Advertisment

Tamil News Today : பாலமேட்டில் இன்று ஜல்லிகட்டு போட்டி! சிறந்த மாடுபிடு வீரருக்கு கார் பரிசு!

Tamil Nadu News, Tamil News LIVE Updates, Tamil Nadu Omicron Latest News 14 January 2022-தமிழகத்தில் இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
New Update
Tamil News Today : பாலமேட்டில் இன்று ஜல்லிகட்டு போட்டி! சிறந்த மாடுபிடு வீரருக்கு கார் பரிசு!

T

Advertisment

மதுரை மாவட்டம் பாலமேட்டில் இன்று உலகப் பிரசித்தி பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. இதில் 700 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் போட்டியில் பங்கேற்கின்றனர். இதில் சிறந்த மாடுபிடி வீரருக்கு காரும், காளைக்கு காங்கேயம் பசுமாடும் பரிசாக வழங்கப்பட உள்ளது.

Tamilnadu News Update: தமிழகம் முழுவதும் தை முதல் நாளான இன்று பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கிராமபுறங்களில் மக்கள் அதிகாலையில் எழுந்து நீராடி, புத்தாடை அணிந்து, வீடு முற்றங்களில் பொங்கல் வைத்து சூரிய பகவானை வழிபட்டனர். நகர்புறங்களில் வசிக்கும் மக்கள் சமையலறையில் பொங்கல் வைத்து, கடவுளை வழிபட்டனர்.

வழிபாட்டு தலங்களுக்கு செல்ல அனுமதி இல்லாததால், மக்கள் தங்கள் குடும்பங்களுடன், வீடுகளிலேயே எளியாமையாக பொங்கல் கொண்டாடி வருகின்றனர்.  

Tamil Nadu News LIVE Updates

Jallikattu 2022: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மதுரை அவனியாபுரத்தில், உலக பிரசித்தி பெற்ற ஜல்லிகட்டு போட்டி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி போட்டி நடைபெறுகிறது. ஜல்லிக்கட்டு போட்டியில் 700 காளைகள், 300 மாடுபிடி வீர்ரகள் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்திற்கு ஒரு சுற்றாக காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. முதல்வர் ஸ்டாலின் சார்பில், சிறந்த காளைக்கு காரும், சிறந்த மாடுபிடி வீரருக்கு இருசக்கர வாகனமும் பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில், அமைச்சர்கள் மூர்த்தி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

 “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 22:50 (IST) 14 Jan 2022
    சென்னையில் ஒரே நாளில் 8,963 பேருக்கு கொரோனா தொற்று; 10 பேர் பலி

    சென்னையில் ஒரே நாளில்8 ,963 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பால் 10 பேர் உயிரிழந்தனர். சென்னையில் தினசரி கொரோனா எண்ணிக்கை நேற்று 8,218 ஆக இருந்த நிலையில் இன்று 8,963 ஆக உயர்ந்துள்ளது.



  • 22:26 (IST) 14 Jan 2022
    மகாராஷ்டிராவில் மேலும் 43,211 பேருக்கு கொரோனா தொற்று - 238 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு

    மகாராஷ்டிராவில் மேலும் 43,211 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 238 பேருக்கு ஒமிக்ரான் பாதிக்கப்பட்டுள்ளது.



  • 21:17 (IST) 14 Jan 2022
    தனுஷ் நடித்த மாறன் படத்தின் போஸ்டர் வெளியீடு

    இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் 'மாறன்' படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.



  • 21:15 (IST) 14 Jan 2022
    திருவண்ணாமலையில் ஜன. 17-18 தேதிகளில் பௌர்ணமி கிரிவலத்திற்கு தடை - மாவட்ட நிர்வாகம்

    திருவண்ணாமலையில் ஜனவரி 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் பௌர்ணமி கிரிவலத்திற்கு தடை விதித்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.



  • 20:33 (IST) 14 Jan 2022
    ஹெலிகாப்டர் விபத்து - விமானப்படை விளக்கம்

    கடந்த டிசம்பர் 8ம் தேதி நீலகிரியில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த விபத்துக்கு காரணம், வானிலையில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தால் ஹெலிகாப்டர் மேகங்களுக்குள் நுழைந்து எதிர்பாராத விபத்து ஏற்பட்டது என்று விமானப்படை விளக்கம் அளித்துள்ளது.



  • 20:07 (IST) 14 Jan 2022
    தமிழகத்தில் ஒரே நாளில் 23,459 பேருக்கு கொரோனா; 26 பேர் பலி

    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 23,459 பேருக்கு கொரோனா தொற்று உறுத் செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் இன்று மாநிலத்தில் 26 பேர் உயிரிழந்தனர். தமிழகத்தில் கொரோனாவிலிருந்து மேலும் 9,026 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 1.18 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் புதிதாக யாருக்கும் ஒமிக்ரான் பாதிப்பில்லை. ஒமிக்ரான் பாதிப்பு மொத்த எண்ணிக்கை 241ஆகவே உள்ளது.



  • 18:25 (IST) 14 Jan 2022
    இஸ்ரோவின் புதிய தலைவராக சோமநாத் பதவியேற்பு

    இஸ்ரோவின் புதிய தலைவராக சோமநாத் பதவியேற்றுக்கொண்டார். இஸ்ரோ தலைவராக அடுத்த 3 ஆண்டுகளுக்கு சோமநாத் செயல்படுவார்.



  • 17:53 (IST) 14 Jan 2022
    அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த மாடுபிடி வீரராக கார்த்தி தேர்வு

    அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 20 காளைகளை அடக்கிய கார்த்தி என்பவர் சிறந்த மாடுபிடி வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.



  • 17:31 (IST) 14 Jan 2022
    கேப்டவுன் டெஸ்டில் இந்தியாவை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது தென்ஆப்பிரிக்கா அணி

    கேப்டவுன் டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது. தென் ஆப்பிரிக்கா அணி டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.



  • 17:12 (IST) 14 Jan 2022
    அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் வீரர்களுக்கிடையே கடும் போட்டி

    அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் கார்த்தி என்பவர் 20 மாடுகளை அடக்கி முதலிடம் பிடித்தார். 19 காளைகளை அடக்கிய முருகன் என்பவர் 2ம் இடம் பிடித்தார். இன்னும் சில நிமிடங்களில் அதிக காளைகளை அடக்கி வெற்றி பெற்றவருக்கு கார் பரிசளிக்கப்படும்.



  • 16:49 (IST) 14 Jan 2022
    இந்தியாவில் 2.64 லட்சத்திற்கும் அதிகமான புதிய கோவிட் தொற்றுகள் பதிவு

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் வெள்ளிக்கிழமை காலை 9 மணி வரை 2,64,202 புதிய கோவிட் -19 தொற்றுகள் பதிவாகியுள்ளன. தொற்று எண்ணிக்கை நேற்றிலிருந்து 6.7 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த 239 நாட்களில் ஒரே நாளில் அதிகபட்சமாக தொற்று பதிவாகியுள்ளது. 1,09,345 பேர் குணமடைந்தனர். 12,72,073 பேர் சிகிச்சையில் உள்ளனர். அதே நேரத்தில் தினசரி தொற்று விகிதம் 14.78 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஒமிக்ரான் வைரஸ் உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகள் தற்போது 5,753 ஆக உள்ளது.



  • 16:47 (IST) 14 Jan 2022
    இந்தியா ஓபன் பேட்மிண்டன்: அரையிறுதிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து

    இந்தியா ஓபன் பேட்மிண்டன் போட்டியில் பி.வி.சிந்து, ஆஷ்மிதா சாலிஹாவை 21-7, 21-18 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.



  • 16:42 (IST) 14 Jan 2022
    இந்தியாவில் 2.64 லட்சத்திற்கும் அதிகமான புதிய கோவிட் தொற்றுகள் பதிவு

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் வெள்ளிக்கிழமை காலை 9 மணி வரை 2,64,202 புதிய கோவிட் -19 தொற்றுகள் பதிவாகியுள்ளன. தொற்று எண்ணிக்கை நேற்றிலிருந்து 6.7 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த 239 நாட்களில் ஒரே நாளில் அதிகபட்சமாக தொற்று பதிவாகியுள்ளது. 1,09,345 பேர் குணமடைந்தனர். 12,72,073 பேர் சிகிச்சையில் உள்ளனர். அதே நேரத்தில் தினசரி தொற்று விகிதம் 14.78 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஒமிக்ரான் வைரஸ் உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகள் தற்போது 5,753 ஆக உள்ளது.



  • 16:03 (IST) 14 Jan 2022
    மாடு முட்டி பார்வையாளர் உயிரிழப்பு

    அவனியாபுரம் ஜல்லிகட்டில் சீறி வந்த மாடு நெஞ்சில் முட்டியதில் பார்வையாளர் ஒருவர் உயிரிழந்தார். 18 வயது பாலமுருகன் என்பவர் மாடு முட்டியவுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். சிகிச்சை பலன் இன்றி அவர் உயிரிழப்பு



  • 15:14 (IST) 14 Jan 2022
    டெல்லி மார்க்கெட்டில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு

    டெல்லியின் காசிப்பூர் மார்க்கெட் பகுதியில் மர்ம பையில் இருந்து வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட வெடிகுண்டுகளை நிபுணர்கள் தகுந்த பாதுகாப்புடன் செயலிழக்க செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது



  • 15:11 (IST) 14 Jan 2022
    தைலாபுரத்தில் தைப்பொங்கல்

    பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வீட்டில் இன்று பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழர்களின் திருநாளான பொங்கல் விழாவையும், தமிழ் புத்தாண்டு நாளையும் கொண்டாடும் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று ட்வீட் செய்துள்ளார் தைலாபுரத்தில் தைப்பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு இன்று கொண்டாடப்பட்டது.

    தைப்பொங்கலைப் போல தமிழர்கள்

    வாழ்வில் மகிழ்ச்சியும் பொங்கட்டும்!

    தமிழர்களின் திருநாளான பொங்கல் விழாவையும், தமிழ் புத்தாண்டு நாளையும் கொண்டாடும் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். pic.twitter.com/UXR661d5sx

    — Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) January 14, 2022



  • 15:07 (IST) 14 Jan 2022
    அனைத்து மாவட்டங்களிலும் கோவிட் சிகிச்சை மையங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் - ராதாகிருஷ்ணன்

    மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். உரிய மருத்துவ பரிசோதனைகள் இல்லாமல் கொரோனா பாதித்தவரை வீட்டு தனிமைக்கு அனுமதிக்க கூடாது என்றும் அனைத்து மாவட்டங்களிலும் கோவிட் சிகிச்சை மையங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



  • 15:01 (IST) 14 Jan 2022
    சமாஜ்வாடி கட்சியில் இணைந்த பாஜகவினர்

    சமாஜ்வாடி கட்சியில் சமீபத்தில் பதவிகளை ராஜினாமா செய்த பாஜக எம்.எல்.ஏக்கள் நான்கு பேர் அகிலேஷ் யாதவ் முன்னிலையில் இணைந்துள்ளனர்.



  • 15:01 (IST) 14 Jan 2022
    அவனியாபுரம் ஜல்லிக்கட்டு 6ம் சுற்று

    அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 6வது சுற்று துவங்கியது. இதுவரை 405 காளைகள் இறக்கிவிடப்பட்டுள்ளனர். 180 காளையர்கள் பங்கேற்பு



  • 14:17 (IST) 14 Jan 2022
    தமிழ்நாட்டில் கடந்த இரு தினங்களில் டாஸ்மாக்கில் ரூ. 358.11 கோடிக்கு மது விற்பனை

    தமிழகத்தில் பொங்கல் மற்றும் இதர கொண்டாட்ட நாட்களின் போது மது விற்பனை அதிகரிப்பது வழக்கம். இந்த ஆண்டு ஜனவரி மாதம் 12 மற்றும் 13 தேதிகளில் மட்டும் மொத்தம் ரூ. 358.11 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. 12ம் தேதி அன்று 155.06 கோடிக்கும், 13ம் தேதி அன்று 203.05 கோடிக்கும் மது விற்பனை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



  • 13:13 (IST) 14 Jan 2022
    பெரம்பூர் திமுக எம்.எல்.ஏ சேகருக்கு கொரோனா தொற்று உறுதி

    பெரம்பூர் திமுக எம்.எல்.ஏ சேகருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே 3 எம்.எல்.ஏ.க்கு தொற்று உறுதியான நிலையில், மேலும் ஒருவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.



  • 13:12 (IST) 14 Jan 2022
    கூடுதலாக ₨3.73 லட்சம் கோடி செலவழிக்க அரசுக்கு அதிகாரம் அளிக்கும் சட்டம்

    நடப்பு நிதி ஆண்டில் கூடுதலாக ₨3.73 லட்சம் கோடி செலவழிக்க அரசுக்கு அதிகாரம் அளிக்கும் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்.



  • 13:11 (IST) 14 Jan 2022
    இரண்டாவது முறையாக ஜோகோவிச்சின் விசா ரத்து

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் பங்கேற்க ஆஸ்திரேலியா சென்ற செர்பிய நாட்டு டென்னிஸ் வீரரின் விசாவை ஆஸ்திரேலிய அரசு ரத்து செய்தது. போதுமான மருத்துவ ஆவணங்கள் என்று கூறி ரத்து செய்த நிலையில் ஜோகோவிச் சட்டப்பூர்வமாக பிரச்சனையை எதிர்கொண்டு ஓபன் டென்னிஸில் கலந்து கொள்ள முயன்றார். இருப்பினும் அவருக்கு இரண்டாவது முறையாகவும் விசா ரத்து செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.



  • 13:00 (IST) 14 Jan 2022
    பட்ஜெட் கூட்டத் தொடர்

    நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் முதல் அமர்வு ஜனவரி 31ம் தேதி அன்று துவங்கி பிப்ரவரி 11ம் தேதி வரை நடைபெறுகிறது. 2வது அமர்வு மார்ச் மாதம் 14ம் தேதி அன்று துவங்கி ஏப்ரல் மாதம் 8ம் தேதி வரை நடைபெற உள்ளது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.



  • 12:58 (IST) 14 Jan 2022
    பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31 அன்று துவக்கம்

    2022 -23 நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் வருகின்ற ஜனவரி 31ம் தேதி துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 1ம் தேதி அன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.



  • 12:02 (IST) 14 Jan 2022
    தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்!

    தமிழகத்தில் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.



  • 11:20 (IST) 14 Jan 2022
    தமிழிசை சௌந்தரராஜன் பொங்கல் வாழ்த்து!

    உழவுக்கும் இயற்கைக்கும் நன்றி சொல்லும் பொங்கல் நன்னாளில் அனைவரும் வளமும் நலமும் பெற்று மகிழ்ச்சி பொங்க வாழ வாழ்த்துகிறேன்- புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பொங்கல் வாழ்த்து!



  • 11:16 (IST) 14 Jan 2022
    ராஜமெளலி RRR படக்குழுவின் பொங்கல் வாழ்த்துகள்!

    விரைவில் உங்களை திரையில் பார்க்கிறோம்- RRR படக்குழுவின் பொங்கல் வாழ்த்துகள்!



  • 11:02 (IST) 14 Jan 2022
    கார்த்தி நடிக்கும் விருமன் படத்தின் முதல் தோற்றம் வெளியீடு!

    நடிகர் சூர்யாவின் 2டி புரோடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் விருமன் படத்தின் முதல் தோற்றம் வெளியானது!



  • 10:58 (IST) 14 Jan 2022
    அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: முதலிடம் பிடித்த வீரர் காயம்!

    அவனியாபுரம் ஜல்லிகட்டு போட்டியில் 11 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த மதுரை வலையங்குளம் பகுதியைச் சேர்ந்த மாடுபிடி வீரர் முருகன் காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.



  • 10:53 (IST) 14 Jan 2022
    அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் இதுவரை 14 பேர் காயம்!

    அவனியாபுரம் ஜல்லிக்கட்டி போட்டியில் இதுவரை, மாடுபிடி வீரர்கள் 8 பேர், காளை உரிமையாளர்கள் 5 பேர், பார்வையாளர் ஒருவர் என இதுவரை 14 பேர் காயமடைந்துள்ளனர். ஏற்கெனவே தயாராக இருந்த மருத்துவ குழு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து வருகிறது.



  • 10:50 (IST) 14 Jan 2022
    டெல்லி முதல்வர் பொங்கல் வாழ்த்து!

    இந்த பொங்கல் திருநாளில் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்த ஆண்டு உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் கொண்டு வரட்டும் என டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.



  • 10:16 (IST) 14 Jan 2022
    நடிகர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து!

    ஆரோக்கியத்துக்கு மிஞ்சினது எதுவுமே கிடையாது; நடிகர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து!



  • 10:15 (IST) 14 Jan 2022
    கேரள முதல்வர் தமிழில் பொங்கல் வாழ்த்து!

    சமத்துவம் நிறைந்ததோர் உலகம் உருவாக அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துகள்- கேரள முதல்வர் பினராயி விஜயன் தமிழில் பொங்கல் வாழ்த்து!



  • 10:13 (IST) 14 Jan 2022
    ஒமிக்ரான் பாதிப்பு 5,753 ஆக அதிகரிப்பு!

    இந்தியாவில் நேற்று, 5,488 ஆக இருந்த ஒமிக்ரான் பாதிப்பு, இன்று 5,753 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.



  • 10:12 (IST) 14 Jan 2022
    இந்தியாவில் 2.50 லட்சத்தை கடந்த ஒரு நாள் கொரோனா பாதிப்பு!

    இந்தியாவில் நேற்று ஒரே நாளில், புதிதாக 2,64,202 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.



  • 09:43 (IST) 14 Jan 2022
    அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் பொங்கல் வாழ்த்து!

    நன்றியுணர்வு என்னும் ஒரே நோக்கத்தோடு இயற்கைக்கு நன்றி செலுத்தும் தமிழர் திருநாள்- அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் பொங்கல் வாழ்த்து!



  • 09:41 (IST) 14 Jan 2022
    அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி பொங்கல் வாழ்த்து!

    தமிழர்கள் இல்லங்களில் அன்பும், அமைதியும், வளமும், நலமும் பெருகி மகிழ்ச்சி பொங்கட்டும் – எடப்பாடி பழனிச்சாமி பொங்கல் வாழ்த்து!



  • 09:13 (IST) 14 Jan 2022
    அவனியாபுரம் ஜல்லிகட்டு: முதல் சுற்றில் 7 காளைகளை அடக்கிய வீரர்!

    அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் முதல் சுற்று முடிவில், மதுரை வலையங்குளம் பகுதியைச் சேர்ந்த முருகன் என்ற மாடுபிடி வீரர் 7 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்தார்.



  • 08:47 (IST) 14 Jan 2022
    தமிழக மக்களுக்கு பிரதமர் மோடி பொங்கல் வாழ்த்து!

    இயற்கையுடனான நமது பிணைப்பும், நமது சமுதாயத்தில் சகோதரத்துவ உணர்வும் ஆழமாக இருக்க பிரார்த்திக்கிறேன் என கூறி, பிரதமர் மோடி, தமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.



  • 08:45 (IST) 14 Jan 2022
    தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பொங்கல் வாழ்த்து!

    தை பிறந்தால் வழி பிறக்கும்! தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பொங்கல் வாழ்த்து!



  • 08:42 (IST) 14 Jan 2022
    தமிழ் மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து!

    கொரோனா காலம் என்பதால், கட்டுப்பாடுகளுடன் பொங்கல் விழாவை கொண்டாடுவோம் என முதல்வர் ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.



  • 08:39 (IST) 14 Jan 2022
    அரசுப் பேருந்துகள் மூலம் 3 நாட்களில் 5.74 லட்சம் பேர் சொந்த ஊருக்கு பயணம்!

    சென்னையில் பொங்கல் சிறப்பு பேருந்துகள் மூலம், மூன்று நாட்களில் 5.74 லட்சம் பேர் சொந்த ஊருக்கு பயணம் செய்ததாக அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.



  • 08:39 (IST) 14 Jan 2022
    இளநிலை மருத்து படிப்புக்கான நீட் கலந்தாய்வு தேதி அறிவிப்பு!

    இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் கலந்தாய்வு, ஜனவரி 19-ஆம் தேதி தொடங்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.



  • 08:34 (IST) 14 Jan 2022
    அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: 2 டோஸ் தடுப்பூசி செலுத்திய 150 பார்வையாளர்கள் மட்டும் அனுமதி!

    மதுரை அவனியாபுரத்தில் உலக பிரசித்தி பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. கொரோனா பரவல் காரணமாக போட்டியில் பங்கேற்க உள்ளூரைச் சேர்ந்த 150 பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முக்கியமாக பார்வையாளர்கள் அனைவரும் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என கட்டாய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



  • 08:33 (IST) 14 Jan 2022
    மத்திய அமைச்சர் அமித்ஷா தமிழில் பொங்கல் வாழ்த்து!

    இன்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மத்திய அமைச்சர் அமித்ஷா, தமிழ் மக்களுக்கு , தமிழில் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.



Tamilnadu News Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment