022
    ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்!

    கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை, இலங்கை கடற்படையினர் எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி கற்கள், பாட்டில்களை தூக்கி எறிந்து விரட்டியடித்தனர். அத்துடன் மீனவர்களின் வலைகளையும் நாசம் செய்தனர்.


  • 08:24 (IST) 11 Jan 2022
    இந்திய ஓபன் பேட்மிண்டன் தொடர் இன்று தொடக்கம்!

    டெல்லியில் இந்திய ஓபன் பேட்மிண்டன் தொடர் இன்று தொடங்குகிறது. இதில் இந்தியாவின் பி.வி.சிந்து, சாய்னா நேவால், ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். கொரோனா தொற்று காரணமாக இந்திய வீரர் சாய் பிரனீத் மற்றும் இங்கிலாந்து அணி வீரர்கள் தொடரிலிருந்து விலகியுள்ளனர்.


  • 08:24 (IST) 11 Jan 2022
    இந்தியா, தெ..ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 3வது டெஸ்ட் போட்டி இன்று துவக்கம்!

    இந்தியா – தெ..ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 3வது டெஸ்ட் போட்டி இன்று கேப்டவுனில் தொடங்க உள்ளது. இந்த போட்டியில், விராட் கோலி மீண்டும் கேப்டனாக இன்று களமிறங்க உள்ளார். 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஏற்கெனவே இரு அணிகளும் 1 - 1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.


  • 08:23 (IST) 11 Jan 2022
    கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடியின் படம் நீக்கம்!

    5 மாநில சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, உத்தரகாண்ட், உத்தரபிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் வழங்கப்படும் கொரோனா தடுப்பூசி சான்றிதழில் இருந்து பிரதமர் மோடியின் படம் நீக்கி மத்திய சுகாதார அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.


Tamilnadu News Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment