நாடு முழுவதும் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று மாலை 4.30 மணிக்கு ஆலோசனை நடத்துக்கிறார்.
Tamilnadu News Update: தமிழ்நாட்டில் 4 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் 11 மருத்துவக் கல்லூரிகள் மற்றும் 24 கோடி ரூபாய் செலவில் சென்னையில் அமைக்கப்பட்டுள்ள செம்மொழித் தமிழ் மத்திய நிறுவனத்தின் புதிய வளாகத்தையும் காணொலி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.
அதேபோல், புதுச்சேரியில் 25வது இளைஞர் திருவிழா, திறந்தவெளி அரங்குடன் கூடிய காமராஜர் மணிமண்டபம் மற்றும் ரூ.122 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப மையத்தை பிரதமர் மோடி காணொலி வாயிலாக இன்று திறந்து வைக்கிறார்.
Tamil Nadu News LIVE Updates
Corona Update: கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், அமெரிக்காவில் 6.29 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலக நாடுகளில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம்;
- பிரான்ஸ் - 3.68 லட்சம்
- இத்தாலி - 2.20 லட்சம்
- இந்தியா - 1.85 லட்சம்
- ஸ்பெயின் - 1.35 லட்சம்
- அர்ஜெண்டினா - 1.34 லட்சம்
- இங்கிலாந்து - 1.20 லட்சம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “
- 22:33 (IST) 12 Jan 2022தீவிர சிகிச்சைப் பிரிவில் பிரபல இந்தி பாடகர் லதா மங்கேஸ்கர்
கொரோனா தொற்றல் பாதிக்கப்பட்ட பிரபல இந்தி பாடகர் லதா மங்கேஸ்கருக்கு கொரோனா மற்றும் நிமோனியா பாதப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் மும்பையில் உள்ள தனியார் மருத்தவமனையில்- தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
- 21:25 (IST) 12 Jan 2022மகாராஷ்டிராவில், இன்று மேலும் 46,000 பேருக்கு கொரோனா
மகாராஷ்டிராவில், இன்று மேலும் 46,000 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், மும்பை 16,420 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தொற்று பாதிப்பக்கு 7 பேர் பலியாகியுள்ளனர்.
- 20:48 (IST) 12 Jan 2022டெல்லியில் இன்று புதிதாக 27,561 பேருக்கு கொரோனா தொற்று
டெல்லியில் இன்று புதிதாக 27,561 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தொற்று பாதிப்பக்கு 40 பேர் பலியாகியுள்ளனர். இதில் நேற்று டெல்லியில், 21,259 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தககது.ய
- 20:31 (IST) 12 Jan 2022நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படத்தின் கம்போசிங் பணிகள் நிறைவு
லைக்கா நிறுவனம் தயாரிப்பில் நடிகர் வடிவேல் நடிக்கும் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படத்தின் கம்போசிங் பணிகள் முடிவடைந்துள்ளது இதனை தற்போது புகைப்படத்துடன் வெளியிட்டு அறிவித்துள்ளது படக்குழு
- 20:30 (IST) 12 Jan 20225 நாள் பொங்கல் விடுமுறை : சென்னையில் இருந்து வெளியேறும் மக்கள்
பொங்கல் பண்டிகை முன்னிட்டு 5 நாள் பொங்கல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் இருந்து சொந்த ஊர்களை நோக்கி படையெடுக்கும் மக்கள் மறைமலைநகர் முதல் செங்கல்பட்டு வரை போக்குவரத்து நெரிசலால் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்களதல் அவதியடைந்துள்ளனர்.
- 20:28 (IST) 12 Jan 2022தமிழகத்தில் இன்று மேலும் 17,934 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் இன்று மேலும் 17,934 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட:டள்ளது..நேற்றைய பாதிப்பு 15,379ஆக இருந்த நிலையில் இன்று 17,934ஆக உயர்ந்துள்ளது.
- 19:33 (IST) 12 Jan 2022முதுகலை பட்டதாரி ஆசிரியருக்காக தேர்வு ஒத்திவைப்பு
ஜனவரி 29-ம் தேதி முதல் பிப்ரவரி 6-ந் தேதி முதல் நடத்த தி்ட்டமிடப்பட்டிருந்த முதுகலை பட்டதாரி ஆசிரியருக்காக தேர்வு வரும் பிப்ரவரி 12-ந் தேதி முதல் 20-ம் தேதி வரை நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
- 19:27 (IST) 12 Jan 2022துபாய்க்கு கடத்த முயன்ற வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்
துபாய்க்கு கடத்த முயன்ற ரூ55.27 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகள் சென்னை விமானநிலையத்தில் சிக்கியது. இந்த விவகாரத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- 19:25 (IST) 12 Jan 2022மருத்துவக்கல்லூரிகளில் தேர்வுகள் ஒத்திவைப்பு
புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் மருத்துவக்கல்லூரிகளில் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முதல் மற்றும் இரண்டாமாண்டு மாணவர்களுக்கு தேர்வுகள் ஜன.17ல் இருந்து பிப்ரவரி 7ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- 19:23 (IST) 12 Jan 2022ஜல்லிக்கட்டுக்கான முன்பதிவு நிறைவு நிறைவு
அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கான முன்பதிவு நிறைவு நிறைவு பெற்றுள்ள நிலையில், போட்டிகளில் பங்கேற்க 6,533 பேர் விண்ணப்பம் செய்துள்ளதாகவும், 4,534 மாடு உரிமையாளர்களும், 1999 மாடுபிடி வீரர்களும் விண்ணப்பம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- 19:22 (IST) 12 Jan 2022டிசம்பரில் சில்லரை பணவீக்கம் 5.59 சதவீதமாக அதிகரிப்பு
இந்தியாவில் டிசம்பரில் சில்லரை பணவீக்கம் 5.59 சதவீதமாக அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நவம்பரில் சில்லரை பணவீக்கம் 4.91 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது பணவீககம் அதிகரித்துள்ளது.
- 19:22 (IST) 12 Jan 2022டிசம்பரில் சில்லரை பணவீக்கம் 5.59 சதவீதமாக அதிகரிப்பு
இந்தியாவில் டிசம்பரில் சில்லரை பணவீக்கம் 5.59 சதவீதமாக அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நவம்பரில் சில்லரை பணவீக்கம் 4.91 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது பணவீககம் அதிகரித்துள்ளது.
- 18:41 (IST) 12 Jan 2022இஸ்ரோ-க்கு புதிய தலைவர் நியமனம்
இந்திய வின்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவுகு புதிய தலைவராக சோம்நாத் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அடுத்த 3 ஆண்டுகளுக்கு இவர் பதவி வகிப்பார் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
- 18:14 (IST) 12 Jan 2022அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி; ஆன்லைன் பதிவு நிறைவு
அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஆன்லைன் முன்பதிவு நிறைவு பெற்றது; 5,500 வீரர்கள் பதிவு செய்துள்ளனர்!
- 18:08 (IST) 12 Jan 2022பொய் வழக்கில் துன்புறுத்திய இன்ஸ்பெக்டர் உள்பட 8 போலீசாருக்கு ரூ.4.50 லட்சம் அபராதம்
பொய் வழக்கில் சாந்தகுமார் என்பவரை துன்புறுத்திய பெரம்பலூர் காவல் ஆய்வாளர் உள்பட 8 போலீசாருக்கு மாநில மனித உரிமை ஆணையம் ரூ.4.50 லட்சம் அபராதம் விதித்துள்ளது. மேலும், அபராத தொகையை பாதிக்கப்பட்டவருக்கு வழங்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
- 17:32 (IST) 12 Jan 2022திறமை வாய்ந்த தமிழர்களை நான் எப்போதுமே வரவேற்கிறேன் - பிரதமர் மோடி
தமிழகத்தில் 11 மருத்துவ கல்லூரிகளை திறந்து வைத்து பேசிய பிரதமர் மோடி: ஒரு மாநிலத்தில் ஒரே நேரத்தில் 11 மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்படுவது இதுவே முதல்முறை. மருத்துவமனைகள் எவ்வளவு முக்கியம் என்பதை கொரோனா உணர்த்தியுள்ளது. இந்தியாவில் தரமான மருத்துவ வசதிகள் உருவாக்கப்பட வேண்டும். மருத்துவ திட்டம் அடுத்த 5 வருடத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். செம்மொழி தமிழாய்வு நிறுவனம் திருக்குறளை பல மொழிகளில் மொழி பெயர்த்துள்ளது. திறமை வாய்ந்த தமிழர்களை நான் எப்போதுமே வரவேற்கிறேன் என்று கூறினார்.
- 17:26 (IST) 12 Jan 2022பனாரஸ் பல்கலை.யில் பாரதியாருக்கு இருக்கை - பிரதமர் மோடி
11 மருத்துவ கல்லூரிகளை திறந்து வைத்த
பின் பிரதமர் மோடி உரை: பனாரஸ் பல்கலை.யில் சுப்பிரமணிய பாரதிக்காக ஒரு இருக்கை உருவாக்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலத்தவரும் தமிழை கற்றுக்கொள்ள இணையம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
- 17:03 (IST) 12 Jan 2022ஒரு மாநிலத்தில் ஒரே நேரத்தில் 11 மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்படுவது இதுவே முதல்முறை - பிரதமர் மோடி
ஒரு மாநிலத்தில் ஒரே நேரத்தில் 11 மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்படுவது இதுவே முதல்முறை என்றும், மருத்துவமனைகள் எவ்வள்வு முக்கியம் என்பதை கொரோனா உணர்த்தியுள்ளது என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்
- 17:02 (IST) 12 Jan 2022நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க பிரதமரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க வேண்டும் என பிரதமரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்
- 16:53 (IST) 12 Jan 2022நாட்டில் மருத்துவ இடங்கள் 80 சதவீதம் அதிகரித்துள்ளன - பிரதமர் மோடி
நாடு முழுவதும் தற்போது 590 மருத்துவ கல்லூரிகள் உள்ளன. 22 எய்ம்ஸ் மருத்துவ கல்லூரிகள் நிறுவப்பட்டுள்ளன. இதன்மூலம் நாட்டில் மருத்துவ இடங்கள் 80 சதவீதம் அதிகரித்துள்ளன என பிரதமர் மோடி கூறியுள்ளார்
- 16:49 (IST) 12 Jan 2022’தமிழக சகோதர, சகோதரிகளுக்கு எனது வணக்கம்’ தமிழில் உரையை தொடங்கிய பிரதமர்
தமிழக சகோதர, சகோதரிகளுக்கு எனது வணக்கம் என மருத்துவக்கல்லூரிகள் திறப்பு விழாவில் பிரதமர் மோடி தமிழில் உரையை தொடங்கியுள்ளார்
- 16:48 (IST) 12 Jan 2022செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் புதிய கட்டடத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் புதிய கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். சென்னை பெரும்பாக்கத்தில் 70 ஆயிரம் சதுர அடியில் 24 கோடி செலவில் செம்மொழி தமிழாய்வு நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது.
- 16:36 (IST) 12 Jan 2022தமிழகத்தில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
தமிழகத்தில் திருவள்ளூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருப்பூர், நீலகிரி, நாகை, நாமக்கல், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
- 16:30 (IST) 12 Jan 2022மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக்கல்லூரி என்பதே திமுகவின் குறிக்கோள் -மு.க.ஸ்டாலின்
மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக்கல்லூரி என்பதே திமுகவின் குறிக்கோள் என்றும், கிராமப்புற ஏழை எளிய மாணவர்களுக்கு மருத்துவ கல்வி கிடைக்க வேண்டும் என்பதே எங்களது கொள்கை என்றும் மருத்துவ கல்லூரிகள் திறப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி வருகிறார்
- 16:16 (IST) 12 Jan 2022சாய்னா நேவால் விவகாரம் தொடர்பாக விசாரணை
சாய்னா நேவால் விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்
- 16:03 (IST) 12 Jan 2022தமிழகத்தில் புதிதாக இயற்கை வளத்துறை உருவாக்கம்
தமிழகத்தில் புதிதாக இயற்கை வளத்துறை உருவாக்கப்பட்டுள்ளது. புவியியல் மற்றும் சுரங்கத்துறை, கனிமவள நிறுவனம் இயற்கை வளத்துறையின் கீழ் வரும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது
- 15:30 (IST) 12 Jan 2022தமிழக அமைச்சரவை இலாக்காக்கள் மாற்றம்
சர்க்கரை ஆலைகள் தொழில் துறை அமைச்சரிடம் இருந்து வேளாண் துறை அமைச்சருக்கும், விமான போக்குவரத்து தொழில் துறை அமைச்சருக்கும், சிறுபான்மை நலத்துறையிடன் இருந்த அயலக பணியாளர் கழகம் தொழிலாளர் நலத்துறைக்கும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
- 15:29 (IST) 12 Jan 2022ஆரணி அரசு பள்ளியில் 18 மாணவிகள், 2 ஆசிரியர்களுக்கு கொரோனா
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அரசு பள்ளியில் 18 மாணவிகள் மற்றும் 2 ஆசிரியர்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது
- 15:13 (IST) 12 Jan 2022காவல்துறையில் உள்ள காலியிடங்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் - தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
தமிழக காவல்துறையில், 2021ஆம் ஆண்டுக்கான காலியிடங்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2019ஆம் ஆண்டு வரையிலான காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு விட்டன என்றும், 2020ல் 11,181 காலிப்பணியிடங்களுக்கு தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது என்றும் தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது
- 14:27 (IST) 12 Jan 2022‘பெண்களுக்கு மாதம் ரூ1,000' - கெஜ்ரிவால் அறிவிப்பு!
பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என ஆம் ஆத்மி கட்சி தலைவரும் டெல்லி முதல்வவருமான அரவிந்த் கெஜ்ரிவால் வாக்குறுதி அளித்துள்ளார்.
- 14:23 (IST) 12 Jan 2022கோயில் பணியாளர்களுக்கு ரூ.2000 பொங்கல் போனஸ் - தமிழக அரசு
அரசு ஊழியர்களுக்கு வழங்கியது போலவே கோயில் பணியாளர்களுக்கும் 2 ஆயிரம் ரூபாய் போனஸ் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
- 14:22 (IST) 12 Jan 2022மெரினாவில் கலைஞர் நினைவிடம் அமைக்க அனுமதி
சென்னை மெரினாவில் கலைஞர் நினைவிடம் அமைக்க சில நிபந்தனைகளுடன் கடற்கரை ஒழுங்காற்று ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
- 14:21 (IST) 12 Jan 2022மெரினாவில் கலைஞர் நினைவிடம் அமைக்க அனுமதி
சென்னை மெரினாவில் ரூ.35 கோடி மதிப்பில் கலைஞர் நினைவிடம் அமைக்க சில நிபந்தனைகளுடன் கடற்கரை ஒழுங்காற்று ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
- 14:21 (IST) 12 Jan 2022மெரினாவில் கலைஞர் நினைவிடம் அமைக்க அனுமதி
சென்னை மெரினாவில் கலைஞர் நினைவிடம் அமைக்க சில நிபந்தனைகளுடன் கடற்கரை ஒழுங்காற்று ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
- 13:43 (IST) 12 Jan 2022போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பொங்கல் ஊக்கத்தொகை
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 1.19 லட்ச போக்குவரத்து ஊழியர்களுக்கு ரூ.7.1 கோடி சாதனை ஊக்கத்தொகைய போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.
- 13:43 (IST) 12 Jan 2022போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பொங்கல் ஊக்கத்தொகை
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 1.19 லட்ச போக்குவரத்து ஊழியர்களுக்கு ரூ.7.1 கோடி சாதனை ஊக்கத்தொகைய போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.
- 13:13 (IST) 12 Jan 2022ராஜேந்திர பாலாஜிக்கு 4 வார கால நிபந்தனை ஜாமின்
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு 4 வாரம் இடைக்கால ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் எனவும் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 12:50 (IST) 12 Jan 2022லேசான மழைக்கு வாய்ப்பு
கடலோர மாவட்டங்கள், உள்மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
- 12:36 (IST) 12 Jan 2022சித்தார்த்தின் சர்ச்சை ட்வீட் - சென்னை காவல்துறை விசாரணை
பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் மீது நடிகர் சித்தார்த் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த விவகாரம் தொடர்பாக சென்னை காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. விசாரணை கோரி தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பிய நிலையில் தமிழக டி.ஜி.பி. நடவடிக்கை
- 12:22 (IST) 12 Jan 2022அயலகத் தமிழர் திருநாள்
நாம் நாடு மற்றும் எல்லைகளால் பிரிந்திருந்தாலும் தமிழால் இணைந்துள்ளோம். எனவே தமிழையும் தமிழ்நாட்டையும் விட்டுவிடாதீர்கள் என்று அயலகத் தமிழர் திருநாள் நிகழ்வில் முதல்வர் காணொலி வாயிலாக பங்கேற்று பேசி வருகிறார்.
- 12:18 (IST) 12 Jan 2022சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - குற்றவாளிக்கு தூக்கு
புதுக்கோட்டை ஏம்பல் பகுதியில் சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி கொலை செய்த வழக்கில் ராஜா என்பவருக்கு புதுக்கோட்டை நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பை இன்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உறுதி செய்துள்ளது. முறையான விசாரணைக்கு பிறகே தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்று நீதிமன்றம் அறிவிப்பு
- 12:16 (IST) 12 Jan 2022ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்ட விதம் ஏற்புடையதல்ல
பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் முன் ஜாமீன் மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு வருகிறது. ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கில் அரசியல் குறித்து எங்களுக்கு கவலை இல்லை. ஆனால் ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்ட விதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
- 12:04 (IST) 12 Jan 2022இளைஞர்களால் தான் புதிய உலகை உருவாக்க இயலும் - மோடி
இந்திய இளைஞர்கள் மதிப்பீடு செய்வதில் முன்னேறியவர்களாக இருக்கின்றனர். இவர்களால் தான் புதிய உலகத்தை உருவாக்க இயலும் என்று நரேந்திர மோடி புதுச்சேரியில் இளைஞர் திருவிழாவில் பேசி வருகிறார்.
- 11:48 (IST) 12 Jan 2022டாஸ்மாக் கடை விடுமுறை வழக்கு வாபஸ்
அரசு விடுமுறை நாட்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்க கோரிய வழக்கு வாபஸ் பெறப்பட்டது. அபராதம் விதிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்ததையடுத்து வழக்கு வாபஸ் பெறப்பட்டது. பொங்கல் விடுமுறை தினங்களில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- 11:44 (IST) 12 Jan 2022நடிகர் சித்தார்த் மன்னிப்பு கோரியது மகிழ்ச்சி அளிக்கிறது
உங்கள் விமர்சனத்தை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஒரு பெண்ணை இவ்வாறு குறிவைத்து தாக்கக் கூடாது என்று சர்ச்சையான ட்வீட்டிற்கு மன்னிப்பு கேட்ட சித்தார்த்துக்கு சாய்னா பதில்
- 11:21 (IST) 12 Jan 2022மருத்துவ ஆக்சிஜனை மாநிலங்கள் இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும்
தேவையான மருத்துவ ஆக்சிஜனை மாநிலங்கள் இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் கருவிகள், வெண்டிலேட்டர்கள் மற்றும் உயிர்காக்கும் கருவிகள் செயல்படும் நிலையில் இருப்பதையும் உறுதி செய்ய வலியுறுத்தல். கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகின்ற நிலையில் மத்திய அரசு அறிவிப்பு
- 11:03 (IST) 12 Jan 2022பிரதமர் மோடி பாதுகாப்பு குறைபாடு: விசாரிக்க குழு அமைப்பு!
பஞ்சாபில் பிரதமர் மோடி பாதுகாப்பு குறைபாடு தொடர்பான வழக்கை விசாரிக்க ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி இந்து மல்ஹோத்ரா தலைமையில் குழு அமைப்பு
- 11:00 (IST) 12 Jan 2022பொங்கல் பண்டிகை: ஊராட்சி மன்ற அலுவலக கட்டடங்களுக்கு வர்ணம் பூச உத்தரவு!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அனைத்து மாவட்டங்களிலும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டடங்களுக்கு வர்ணம் பூசுதல், நீர் தேக்கத் தொட்டிகளை சுத்தம் செய்தல் போன்ற தூய்மை பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் ஊரக வளர்ச்சித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
- 10:59 (IST) 12 Jan 202248 மணி நேரத்திற்கு தேவையான ஆக்சிஜனை கையிருப்பில் வைத்திருக்க வலியுறுத்தல்!
மாநிலங்களில் குறைந்தபட்சம் 48 மணி நேரத்திற்கு தேவையான மருத்துவ ஆக்சிஜனை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும். மாநிலங்களில் உள்ள ஆக்சிஜன் கட்டுப்பாட்டு அறைகளை மீண்டும் புதுப்பிக்க வேண்டும். திரவநிலை மருத்துவ ஆக்சிஜன்களை தடையின்றி எடுத்து செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை கடிதம் அனுப்பியுள்ளது.
- 10:59 (IST) 12 Jan 2022ஸ்டிக்கர் ஒட்டும் கலாச்சாரத்தை துவக்கியது அதிமுக தான்: தங்கம் தென்னரசு!
தமிழகத்தில் ஸ்டிக்கர் ஒட்டும் கலாச்சாரத்தை துவக்கியது அதிமுக ஆட்சிதான். ஒகேனக்கல் கூட்டு குடிநீர்த் திட்டம், கோயேம்பேடு பேருந்து நிலையம் உள்பட பல திட்டங்கள் திமுக கொண்டு வந்தது. அதிமுகவின் திட்டங்களில் நாங்கள் ஸ்டிக்கர் ஒட்டி கொள்ள வேண்டியதில்லை. திமுக கொண்டு வந்த திட்டங்களுக்கு தான் அதிமுக ஸ்டிக்கர் ஓட்டியது என அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம்சாட்டியுள்ளார்.
- 10:58 (IST) 12 Jan 2022தமிழகத்தில் மருத்துவக்கல்லூரிகள் அமைய திமுக தான் காரணம்: மா.சுப்பிரமணியன்!
கடந்த திமுக ஆட்சியில் தான் மாவட்டத்திற்கு ஒரு மருத்துவ கல்லூரி தொடங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. எனவே தங்களால் தான் மருத்துவ கல்லூரிகள் அமைய உள்ளதாக அதிமுக மார்தட்டி கொள்வதில் எந்த நியாயமும் இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
- 10:58 (IST) 12 Jan 2022கரும்புக்கான ஆதார விலையை உயர்த்தி வழங்குக: ஓபிஎஸ் கோரிக்கை!
கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ. 2,900 அறிவித்திருப்பது கரும்பு விவசாயிகளை வஞ்சிக்கும் செயல். கரும்புக்கான ஆதார விலையை டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
- 09:54 (IST) 12 Jan 2022இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு 4,868 ஆக உயர்வு!
இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை நேற்று 4,461 ஆக இருந்த நிலையில், இன்று 4,868 ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஒமிக்ரானில் இருந்து 1,805 பேர் குணமடைந்தனர் என மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
- 09:53 (IST) 12 Jan 2022இந்தியாவில் ஒரே நாளில் 1,94,720 பேருக்கு கொரோனா தொற்று!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 1,94,720 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 442 பேர் தொற்றுக்கு உயிரிழந்த நிலையில், 60,405 பேர் கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்துள்ளனர்.
- 09:53 (IST) 12 Jan 2022தமிழகத்தில் 4 லட்சம் பேர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த தகுதியானவர்கள்!
தமிழகத்தில் 4 லட்சம் பேர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த தகுதியானவர்கள். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த வாரம் மெகா தடுப்பூசி முகாம் இல்லை. இருப்பினும் தடுப்பூசிக் கொள்வோருக்கு எந்த தடையும் இல்லை. மேலும் கொரோனா கட்டுப்பாடுகளை மக்கள் முழுமையாக கடைபிடிக்க வேண்டும். மாத கணக்கில் ஊரடங்கு வரக் கூடாது என்பது தான் முதல்வரின் கருத்து என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
- 09:53 (IST) 12 Jan 2022பூஸ்டர் செலுத்திக் கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொண்டார்.
- 09:00 (IST) 12 Jan 2022தமிழகத்தில் 10,12 ஆம் வகுப்பு மாணவர்கள் 70% பேருக்கு தடுப்பூசி செலுத்தல்!
தமிழகத்தில் 10 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் 70% பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார் அறிவித்துள்ளார்.
- 08:59 (IST) 12 Jan 2022பஞ்சாப் தேர்தல்.. விரைவில் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு!
பஞ்சாப் மாநில சட்டமன்ற தேர்தலில், ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளர் அடுத்த வாரத்தில் அறிவிக்கப்படுவார் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
- 08:59 (IST) 12 Jan 2022சிதம்பரம் அண்ணாமலை பல்கலை., விடுதி மாணவிகளுக்கு கொரோனா!
சிதம்பரம் அண்ணாமலை பல்கலை,. விடுதி மாணவிகள் 40க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், விடுதி மூடப்பட்டது.
- 08:58 (IST) 12 Jan 2022வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய அவகாசம் நீட்டிப்பு!
பெருநிறுவனங்கள் கடந்த 2020-21 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான அவகாசம் மார்ச் 15 ஆம் தேதி வரை நீட்டித்து, மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது.
- 08:58 (IST) 12 Jan 2022பொங்கல் பரிசு தொகுப்பு: விஷம தகவல் பரப்பினால் நடவடிக்கை!
பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்து விஷமத் தகவல் பரப்புவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
- 08:49 (IST) 12 Jan 2022பொங்கல் பண்டிகை: உளுந்தூர்பேட்டை ஆட்டுச் சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று நடந்த உளுந்தூர்பேட்டை ஆட்டுச்சந்தையில், 3 மணி நேரத்திலேயே, சுமார் ரூ. 2 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- 08:48 (IST) 12 Jan 2022கொரோனா பரவல்: அருணாச்சல பிரதேசத்தில் இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு!
கொரோனா பரவல் காரணமாக, இரவு நேர ஊரடங்கு அமல் மற்றும் அனைத்து பள்ளிகளுக்கும் ஜனவரி 31 வரை விடுமுறை அளித்து அருனாச்சாலப் பிரதேச அரசு அறிவித்துள்ளது.
- 08:48 (IST) 12 Jan 2022சென்னை பல்கலை,. தொலைநிலை கல்வி தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு!
சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைநிலை கல்வி தேர்வு முடிவுகள் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது. தேர்வு முடிவுகளை http://ideunom.ac.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என பல்கலை,. நிர்வாகம் அறிவித்துள்ளது.
- 08:47 (IST) 12 Jan 2022லடாக் எல்லை விவகாரம்: இந்திய, சீன ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை!
லடாக் எல்லை விவகாரம் தொடர்பாக இந்திய, சீன ராணுவ அதிகாரிகள் இன்று பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். ஏற்கெனவே கடந்த அக்டோபர் 10-ம் தேதி நடைபெற்ற 13-வது சுற்று பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
- 08:47 (IST) 12 Jan 2022முதுநிலை எம்பிபிஎஸ் படிப்புக்கான கலந்தாய்வு இன்று தொடக்கம்!
உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, நீட் முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.
- 08:46 (IST) 12 Jan 2022சாய்னா நேவால் குறித்து சர்ச்சை ட்வீட்: மன்னிப்பு கேட்ட சித்தார்த்!
சாய்னா நேவால் குறித்து நடிகர் சித்தார்த்தின் ட்வீட் சர்ச்சையான நிலையில், இதற்கு அவர் வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், எனது ட்வீட் வார்த்தை நகைச்சுவையானது மட்டுமே, உள்நோக்கம் கொண்டது அல்ல. நான் எப்போதும் பெண்ணியவாதிகள் பக்கம் இருப்பவன். ஒரு பெண்ணாக உங்களைத் தாக்கும் நோக்கம் நிச்சயமாக எனக்கு இல்லை என்றும் நான் உறுதியளிக்கிறேன் என கூறியுள்ளார்.
- 08:46 (IST) 12 Jan 2022மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கொரோனா!
மத்திய தரைவழிப் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனா பாதுகாப்பு விதிகளின்படி, தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக ட்வீட்டரில் தெரிவித்துள்ளார்.
- 08:45 (IST) 12 Jan 2022மதுரை முன்னாள் எம்.பி. கொரோனாவால் மரணம்!
மதுரை முன்னாள் எம்.பி ஏ.ஜி.எஸ். ராம்பாபு கொரோனாவால் காலமானார்.
- 08:45 (IST) 12 Jan 2022பழனி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா தொடக்கம்!
திண்டுக்கல் பழனி முருகன் கோயிலில், தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. இன்றும், நாளையும் மட்டுமே சாமி தரிசனம் செய்ய முடியும் என்பதால் ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வருகை தந்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.