Tamil News: தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை கோலாகலம்!

Tamil Nadu News, Tamil News LIVE Updates, Tamil Nadu Omicron Latest News 13 January 2022-தமிழகத்தில் இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

தமிழகம் முழுவதும் தை முதல் நாளான இன்று பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கிராமபுறங்களில் மக்கள் அதிகாலையில் எழுந்து நீராடி, புத்தாடை அணிந்து, வீடு முற்றங்களில் பொங்கல் வைத்து சூரிய பகவானை வழிபட்டனர். நகர்புறங்களில் வசிக்கும் மக்கள் சமையலறையில் பொங்கல் வைத்து, கடவுளை வழிபட்டனர்.

வழிபாட்டு தலங்களுக்கு செல்ல அனுமதி இல்லாததால், மக்கள் தங்கள் குடும்பங்களுடன் வீடுகளிலேயே எளியாமையாக பொங்கல் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.  

Tamil Nadu News Today LIVE: Petrol and Diesel Price: சென்னையில் தொடர்ந்து 70-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.101. 40 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 91.43 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Tamilnadu News Update: ஜனவரி 29 முதல் பிப்ரவரி 6 வரை நடத்த திட்டமிட்டிருந்த முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு, வரும் பிப்ரவரி 12 முதல், 20-ஆம் தேதி வரை நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

Tamil Nadu News LIVE Updates:

Corona Update: கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், அமெரிக்காவில் 7.46 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலக நாடுகளில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம்;

  • பிரான்ஸ் – 3.61 லட்சம்
  • இத்தாலி – 1.96 லட்சம்
  • ஸ்பெயின் – 1.79 லட்சம்
  • அர்ஜெண்டினா – 1.31 லட்சம்
  • இங்கிலாந்து – 1.29 லட்சம்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Live Updates
10:10 (IST) 13 Jan 2022
தென்னாப்பிரிக்காவின் வெற்றிக்கு மேலும் 111 ரன்கள் தேவை

கேப்டவுனில் நடைபெற்று வரும் இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 2வது இன்னிங்சில் 2 விக்கெட் இழப்புக்கு 101 ரன்கள் சேர்த்ததுடன் 3-வது நாள் ஆட்டம் முடித்துக்கொள்ளப்பட்டது. இன்னும் 2 நாள் ஆட்டம் எஞ்சியுள்ள நிலையில் தென்னாப்பிரிக்காவின் வெற்றிக்கு மேலும் 111 ரன்கள் தேவை

10:08 (IST) 13 Jan 2022
ஜன.19ஆம் தேதி நீட் இளநிலை மருத்துவ கலந்தாய்வு

நீட் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜன.19ஆம் தேதி தொடங்கும் என்று மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

8:28 (IST) 13 Jan 2022
மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், பல்லாண்டுகளாகத் தீர்க்கப்படாத பிரச்னைகளுடன் தமிழக நகரங்கள் அல்லாடுகின்றன. இவைகளைத் தீர்க்கும் தகுதியும் திறனும் கொண்ட மக்கள் நீதி மய்யத்தின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிடுகிறேன். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி வாகை சூட என் வாழ்த்துக்கள் என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

8:14 (IST) 13 Jan 2022
பொங்கல் விடுமுறை முடிந்து, மக்கள் திரும்பி வர பேருந்துகள் இயக்கப்படும்

கோயம்பேட்டில் அமைச்சர் நேரில் ஆய்வு செய்த போக்குவரத்து துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் பொங்கல் விடுமுறை முடிந்து, மக்கள் திரும்பி வர பேருந்துகள் இயக்கப்படும் கூட்டம் அதிகமாக இருப்பதால் அனைத்து வகை பேருந்துகளும் இயக்கப்படுகிறது என்று கூறியுள்ளார்.

8:12 (IST) 13 Jan 2022
தென்னாப்பிரிக்காவுக்கு 212 ரன்கள் வெற்றி இலக்கு

கேப்டவுனில் நடைபெற்று வரும் இந்திய தென்ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 2-வது இன்னிங்சில், 198 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. முதல் இன்னிங்சில் 13 ரன்கள் முன்னிலை பெற்றதால, தென்னாப்பிரிக்காவுக்கு 212 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணையிக்கப்பட்டுள்ளது.

7:19 (IST) 13 Jan 2022
தமிழகத்தில் இன்று மேலும் 20,911 பேருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் இன்று மேலும் 20,911 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்புக்கு இன்று 25 பேர் பலியாகியுள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 36,930 ஆக அதிகரித்துள்ளது. இதில் சென்னையில் ஒரே நாளில் 8,218 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 8 பேர் பலியாகியுள்ளனர்.

7:15 (IST) 13 Jan 2022
தமிழகத்தில் இன்று மேலும் 56 பேருக்கு ஒமைக்ரான் தொற்று

இந்தயாவில் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழகத்தில் இன்று மேலும் 56 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் மொத்த ஒமைக்ரான் பாதிப்பு 241-ஆக உயர்ந்துள்ளது.

6:30 (IST) 13 Jan 2022
கொரோனா கட்டுப்படுத்துவதில் ஒன்றிய அரசு நடவடிக்கைகளில் தமிழக அரசு உறுதுணை – முதல்வர்

கொரோனாவை கட்டுப்படுத்துவதில் ஒன்றிய அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தமிழ்நாடு அரசு உறுதுணையாக இருக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

6:18 (IST) 13 Jan 2022
கொரோனாவை தடுக்கும் ஒரே வழி தடுப்பூசிதான் – பிரதமர் மோடி

பிரதமர் மோடி உரை: தற்போது நாம் மேலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்; ஒமிக்ரான் வைரஸ் அதிகளவில் மக்களை பாதித்து வருகிறது. கொரோனாவை தடுக்கும் ஒரே வழி தடுப்பூசிதான்; வேறு எதுவும் கொரோனாவில் இருந்து நம்மை பாதுகாக்காது என்று கூறினர்.

5:07 (IST) 13 Jan 2022
போலியோ சொட்டு மருந்து முகாம் பிப்.27ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

கொரோனா பரவல் காரணமாக, ஜன.23-ல் நடைபெறவிருந்த போலியோ சொட்டு மருந்து முகாம், பிப்.27ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு, ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது

4:50 (IST) 13 Jan 2022
மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை செய்து வருகிறார்

4:46 (IST) 13 Jan 2022
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட்; இந்திய அணி 2வது இன்னிங்சில் 130/4

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட்டின் 3வது நாள் உணவு இடைவேளை வரை இந்திய அணி 2வது இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் சேர்த்துள்ளது. இந்திய அணியில் ரிஷப் பண்ட் – 51, கோலி – 28 ரன்களுடன் களத்தில் உள்ளனர்

4:24 (IST) 13 Jan 2022
இந்திய மாநில வன அறிக்கை வெளியீடு

மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ், 2021 ஆம் ஆண்டின் இந்திய மாநில வன அறிக்கையை வெளியிட்டார். அதில், நாட்டின் மொத்த சதுப்பு நிலப்பரப்பு 4,992 ச.கி.மீ. ஆக உள்ளது. நாட்டின் காடுகளில் 7,204 மில்லியன் டன் கார்பன் இருப்பு உள்ளது. கடந்த இரு ஆண்டுகளில் நாட்டின் மொத்த காடு மற்றும் மரங்களின் பரப்பளவு 2,261 ச.கி.மீ. அதிகரித்துள்ளது என மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது

4:09 (IST) 13 Jan 2022
புதுச்சேரியில் மின் கட்டணம் உயர்வு

புதுச்சேரியில் வீட்டு உபயோகத்திற்கான மின்கட்டணத்தை உயர்த்தி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, 0 – 100 யூனிட் வரையிலான கட்டணம் ரூ.1.56-ல் இருந்து ரூ1.90 ஆகவும், 101 – 200 யூனிட் வரையிலான கட்டணம் ரூ.2.60-ல் இருந்து ரூ2.75 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது

3:33 (IST) 13 Jan 2022
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு; நகராட்சி அதிகாரிகள் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு

சென்னை, மடிப்பாக்கம் பகுதியில் பாதாள சாக்கடை பணிகளை நிறைவேற்றாதது குறித்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழ்நாடு நகராட்சி நிர்வாக செயலாளர், சென்னை குடிநீர் வழங்கல் நிர்வாக இயக்குனர் உள்ளிட்டோர் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

3:21 (IST) 13 Jan 2022
கேரளாவில் நாளை பொங்கல் விடுமுறை அறிவிப்பு

கேரளாவில் நாளை பொங்கல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஜனவரி 15 ஆம் தேதி பொங்கல் விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கேரளாவில் தமிழ் பேசும் மக்கள் வாழும் 6 மாவட்டங்களில் பொங்கல் விடுமுறையை நாளை என மாற்றி அறிவிக்குமாறு தமிழக முதல்வர் கடிதம் எழுதிய நிலையில், பொங்கல் விடுமுறை மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது

3:07 (IST) 13 Jan 2022
தச்சன்குறிச்சியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு

புதுக்கோட்டை மாவட்டம் தச்சன்குறிச்சியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்துள்ளது. தச்சன்குறிச்சி ஜல்லிக்கட்டில் 550 காளைகள் பங்கேற்ற நிலையில், 25 பேர் மாடுபிடி வீரர்கள் காயம் அடைந்தனர்

2:53 (IST) 13 Jan 2022
3 காவல்துறை ஆய்வாளர்கள் தெற்கு மண்டலத்திற்கு பணியிட மாற்றம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 3 காவல்துறை ஆய்வாளர்கள் தெற்கு மண்டலத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றனர். பல்வேறு தொடர் குற்றச்சாட்டுகளால் டிஜிபி சைலேந்திரபாபு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

2:52 (IST) 13 Jan 2022
அமைச்சர் தரம் சிங் சைனி ராஜினாமா

உத்திர பிரதேசத்தில் ஆயுஷ்துறை அமைச்சர் தரம் சிங் சைனி ராஜினாமா செய்தது மட்டுமில்லாமல் பாஜகவில் இருந்து விலகுவதாகவும் அறிவித்திருக்கிறார். ஏற்கனவே 2 அமைச்சர்கள், 6 சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜக-வில் இருந்து விலகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

2:46 (IST) 13 Jan 2022
மோடிக்கு ஓபிஎஸ் வாழ்த்து

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் மோடிக்கு, பொங்கல் திருநாளில் வெற்றிகள் உங்கள் வசமாக வாழ்த்துகள் என்றுகூறி அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

2:36 (IST) 13 Jan 2022
ரூ.105 கோடி அபராதம் வசூல்

தமிழகத்தில் கொரோனா விதிமீறல்களால் ரூ.105 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டிருக்கிறது.

2:15 (IST) 13 Jan 2022
மேகதாது பாத யாத்திரையை நிறுத்துவதாக கர்நாடக காங்கிரஸ் அறிவிப்பு

கொரோனா பரவலை கருத்தில் கொண்டு தற்காலிகமாக மேகதாது பாத யாத்திரையை நிறுத்துவதாகவும் கொரோனா 3-வது அலை குறைந்த பின்பு, பாதயாத்திரை தொடரும் என்றும் கர்நாடக காங்கிரஸ் அறிவித்துள்ளது.

2:12 (IST) 13 Jan 2022
சென்னையில் இருந்து 3 லட்சம் பேர் பயணம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து இதுவரை அரசு பேருந்துகள் மூலம் 3 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

1:56 (IST) 13 Jan 2022
அமித் ஷாவுக்கு ஓபிஎஸ் வாழ்த்து

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் மனமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.

1:45 (IST) 13 Jan 2022
மகிழ்ச்சியே எங்கும் நிறைய மனமார்ந்த வாழ்த்துகள் – கமல்

புதுமை விருப்பத்தை முன்னிறுத்தும் பொங்கல் நாளில் மகிழ்ச்சியே எங்கும் நிறைய என் மனமார்ந்த வாழ்த்துகள் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

12:47 (IST) 13 Jan 2022
முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் ரூ. 500 ஆக அதிகரிப்பு

பொது இடங்களில் முகக்கவசம் அணியாத நபர்களுக்கு ரூ. 200 அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த அபராதம் ரூ. 500 ஆக உயர்த்தி அரசு அறிவித்துள்ளது.

12:42 (IST) 13 Jan 2022
அம்பேத்கர், பெரியார் விருதுகள் அறிவிப்பு

தமிழ்நாடு அரசின் அம்பேத்கர் மற்றும் பெரியார் விருதுகள் அறிவிப்பு. ஓய்வுபெற்ற நீதிபதி சந்துருவுக்கு டாக்டர் அம்பேத்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்தாளார் க. திருநாவுக்கரசுக்கு பெரியார் விருது வழங்கப்பட்டுள்ளது. திருவள்ளுவர் தினத்தில் 2 பேருக்கும் விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்க உள்ளார்.

12:39 (IST) 13 Jan 2022
பொங்கலுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்க கேரள அரசிடம் கோரிக்கை

கேரளாவில் தமிழ் பேசும் மக்கள் அதிகமாக வாழும் 6 மாவட்டங்களில் ஜனவரி 14ம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை அளிக்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

12:16 (IST) 13 Jan 2022
ரோந்து பணிக்கு கூடுதல் உபகரணங்களுடன் ரூ.9.76 கோடி மதிப்பில் வாகனங்கள்

காவல்துறையின் ரோந்து பணிக்கு கூடுதல் உபகரணங்களுடன் ரூ.9.76 கோடி மதிப்பீட்டிலான 106 மகிந்திரா பொலிரோ நியோ வாகனங்களை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ள நிலையில் முதற்கட்டமாக ஆவடி, தாம்பரம் காவல் ஆணையரகங்களின் பயன்பாட்டிற்காக 20 வாகனங்களை கொடியசைத்து துவங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

12:13 (IST) 13 Jan 2022
ஊனோடு, உயிரோடு, உணர்வோடு கலந்த தமிழர் திருநாள் – முதல்வர் வாழ்த்து செய்தி

நாளை தமிழ் மக்கள் உலகெங்கிலும் பொங்கல் திருநாளை கொண்டாட உள்ள நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து செய்தியை வெளியிட்டுள்ளார். வேளாண்மையை தொழிலாக இல்லாமல், பண்பாடாகக் கடைபிடிக்கும் இனம் தமிழினம் என்றும் தன்னுடைய வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார் முதல்வர்.

11:58 (IST) 13 Jan 2022
இந்த வாரம் தடுப்பூசி முகாம்கள் இல்லை

பொங்கல் விடுமுறை காரணமாக தடுப்பூசி முகாம் இந்த வாரம் நடைபெறாது என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். சிறப்பு முகாம்கள் மூலம் இதுவரை 3.32 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் 61 இடங்களில் 24 மணி நேரமும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

11:43 (IST) 13 Jan 2022
பூசாரிகளின் ஓய்வூதிய உயர்வு திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

கோவில்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற பூசாரிகளுக்கான ஓய்வூதிய உயர்வு திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைத்தார். அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லாத கோவில்களில் 20 ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வுபெற்ற பூசாரிகளின் ஓய்வூதியம் ரூ. 3,000-ல் இருந்து ரூ. 4,000 ஆக உயர்த்தி அறிவிப்பு. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற அர்ச்சகர்களின் ஓய்வூதியம்ரூ. 1,000-ல் இருந்து ரூ, 3,000 ஆக உயர்த்தி அறிவிப்பு.

11:40 (IST) 13 Jan 2022
தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் துவக்கம்

சமூக நலத்துறை சார்பில் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு தங்க காசு மற்றும் காசோலைகளை முதல்வர் முக ஸ்டாலின் வழங்கினார். சென்னை மாவட்டத்தில் முதற்கட்டமாக 10 பயனாளிகளுக்கு நிதி உதவி வழங்கப்பட்டது.

11:38 (IST) 13 Jan 2022
சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை மகரஜோதி தரிசனம்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை மகரஜோதி தரிசனம் நடைபெற உள்ள நிலையில், கொரோனா தொற்று காரணமாக தரிசனம் செய்ய வந்திருக்கும் பக்தர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

11:20 (IST) 13 Jan 2022
மக்கள் தாமாக முன்வந்து தடுப்பூசி செலுத்த வேண்டும் – ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் 93 லட்சம் பேர் இரண்டாவது தடுப்பூசி டோஸை செலுத்த தகுதி பெற்றவர்கள். மக்கள் தாமாக முன்வந்து 2வது தவணை தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

10:58 (IST) 13 Jan 2022
பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொண்டார் தமிழக ஆளுநர்!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, சென்னையிலுள்ள ஓமந்தூரர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் இன்று கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

10:19 (IST) 13 Jan 2022
தினசரி 1 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை: அமைச்சர் மா.சுப்பிரமணியம்!

தமிழகத்தில் தினசரி 1 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. கொரோனா தொற்று பாதித்தவர்களை 3 விதமாக பிரித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளவர்களுக்கு மட்டும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

10:16 (IST) 13 Jan 2022
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: மநீம கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் அறிவிப்பு!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார்.

10:16 (IST) 13 Jan 2022
அகஸ்தியர், மணிமுத்தாறு அருவிகளில் குளிக்கத் தடை!

திருநெல்வேலி மாவட்டம் அகஸ்தியர், மணிமுத்தாறு அருவிகளில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஜனவரி 14, 15 ஆகிய தேதிகளில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது.

10:11 (IST) 13 Jan 2022
இந்தியாவில் 2.50 லட்சத்தை நெருங்கும் ஒரு நாள் கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 2,47,417 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இது நேற்றைவிட 27% அதிகம். 380 பேர் தொற்றால் உயிரிழந்தனர். அதேநேரம் 84,825 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தற்போது 11,17,531 பேர் சிகிச்சையில் இருப்பதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

10:11 (IST) 13 Jan 2022
இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு 5,488 ஆக உயர்ந்தது!

இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை நேற்று, 4,868 ஆக இருந்த நிலையில் இன்று 5,488 ஆக அதிகரித்துள்ளது. அதே நேரம் ஒமிக்ரானில் இருந்து 2,162 பேர் குணமடைந்ததாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

9:18 (IST) 13 Jan 2022
கொரொனோ பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம்!

சென்னை, வண்டலூர் பேருந்து நிலையத்தில், வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் நடத்திய திடீர் ஆய்வில், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத 5 ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம் விதித்தனர்.

8:55 (IST) 13 Jan 2022
பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொண்டார் டிஜிபி சைலேந்திரபாபு!

தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு இன்று காலை பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொண்டார்.

8:51 (IST) 13 Jan 2022
திமுக அரசின் 8 மாத செயல்பாடு: முதல்வர் ஸ்டாலின் வீடியோ வெளியீடு!

2.15 கோடி குடும்பங்களுக்கு கொரோனா நிவாரணம், அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு போன்ற திமுக அரசின் 8 மாத ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட பல திட்டங்கள் குறித்து முதல்வர் ஸ்டாலின் வீடியோ வெளியிட்டுள்ளார்.

8:50 (IST) 13 Jan 2022
கொரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கு உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!

கொரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கு, ஒமிக்ரான் ஆபத்து அதிகம் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

8:50 (IST) 13 Jan 2022
நிபந்தனை ஜாமீன்: சிறையில் வெளியே வந்தார் ராஜேந்திர பாலாஜி!

முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பணமோசடி வழக்கில் உச்ச நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கிய நிலையில், திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர், இன்று காலை வெளியே வந்தார்.

8:49 (IST) 13 Jan 2022
கச்சத்தீவு அருகே மீன் பிடித்த தமிழக மீனவர்கள் தாக்குதல்: இலங்கை கடற்படை அட்டூழியம்!

கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, இலங்கை கடற்படையினர் விரட்டியடித்தனர். மேலும் 10க்கும் மேற்பட்ட விசைப்படகுகளின் வலைகளை அறுத்து எரிந்தனர். இந்த சம்பவம், அப்பகுதி மீனவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

8:48 (IST) 13 Jan 2022
உ.பி. பாஜக-வில் இருந்து விலகிய அமைச்சருக்கு எதிராக கைது வாரண்ட்!

உத்தரபிரதேச மாநிலத்தில், பாஜக அமைச்சரவையில் இருந்து விலகிய, சுவாமி பிரசாத் மவுரியாவுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 2014ம் ஆண்டு அவர் பேசிய கருத்துக்களுக்கு எதிரான வழக்கில் இந்த வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

8:27 (IST) 13 Jan 2022
இந்த ஆண்டின் முதல் ஜல்லிகட்டு போட்டி தச்சங்குறிச்சியில் தொடங்கியது!

தமிழகத்தில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் தொடங்கியது.

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது.போட்டியில் 600 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்கின்றனர். அமைச்சர்கள் ரகுபதி மற்றும் மெய்யநாதன் மற்றும் ஆட்சியர் கவிதா ராமு ஆகியோர் விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.

8:24 (IST) 13 Jan 2022
கர்நாடக முன்னாள் முதல்வருக்கு கொரோனா!

கர்நாடக முன்னாள் முதல்வர் வீரப்ப மொய்லிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Web Title: Tamilnadu tamil omicron update corona update news today petrol and diesel price tamilnadu weather live update

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com