Tamil Nadu News Today LIVE: Petrol and Diesel Price: சென்னையில் தொடர்ந்து 78-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.101. 40 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 91.43 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
Tamilnadu News Update: கோவை, செட்டிபாளையம் பகுதியில், இன்று நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் செந்தில் பாலாஜி கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில், 700 காளைகள், 300 மாடு பிடி வீரர்கள் பங்கேற்கின்றனர். கொரோனா சூழலை கருத்தில் கொண்டு பார்வையாளர்கள் இன்றி போட்டி நடைபெறுகிறது.
Tamil Nadu News LIVE Updates
Corona Update:
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3.47 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் தொற்றுக்கு ஒரே நாளில் 703 பேர் உயிரிழந்த நிலையில், 2.51 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை நேற்று 9,287 ஆக இருந்த நிலையில், இன்று 9,692 ஆக அதிகரித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “
இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழகத்தை சேர்ந்த 125 படகுகளின் உரிமையாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார். இதில் 108 விசைப்படகு உரிமையாளர்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
17 நாட்டுப்படகு உரிமையாளர்களுக்கு தலா ரூ.1.50 லட்சம் என மொத்தம் ரூ.5.66 கோடி வழங்கப்படும். கடந்த வடகிழக்கு பருவமழைக்காலத்தில் சேதமடைந்த 105 மீன்பிடி படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களுக்கு இழப்பீடாக ரூ.5.66 கோடி வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
மத்திய, மாநில சுகாதார செயலாளர்கள் உடன் இந்திய தேர்தல் ஆணையம் நாளை ஆலோசனை நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் நாளை பிற்பகல் 12.30 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
கோவின் இணையதளம் பாதுகாப்பானது; பதிவேற்றப்பட்ட தகவல்கள் அனைத்தும் பாதுகாப்பாக உள்ளன. கோவின் இணையதளத்தில் இருந்து தரவுகள் கசிந்துள்ளதாக வெளியான தகவல் உண்மையல்ல என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
தமிழகத்தில் மேலும் 29,870 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்புக்கு இன்று 33 பேர் பலியாகியுள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 37, 145 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மேலும் 7038 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், செங்கல்பட்டில் மேலும் 2,250 பேருக்கும், கோவையில் மேலும் 3,653 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் மேலும் 7038 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தொற்று பாதிப்புக்கு 14 பேர் பலியாகியுள்ளனர். இதில் செங்கல்பட்டில் மேலும் 2,250 பேருக்கு கொரோனா தொற்று – ஒருவர் உயிரிழப்பு கோவையில் மேலும் 3,653 பேருக்கு கொரோனா தொற்று – 2 பேர் உயிரிழப்பு
கோவா மாநிலத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் மனோகர் பாரிக்கரின் மகன், உட்பால் பாரிக்கர், பணாஜி தொகுதியில் சுயேச்சையாக களமிறங்க உள்ளதாக அறிவித்துள்ளார். தனது தந்தையின் தொகுதியான பணாஜியில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால், பாஜகவில் இருந்து விலகியுள்ளார்.
பொங்கல் தினத்தில் வெளியாக இருந்த ஆர்ஆர்ஆர் திரைப்படம் கொரோனா தொற்று பரவல் காரணமாக தியேட்டர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா பரவல் குறைந்து காணப்பட்டால், ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் மார்ச் 18 ஆம் தேதி அல்லது ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.
மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 427.44 புள்ளிகள் சரிந்து 59,037 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்ற நிலையில், தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 139.85 புள்ளிகள் சரிந்து 17,617.15 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது.
காவல்துறையால் தாக்கப்பட்டதால் நாமக்கல் மாற்றுத்திறனாளி பிரபாகரன் மரணமடைந்த விவகாரத்தில், மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்ததுள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து 6 வாரங்களில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாளை முதல் ரிஸ்க் நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகள் தனிமைப்படுத்தி கொள்வது கட்டாயமல்ல என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்புக்கு அரசியல் பிரமுகர்கள் பலரும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது திண்டிவனம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ அர்ஜூனன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நடிகை சமந்தாதனது சமூகவலைதள பக்கங்களில் இருந்து விவாகரத்து பதிவை நீக்கியுள்ளார். கடந்த அக்டோபரில் நாக சைதன்யா, சமந்தா ஜோடி விவாகரத்து அறிவிப்பை வெளியிட்ட நிலையில், தற்போது திடீரென பதிவை நீக்கியதால் ரசிகர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
கர்நாடகா மாநிலத்தில் பெங்களூரு நகரை தவிர பிற மாவட்டங்களில் பள்ளிகளை திறக்கலாம் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5 பேரை தாண்டும் பள்ளிகள் மட்டும் மூடப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
“பொங்கல் பரிசு தொகுப்பில் தரமற்ற பொருட்களை விநியோகம் செய்த நிறுவனங்கள் கருப்பு பட்டியலில் சேர்க்கப்படும். அரசின் நற்பெயருக்கு களங்கள் ஏற்படுத்த முயற்சிப்பதை எக்காரணம் கொண்டு அனுமதிக்க இயலாது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்படும்” என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
டெல்லி இந்தியா கேட் பகுதியில் எரிந்து வரும் அணையா தீபம் தேசிய போர் வீரர்கள் நினைவிடத்தில் உள்ள தீபங்களோடு இணைக்கப்படுகிறது. அமர் ஜவான் ஜோதி தேசிய போர் வீரர்கள் நினைவிடத்தில் உள்ள தீபங்களோடு இணைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வரும் 23ம் தேதி, ஞாயிறு அன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்நிலையில், எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்கள், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து வாடகை ஆட்டோ, செயலி மூலம் இயங்கும் வாகனங்கள் இயங்கவும், மாவட்ட ரயில் மற்றும் பேருந்து நிலையங்களிலும் வாடகை ஆட்டோ, செயலி மூலம் இயங்கும் வாகனங்களுக்கும், ஏற்கனவே முழு ஊரடங்கின் போது நடைமுறைப்படுத்தப்பட்ட அத்தியாவசிய செயல்பாடுகளுக்கும் அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது. தொற்று பரவல் தினம் தினம் காட்டுத்தீ போல அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இரவு ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் பல்வேறு அமல்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில், நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
27% இடஒதுக்கீடு வழங்குவது செல்லும் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், “மண்டல் கமிஷன் தீர்ப்புக்கு பிறகு, இந்தியச் சமூகநீதி வரலாற்றில் கிடைத்துள்ள மிக முக்கிய வெற்றி என தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். மேலும், அரசியல் சட்டம் நமக்கு அளித்துள்ள சமூகநீதி – சம வாய்ப்பு அனைத்தும் ஓரணியில் நின்று நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் துணை நிற்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் இதுவரை 9,692 பேர் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நேற்று முதல் ஒமிக்ரான் பாதிப்பு 4.36 சதவீதமாக அதிகரித்துள்ளதகவும் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“ஷியாம் சிங்கா ராய்” படம் ஒடிடி வெளியீடு
தெலுங்கில் முன்னணி நடிகரான 'நானி' நடிப்பில் மறுபிறவியை மையமாக கொண்டு பிரம்மாண்ட பட்ஜெட்டில் வெளியான “ஷியாம் சிங்கா ராய்” திரைப்படம் இன்று நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது.
'அகண்டா' திரைப்படம் ஒடிடி வெளியீடு!
பிரபல நடிகர் பாலகிருஷ்ணா நடிப்பில் தெலுங்கில் வெளியான 'அகண்டா' திரைப்படம் ஒடிடி தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது.
சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள நாய்களை முறையாக பராமரிக்க கோரி தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் நீதிபதிகள், செல்லப் பிராணிகள், தெரு நாய்கள் வளர்ப்பை முறைப்படுத்துவதற்கு விதிகள் வகுக்கப்பட வேண்டும் எனவும், விதிகளை வகுப்பதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக இருக்க வேண்டு என்றும் விருப்பம் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த வழக்கு விசாரணையை பிப்.9க்கு தள்ளி வைத்து உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
சென்னை, சட்டக்கல்லூரி மாணவர் அப்துல்ரஹீம் காவலர்களால் தாக்கப்பட்ட விவகாரத்தில், காவல் ஆய்வாளர்கள் நசீமா ,பூமிநாதன் உட்பட கொடுங்கையூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்த 9 பேர் மீது அதே காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது. தொற்று பரவல் தினம் தினம் காட்டுத்தீ போல அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இரவு ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் பல்வேறு அமல்படுத்தப்பட்டுள்ளன.
இதனிடையே கொரோனா பாதிப்பால் அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அமைச்சர் கா.ராமச்சந்திரன் குன்னூர் அருகே இளித்தொரை கிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்
சென்னை கொளத்தூர் தொகுதியில் நலத்திட்ட பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து வருகிறார்.
தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார்.
மணிப்பூர் மாநிலம் இன்றைய நிலையை அடைய பல்வேறு தியாகம் செய்த மக்களுக்கு தலை வணங்குகிறேன். காடந்த 50 ஆண்டு காலத்தில் மணிப்பூர் பல்வேறு ஏற்ற இறக்கங்களை சந்தித்துள்ளது என்றும் பிரதமர் பேசியுள்ளார்.
அபுதாபி விமான நிலைய தாக்குதலில் உயிரிழந்த 2 இந்தியர்களின் உடல்கள் பஞ்சாப் கொண்டு வரப்பட்டது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்கக் கோரிய வழக்குகளை ஜன.24க்கு ஒத்திவைத்தது சென்னை உயர் நீதிமன்றம். ஊரக உள்ளாட்சி தேர்தலில் கடைபிடிக்கப்பட்ட நடவடிக்கைகள் நகர்புற தேர்தலிலும் கடைபிடிக்கப்படும் என்று உயர் நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் உத்தரவாதம்.
கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால் தற்போது மீண்டும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. எனவே இம்முறை ஆன்லைனில் தேர்வுகள் நடத்தப்படும் என்று அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். பிப்ரவரி 1 முதல் 20க்குள் செமஸ்டர் தேர்வுகள் நடத்தி முடிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2 ஆண்டுகளில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்றும் மதுரை நகருக்குள் போக்குவரத்தை குறைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
டெல்லியில் வார இறுதி நாட்களில் அமலில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பாக, துணை நிலை ஆளுநருக்கு டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் அறிக்கை அனுப்பி உள்ளார்.
முக்கிய ஆவணங்களை வாட்ஸ் அப், டெலிகிராம் செயலிகள் மூலம் பகிர வேண்டாம். தனியார் நிறுவனங்களால் கட்டுப்படுத்தப்படும் செயலிகள், தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்பு இருக்கிறது. மேலும், அரசு அலுவலகங்களில் அலெக்ஸா, சிரி போன்ற டிஜிட்டல் சாதனங்களை பயன்படுத்த வேண்டாம் அதிகாரிகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்தில் ரூ. 49.74 கோடியில் புதிய திட்டப்பணிகளுக்கு, சென்னை, தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் முதல்வர் ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார்.
தமிழக வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பெருநகர காவல் துறையால் உருவாக்கப்பட்ட 'விடுப்பு செயலியை', முதல்வர் ஸ்டாலின் இன்று அறிமுகப்படுத்தினார். சென்னை தலைமை செயகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், டிஜிபி சைலேந்திரபாபு, சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் பங்கேற்றனர்.
ஆஸ்கார் விருதுக்கான தகுதி பட்டியிலில் நடிகர் சூர்யா, தயாரித்து, நடித்த ஜெய்பீம் படம் இடம்பிடித்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடுகிறது. இதனை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சியின் சார்பில், இளைஞர்களுக்கான தேர்தல் அறிக்கையை, பிரியங்கா காந்தியும், ராகுல் காந்தியும் இன்று வெளியிடுகின்றனர்.
முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ-க்கள், மத்திய, மாநில அரசுகளின் சின்னங்களை வாகனங்களில் பயன்படுத்தக் கூடாது. மீறினால், வாகனம் பறிமுதல் செய்யப்படும் என டிஜிபி சைலேந்திர பாபு எச்சரித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் வரும் 24ஆம் தேதி முதல், 1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான அனைத்து வகுப்புகளுக்கும், பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. மேலும் தொற்று குறைவாக இருக்கும் பகுதிகளில் மழலையர் பள்ளிகளை திறக்க அம்மாநில அரசு அனுமதித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3.47 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் தொற்றுக்கு ஒரே நாளில் 703 பேர் உயிரிழந்த நிலையில், 2.51 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை நேற்று 9,287 ஆக இருந்த நிலையில், இன்று 9,692 ஆக அதிகரித்துள்ளது.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைப்பார் கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. இதில் 400 காளைகள் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்கின்றனர். கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி, போட்டி நடைபெறுகிறது. முன்னெச்சரிக்கை கருதி 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தஞ்சையில் பள்ளி மாணவியை மத மாற்றம் செய்ய கட்டாயப்படுத்தியதாக எந்த தகவலும் இல்லை. மாணவியின் அடையாளங்களை வெளியிட்டவர்கள் மீது சிறார் பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் தஞ்சை மாவட்ட எஸ்.பி. தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 46,197 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தொற்றுக்கு 37 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ஆசியா முழுவதும், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4 வாரங்களில் அதிகரித்துள்ளது. தடுப்பூசி செலுத்தியதால் கொரோனா 3வது அலையில் உயிரிழப்பு குறைந்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார்.
பதவி உயர்வு கமிட்டி அளித்த பரிந்துரையின் பேரில், ஊர்க்காவல் படையை சேர்ந்த 479 பேருக்கு பதவி உயர்வு வழங்கி சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆணை பிறப்பித்துள்ளார்.
கோவை, செட்டிபாளையம் பகுதியில், ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார். இதில், 700 காளைகள், 300 மாடு பிடி வீரர்கள் பங்கேற்கின்றனர். கொரோனா சூழலை கருத்தில் கொண்டு பார்வையாளர்கள் இன்றி போட்டி நடைபெறுகிறது.
பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி தியாகுவை, ஹரியானாவில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர். கைது செய்த தியாகு விமானம் மூலம் சென்னை அழைத்துவரப்பட்டான்.
பார்ல் நகரில் இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது. 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா அணி முன்னிலையில் உள்ளது.
பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பாக புகார் எழுந்த நிலையில், உணவுத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.